Monday, December 10, 2007

உபுண்டு- பென் டிரைவில்

லினக்ஸ் உபயோகப்படுத்துபவர்கள் ஒன்று அதை தன் வன்பொருளில் நிறுவி அதனுடன் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்,மற்றவர்கள் அவ்வப்போது ஊறுகாய் தொட்டுக்கொள்கிற மாதிரி லைவ் வட்டு முறையில் இயக்கிக்கொண்டு இருப்பார்கள்.

இப்போது மூன்றாவது தலைமுறைக்காக பென் டிரைவில் நிறுவக்கூடிய முறையை போன வாரம் இங்குள்ள பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள்.அது உங்கள் பார்வைக்காக.

தமிழில் விளக்கலாம் என்று தான் நினைத்தேன்.இதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற எண்ணத்துடன் படத்தை மற்றும் போட்டுவிடுகிறேன்.அதுவே மிகவும் விவரமாக இருக்கும்.நன்றி: தி ஸ்டிரெயிட்ஸ் டைம்ஸ்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, October 22, 2007

உபுண்டு 7.04 ---> 7.10

சில நாட்களுக்கு முன்பு தான் வந்த இந்த மேம்பட்ட பகுதி 7.10 ஐ நிறுவலாம் என்று நினைத்து அந்த பேக்கேஜ் மேம்பாட்டை துவங்கினேன்.

முதல் அதிர்ச்சியே "இப்போது சுமார் 650 MB " அளவுக்கு தறவிரக்கம் செய்ய போகிறேன் என்றது. என்னடா இது புது வெர்சன் அவர்கள் வலையில் இருந்து இறக்கினாலே அந்த அளவு தானே இருக்கும்,நாமோ மேம்படுத்த தானே செய்கிறோம் எதற்கு இந்த அளவு தறவிரக்கம் செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் "சரி" என்று சொன்னேன்.

சுமார் 1.30 மணித்துளிகள் ஆகும் என்றது.மானிடரை மட்டும் மூடிவிட்டு வேறு பணிகளை செய்ய ஆரம்பித்தேன்.

அகலப்பட்டை இல்லாதவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். நொந்து நூலாகிவிடுவீர்கள்.

மாலை 7 மணிக்கு ஆரம்பித்து இரவு சுமார் 9 மணிக்கு முடிந்தது.அதற்க்குப்பிறகு புது வெர்ஷனை நிறுவவா என்று கேட்டது.புதிதாக நிறுவினாலேயே சுமார் 1 மணி நேரம் தான் ஆகும்,சரி தூங்குவதற்கு முன்பு முடிந்துவிடும் என்று நினைத்து அனுமதி கொடுத்தேன்.

அனுமதி கொடுத்தவுடன் அடுத்த பாம் விழுந்தது. ஆதாவது என்னுடைய கணினியை மேம்படுத்த சுமார் 6 மணி நேரமாகும் என்றது.இரவு 10.30 மணிக்கு மீதம் 4 மணி நேரம் இருக்கு என்றது.மறுபடியும் மானிட்ரை மூடிவிட்டு தூங்க போய்விட்டேன்.காலை 6 மணிக்கு பார்க்கும் போது சில விபரங்களை மாற்ற என் அனுமதி கேட்டு அப்படியே நின்று போயிருந்த்து.எப்போது நின்றது என்று தெரியவில்லை.அனுமதி கொடுத்தவுடன் இன்னும் 1.30 மணி நேரம் ஆகும் என்றது.எல்லாம் நல்ல படியாக எல்லாம் முடிந்து கணினி ஆரம்பித்து புது வர்சன் உள்ளே போனது.இப்போது கணினி திரை நல்ல ரெசலூஷனில் வந்தது. ஆனால் கம்பியில்லா இணைய இணைப்பு தான் வரவில்லை.

Ndiswrapper திரும்ப நிறுவ வேண்டும் போல் இருக்கிறது.ஒன்று மட்டும் நன்றாக உணரமுடிந்தது. மற்ற லினக்ஸை விட ஆரம்பிக்கும் நேரமும் மூடும் நேரமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, October 17, 2007

PDFEdit- pdf திருத்தி

ஆதாவது மென்பொருள் பெயர் சொல்வது போலவே இது PDF கோப்பை திருத்த லினக்ஸில் உபயோகப்படுத்தக்கூடியது.

உங்கள் PDF கோப்பை திருத்த வேண்டும் என்றால் பல வெள்ளி பணம் கொடுத்து விலை உயர்ந்த மென்பொருளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை.இதை உபயோகப்படுத்தி PDF கோப்பை மாற்றலாம்.

படிப்படியாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் இங்கு.படித்து பயன் பெருங்கள்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்கள் லினக்ஸில் கொட்டிக்கிடக்கிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, October 15, 2007

வட்டு இல்லாமல் லினக்ஸ் நிறுவ.

நான் இதுவரை லினக்ஸை தறவிரக்கம் செய்யவேண்டும்,பிறகு வட்டில் எழுத வேண்டும்,அது முடிந்தவுடன் வட்டு வழியாக ஆரம்பித்து நிறுவ வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.சற்று முன் தான் மாற்றுவழி ஒன்றை படிக்க நேர்ந்தது.அது தான்

UNetbootin

மேலே கொடுத்துள்ள மென்பொருளை நீங்கள் வின்டோசிலோ அல்லது லினக்ஸில் இருக்கும் போது தறவிரக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.நிறுவியவுடன் கணினியை ஆரம்பிக்கச்சொல்லும்.உங்கள் தேவைக்கு ஏற்ற கோப்பை நிறுவிக்கொள்ளுங்கள்.

கணினி ஆரம்பிக்கும் போது Boot பகுதியில் வந்து நிற்கும்.முதலில் ஏற்கனவே உள்ள வின்டோசும் அடுத்து நீங்கள் தேர்ந்தெடுத்த லினக்ஸ் பெயரும் வந்து நிற்கும்.அதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டியது தான்.அவ்வளவு தான் முடிந்தது.

இணையம் மூலம் சுமார் 700MB அளவுள்ள கோப்புகளை தறவிரக்கி அதுவே நிறுவிக்கொள்ளும்.மிக முக்கியமாக உங்களிடம் அதி வேக இணைய இணைப்பு இருப்பது மிக அவசியம்.

இப்படி செய்வதால் வட்டு ஒன்று இல்லாமலே லினக்ஸை நிறுவமுடிகிறது அதுவும் வின்டோஸ் / லினக்ஸ் உள்ளே இருக்கும் போதே.

படங்களுடன் இங்கு விரிவாக உள்ளது.படித்து அறிந்துகொள்ளுங்கள்.

உபுண்டுவை நிறுவ இங்கு பார்க்கவும்.

இதே மாதிரி இன்னொன்று கொடுத்துள்ளார்கள்,அதையும் பார்க்கவும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மயூரனுக்கு நன்றி

லினக்ஸில் அதுவும் உபுண்டு உபயோகப்படுத்துவர்களுக்காக மயூரன் ஒரு அருமையான பணியை செய்துகொடுத்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு புது உபுண்டு வெர்ஷன் ஆன 7.04 ஐ ஒரு பார்ட்டிஷியனில் நிறுவினேன்.முதலில் திரை முகப்பு எல்லாம் தேவைக்கு குறைவான ரிசொல்யூஷன் வந்து அதை /etc/X11 கோப்பில் உள்ளே சென்று மாற்றி சரி செய்தேன்,அடுத்து கம்பியில்லா USB அடாப்டர் பிரச்சனை.அதை சரி செய்ய 1 வாரம் ஆனது.போன பதிவில் அதைப் பற்றி சொல்லியிருந்தேன்.இது முடிந்தவுடன் இணையத்துக்கு போய் தமிழ் பக்கங்களை பார்க்கும் போது.. படிக்கவே முடியாத அளவுக்கு உடைந்து காணப்பட்டது. கூகிளான் டவரை கேட்ட போது எங்கெங்கோ சுற்றவிட்டார்.முறையான எதுவும் கிடைக்க்கவில்லை.அப்ப்போது தான் மயூரன் போட்ட பதிவு ஞாபகம் வந்தது அங்கு போய் தறவிரக்கம் செய்தேன்.அதை எப்படி நிறுவ வேண்டும் என்ற விளக்கமும் அதில் உள்ள "read me" கோப்பில் உள்ளது.

முதலில் சுருக்கப்பட்ட அந்த கோப்பை விரிவாக்கம் செய்து அதை ஒரு ஃபோல்டரில் சேமிக்கவும். பிறகு அந்த கோப்பிற்கு போய் அதில் உள்ள install.sh ஐ இரு முறை முறையில் சொடுக்கி"Run in Terminal" என்பதை தேர்ந்தெடுத்தால் போதும் எல்லாம் முடிந்து கணினியை திரும்ப ஆரம்பிக்கச்சொல்லும்.பாருங்கள் தமிழிலேயே கேட்கிறது.

முடிந்த பிறகு கணினியை திரும்ப ஆரம்பிக்கச்சொல்கிறது.இதில் ஒரு பிழை இருக்கிறது. Cancel பட்டன் காணப்படுவதில்லை.கணினியை restart பண்ணவுடன் இணையத்துக்கு போய் தமிழ் பக்கங்களை பார்த்தால்....
ஆஹா! ஆஹா! அருமையிலும் அருமை.தமிழ் எழுத்துக்கள் படிக்கக்கூடிய அளவில் நன்றாக வே தெரிகிறது,இருந்தாலும் முழுமையாக இல்லை.ஆதாவது கொம்புகள் மற்றும் சில இடங்களில் தேவையில்லாத gap இருக்கிறது.எப்படியோ தமிழ் படிக்கக்கூடிய அளவில் வருகிறதே அதுவே சந்தோஷம் தான்.தமிழுக்காக மயூரனனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, October 14, 2007

Ndiswrapper

இப்படி ஒரு மென்பொருள் லினக்ஸில் கம்பியில்லா சாதனங்களுக்கு தேவையான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிங்கையில் உள்ள சிம் லிம் ஸ்கொயர் (Sim Lim Sq) கடைத்தொகுதியை சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த USB அட்டாப்டர் கம்பியில்லா தொடர்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக சொல்லி விற்றுக்கொண்டிருந்தார்கள் அதுவும் இது லினக்ஸில் வேலை செய்யும் என்று போட்டிருந்தார்கள். முதலில் நான் எடுத்தது Linksys அடாப்டரை தான் அது சுமார் 45 வெள்ளி என்று போட்டிருந்தார்கள் ஆனால் லினக்ஸ் சப்போர்ட் பற்றி ஒன்றும் சொல்லவில்லை,இருந்தாலும் இணையத்தில் பலர் இது வேலை செய்வதாக போட்டிருந்ததால் அதைத்தான் வாங்க எண்ணியிருந்தேன். அப்போது தான் அந்த கடைக்காரர் இதை காண்பித்து விலை குறைவு அதோடிலில்லாமல் 2 வருட உத்திரவாதம் கொடுக்கிறார்கள் என்று. (போன வாரம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு இன்று வரை பதில்லில்லை).இது 35 வெள்ளி தான். வாங்கிவந்தேன்.
எப்போதும் போல் வின்டோஸில் பிரச்சனையில்லை.லினக்ஸில் அவர்கள் கொடுத்திருக்கும் வழிமுறைகள் எனக்கு சரியாக புரியவில்லையா இல்லை அந்த டிரைவரே சரியில்லையா? என்று தெரியவில்லை. வேலை செய்யவில்லை.

லினக்ஸில் இந்த வன்பொருள் வேலை செய்ய சில மென்பொருட்கள் தான் கண்ணில் பட்டது.

1. Ndiswrapper
2.Madwifi
3.Wifirader

மடிக்கணினியில் உள்ள கம்பியில்லா தொடர்ப்பு சிப்புகளுக்கு முதலில் சொன்ன மென்பொருள் மிகவும் உதவியாக இருப்பதாக் சொல்லப்படுகிறது.

இந்த Ndiswrapper யின் வேலையே வின்டோசில் உள்ள .inf & .sys கோப்பை எடுத்து லினக்சுக்காக வேலை செய்ய வைப்பதே.உங்களிடம் பல இயங்குதளம் இருக்கும் பட்சத்தில் வின் டோசில் உள்ள இந்த கோப்புகளை எடுத்து உபயோகப்படுத்திக்கலாம்.அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் வட்டில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அது மற்றொரு தலைவலி.

ஒரு வட்டில் 700 MB வரை சேமிக்க வசதியிருந்தும் அந்த நிறுவனம் வேண்டும் என்றே அதை சுருக்கி வட்டில் எழுதிக்கொடுப்பார்கள். அதை விரிவாக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் கிடைக்காது.நல்ல வேளையாக வின் டோசில் ஷார்வேர் மென்பொருள் கிடைத்தது அதன் மூலம் விரிவாக்கி அந்த கோப்புகளை எடுத்துவிட்டேன்.

செய்ய வேண்டியது இது தான்.

முதலில் ndiswrapper (1.48 version) நிறுவிக்கொள்ள வேண்டும். அது .tar.gz உடன் இருக்கும் அதை விரிவாக்கி ஒரு கோப்பில் போட்டுக்கொள்ளவும்.இப்போது டெர்மினல்க்கு போய்

cd /(எந்த இடத்தில் கோப்பு இருக்கிறதோ அதன் பெயரை கொடுக்கவும்)

இதை எப்படி செய்வது என்பதை மேலே உள்ள சுட்டியில் விரிவாக கொடுத்துள்ளார்கள்.அப்படி செய்யவும்.மிக முக்கியமாக அந்த wirless tools ஐ நிறுவவேண்டும்.

கணினியை மூடி திறந்தால் உங்கள் கம்பியில்லா தொடர்புக்கு தயராகிவிடும்.

இதை Fedora வில் நிறுவ இரண்டு நாட்கள் ஆனது என்றால் ubuntu வில் நிறுவ ஒரு வாரத்துக்கு மேல் ஆனது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, September 24, 2007

லினக்சும் வெப் கேமிராவும்

நம்ம லினக்ஸ்க்கு கொஞ்ச வருடங்களுக்கு முன்பு USB மற்றும் வெப் கேமிரா என்றால் வேப்பங்காய் போல் கசக்கும்.

எனக்கு பிடித்த ஆளுடன் தான் வேலை செய்வேன் என்று சொல்லி வேலை செய்வார்,் அதுவும் அமெரிக்கா & யூரோப் ஆளுங்க உபயோகிக்கிற மாடலுடன் தான் வேலை செய்வார் இல்லை அந்த கேமிராவுக்கும் மாத்திரம் தான் டிரைவர் கிடைக்கும்.

நான் லினக்ஸில் கை வைக்கும் போது உள் இருக்கும் மோடத்துடன் சண்டை போட்டு ஓய்ந்து போனான்,பிறகு நம்ம USB Thumb drive அதற்கு பிறகு வெப் கேமிரா.இந்த மூன்றாவது எனக்கு தண்ணி காண்பித்த மாதிரி வேறு எதுவும் காட்டவில்லை.

பல மாதங்களுக்கு முன்பு நமது சக பதிவாளர் மயூரன் இந்த வெப்கேமராவை லினக்ஸில் எப்படி முடிகிறது என்று சொல்லி ஒரு படமும் ஏற்றியிருந்தார்.

அப்போதில் இருந்து நம் கேமராவையும் எப்படியாவது லினக்ஸில் நிறுவிவிடவேண்டும் என்று முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பழைய லாஜிடெக் வெப் கேமரா கிடைத்தது.அதன் மாடல் எண் எதுவும் இல்லை. இருந்தாலும் படத்தை வைத்து வின்டோஸுக்கான டிரைவர் பிடித்து அது வேலை செய்கிறதா என்று தெரிந்துகொண்டேன். அடுத்ததாக லினக்ஸ்.

லினக்ஸை பொருத்த வரை இந்த பக்கத்தில்தான் நிறைய வெப்கேமிராவுக்கு வேண்டிய டிரைவர் கிடைக்கும்.அதையும் இரண்டாக பிரித்து 2.4. & 2.6 கெர்னல் என்று கொடுத்துள்ளார்கள். என்னுடைய லினக்ஸ் 2.6 என்பதால் அதை தரவிரக்கி நிறுவினேன்.

இதில் எப்படி வெப்கேமிரா வேலை செய்கிரதா என்று பார்க்க கீழே உள்ள மென்பொருளை ஆரம்பித்தேன்,சில செட்டிங்களை கொடுத்தவுடன் கேமிரா மூலம் என் படம் தெரிய ஆரம்பித்தது.்
இதை விண்டாஸ் ஆளுங்களுக்கு காண்பிக்க amsn என்ற மென்பொருள் உதவியாக இருக்கும் என்று நினைத்து அதையும் நிறுவினேன். நேற்று இரவு என்னுடைய தொடுப்பில் உள்ள ஒருவரும் இணையத்தில் இல்லாததால் சோதிக்க முடியவில்லை.

முடிந்த பிறகு சொல்கிறேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, September 19, 2007

Wireless in Linux

இந்த USB க்கும் லினக்ஸுக்கும் பல சமயங்களில் பொருந்தியே வராது.ரெஹேட் 7 யில் இருந்து பார்த்துக்கொண்டு வருகிறேன்.பல விஷயங்களில் நம்மை போட்டு பார்த்திடும்.இந்த மாதிரி சிறிய பிரச்சனைகளாலேயே பல புதியவர்கள் இந்த பக்கம் தலைவைத்து கூட படுப்பதில்லை.

இதற்கு முன் நான் உபயோகித்து வந்த 3G கம்பியில்லா தொடர்பை நிறுத்திவிட்டு என்னுடைய வீட்டில் உள்ள அகலக்கட்டை இணையத்துக்கு மாறலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது,எந்த விதமான வன்பொருள் லினக்ஸ்/வின்ன்ட்டோஸுக்கு ஒத்துவரும் என்று பார்த்தேன்,அதோடில்லாமல் பிற்காலத்தில் டெஸ்க்டாப்பை தூக்கிப்போட்டுவிட்டாலும் மடிக்கணினியில் உபயோகப்படுத்துகிற மாதிரி இருந்தால் நலம் என்று ஆராய்ந்துகொண்டிருந்தேன்.இப்போது இருக்கும் வீட்டில் கம்பியில்லா தொடர்பு உள்ளது அதற்கு தகுந்த மாதிரி என்னுடைய மேஜை கணினியில் PCI வைகையை சேர்ந்த கம்பியில்லா அட்டை போடவேண்டும்.இல்லாவிட்டால் USB அடாப்டர் மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.

நான் துணிந்து இறங்கியது USB அடாப்டர் பக்கம்,அதற்கு காரணம் விலை குறைவு,மடிக்கணினியிலும் உபயோகப்படுத்தலாம்.

ஒரு வாரம் முன்பு இங்குள்ள சிம் லிம் ஸ்கொயர் கடைத்தொகுதிக்கு போய் ஒவ்வொரு கடையாய் ஆராய்ந்துகொண்டிருக்கும் போது ஒரு கடையில் இருந்த சிப்பந்தி நான் எடுத்த Linksys அடாப்டரை பார்த்துவிட்டு இதைவிட விலை குறைந்த அடாப்டர் உள்ளது பார்க்கிறீர்களா? என்று சொல்லி அதன் விபரங்களை சொன்னார்.

விலை குறைவாக இருந்தது அத்துடன் அதன் அட்டையில் இது லினக்ஸ்ஸில் வேலை செய்யும் என்று போட்டிருந்தது. சரி என்று வாங்கிக்கொண்டேன்.

அதற்கான வின்ன்டோஸ் மென் பொருளை போட்டபோது கொஞ்ச நேரம் பிகு பண்ணிவிட்டு வேலை செய்ய ஆரம்பித்தது.

அடுத்து லினக்ஸில்..

கொடுத்த வட்டில் என்ன செய்யவேண்டும் என்று விரிவாக கொடுத்திருந்தார்கள் எல்லாம் சரியாக செய்தும் அந்த மென்பொருளை நிறுவ முடியவில்லை,கணினி மொழில் பிழைச்செய்து வந்து நின்றுவிட்டது.லினக்ஸில் ஒரு வன்பொருள் வேலைசெய்ய அதன் சிப் பெயர் தெரிந்தால் குழுமம் மூலம் நமக்கு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வன்பொருளுடன் வந்த வட்டில் பல கோப்புகளின் பெயர்கள் அதன் சிப் பெயரில் இருந்ததால் மிக எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.அதன் பிறகு குழுமத்தில் போய் தேடிய போது பல விபரங்கள் கிடைத்தது அதில் ஒன்று தான் இந்த USB அடாப்டருக்கு உள்ள Firmware ஐ இறக்கி அதை /usr/lib/firmware யில் போடவேண்டும் என்பது.
அதையும் செய்துவிட்டு பார்த்தால்...ஹூகும் சரியாக வரவில்லை.

கடந்த இரண்டு நாட்களாக பல குழுமத்தில் கேள்வி கேட்டும் எதுவும் சரியாக வரவில்லை.கடைசியாக நேற்று இரவு முயற்சித்த போது பல முறை கடவு எண்ணை கொடுத்த போது ஒரு முறை தொடர்பு ஏற்படுத்திக்கொண்டது.

முதல் முறையாக ஒரு USB அடாப்டர் லினக்ஸில் அதுவும் கம்பியில்லா தொடர்பு மூலம் வேலை செய்வதை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

கீழே அடாப்டரின் படம்.இந்த அடாப்டர் சிங்கை வெள்ளி 35 க்கு வாங்கினேன் பிறகு தான் தெரிந்தது அமெரிக்காவில் இது சுமார்16 சிங்கப்பூர் வெள்ளிக்கு கிடைக்கிறது என்று.இதுக்காக அமெரிக்கா போக முடியுமா?

என்ன இருந்தாலும் 100% க்கு மேலா வைத்து விற்பது!! கொடுமைதான்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, June 20, 2007

இரட்டை இயங்கு தளம்

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
இரட்டை இயங்குதளத்தை எப்படி நிறுவுவது என்று சொல்லிக்கொடுக்கிறார்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பிரிண்டர் டிரைவர்

சில சமயங்களில் லினக்ஸில் பிரிண்டரை வேலை செய்ய வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.இந்த குறையை நிவர்த்தி செய்ய பல பிரிண்டர்களின் டிரைவரை வெளியிட இருக்கிறார்கள்.

இங்கு போய் பார்க்கவும்.
மேல் விபரங்கள் கிடைக்கும்.

பல லினக்ஸிலும் வேலை செய்யும் படி அமைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

முயலுங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, June 09, 2007

லினக்ஸில் தமிழ்-2

போன பதிவில் லினக்ஸில் எப்படி தமிழில் உள்ளீடு செய்வது என்று வரியில் எழுதியிருந்தேன்.அது ஒருவருக்கு சரியாக வரவில்லை என்று சொல்லியிருந்தார்.அவர் குறையை நீக்க படத்துடன் கொடுத்துள்ளேன்.இன்னும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

நீங்கள் பார்பது பெடோரா 7 வில் எடுத்த படங்கள்.மற்ற லினக்ஸில் கொஞ்சம் வேறுபடும் அவ்வளவு தான்.

முதலில் ---> Application ----> Add/Remove software


மேலே உள்ள படத்தில் பாருங்க மொழிகள் இடது பக்கமும் அதற்கான தேர்வுகள் வலது பக்கமும் உள்ளது.தமிழை தேர்ந்தெடுங்க.இந்த Packager Manager வேலை செய்ய இணைய இணைப்பு தேவைப்படும்.இந்த மென்பொருட்கள் உள்ள சர்வரை அடைந்து அங்கு என்னென்ன மென்பொருட்கள் இருக்கு என்பதை காண்பிக்க இணையம் வேண்டும்.மறக்காமல் Apply ஐ சொடுக்கினால்,அதுவே நிறுவிக்கொள்ளும்.அதன் பிறகு

System--->Preferences----> Presonal ---> Input Method அதன் படம் கீழேஉடனே அதற்கு உண்டான பெட்டி கீழே காண்பித்த மாதிரி திறக்கும்.அதில் SCIM என்பதை தேர்ந்தெடுங்கள்.


இதை மூடிய பிறகு, இப்போது Desktop மேல் வலது பக்கம் பாருங்கள் சின்னதாக ஒரு கீ போர்ட் தெரியும் அதை ஒரு முறை சொடுக்கினால்,கீழே உள்ள மாதிரி விரிவடையும்.தேவையான வற்றை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்ய வேண்டியது தான்.இதே முறையில் Open Office யில் எதில் வேண்டுமென்றாலும் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

இணையத்தில் தமிழில் உள்ளீடு செய்ய வேண்டுமா அதுவும் பயர்பாக்ஸில் செய்ய வேண்டுமா?
Firefox- Add on க்கு போய் தமிழ் கீ என்று தேடினால், திரு.முகுந்த் எழுதிய கீ கிடைக்கும்.இதை நிறுவுங்கள்.அதற்கு பிறகு பயர்பாக்ஸை மூடி திறங்கள்.

திறந்த பிறகு மவுஸில் வலது பக்கம் சொடுக்கவும்.கீழே காட்டியுள்ள மாதிரி கிடைக்கும்.அஞ்சல் முறையை தேர்ந்தெடுத்தால் Phonetic முறையில் தட்டச்சலாம்.
எங்கும் எதிலும் தமிழை புகுத்துவோம்... வாருங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, June 07, 2007

லினக்ஸில் தமிழ்

போன பதிவில் புதிதாக வெளியிடப்பட்ட பெடோரா 7 பற்றி சொல்லியிருந்தேன்.

பயர்பாக்ஸ்ஸில் தமிழ் உள்ளீடு செய்ய நம் நண்பர் திரு முகுந்த்தின் தமிழ் கீயை நிறுவினால் போதும்,அதுவே ஓபன் ஆபீஸில் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் உபுண்டு லினக்ஸில் மிக சிரமப்படவேண்டும்.

அதுவே பெடோராவில் எப்படி செய்வது என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது,ஆர்வம் உள்ளவர்கள் முயலலாம்.

svenkatesan என்பது நான் தான்.:-))
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பெடோரா 7

போன 31ம் தேதி வெளியிடப்பட்ட புது மேம்படுத்தப்பட்ட பொதினம் ஃபெடோரா 7.
மிக அருமையான முகப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான ஒன்று
உங்கள் தேவைக்கேற்ப இந்த லினக்ஸை மாற்றி அமைத்து அதை லைவ் வட்டாக வேண்டும் இடத்துக்கு எடுத்துச்செல்லாம்.கணினியில் நிறுவி அவஸ்தப்படவேண்டாம்ஆதற்காக பிரத்யோகமாக ரிவைஸர் என்ற மென்பொருளை இலவசமாக கொடுக்கிறார்கள்.
இங்கு
இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?
ஆர்வம் உள்ளவர்கள் முயலுங்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நிறுவினேன்,படங்களுடன் பிறகு பதிவுகிறேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, April 19, 2007

வேர்ட் பிரஸ்ஸில் தமிழ்

இது லினக்ஸ் சம்பந்தப்பட்டது அல்ல.
பல வலைப்பதிவர்கள் வேர்ட் ப்ரெஸ் உபயோகித்து வலை பதிகிறார்கள்,அவர்கள் தங்கள் பக்கத்திலேயே தமிழில் பின்னூட்டம் இட இந்த பிளக் இன் உபயோகமாக இருப்பதாக இந்த வலைத்தளம் சொல்கிறது.
முயற்சித்து பாருங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Fedora வில் மென்பொருள்

Fedora என்பது லினக்ஸ்ஸில் இருக்கும் பல பதிவுகளில் ஒன்று.இது முதன் முதலில் எனக்கு தெரிந்து போது RedHat 7 என்று வர ஆரம்பித்து பிறகு Fedora Core 1~6 வரை வந்துவிட்டது.இப்போது Fedora 7 டெஸ்ட் பதிவு 3 வரை ஓடிக்கொண்டிருக்கிறது.
முதலில் இருந்தே உபயோகப்படுத்திவருவதால் எனக்கு மிகவும் பிடித்த லினக்ஸ்ஸில் இதுவும் ஒன்று.

Fedora வில் மென்பொருள் நிறுவுதல் பற்றி பார்ப்போம்.

போன பதிவில் உபுண்டு லினக்ஸ்ஸில் மென்பொருள் நிறுவுவது பற்றி சொல்லியிருந்தேன்.
இப்போது பெடோராவில் எப்படி என்று பார்ப்போம்.
ஆங்கிலத்தில் இதன் அரிச்சுவடி இங்குள்ளது.
உங்களுக்கு கமேன்ட் லயினின் மூலம் நிறுவ அதிக விருப்பம் இருந்தால் அதற்கு ஏற்ற மென்பொருள் இந்த இயங்குதளத்தின் கூடவே வருகிறது.அதற்கு YUM (yello Dog updater,Modofiyer) என்று பெயர்.இதன் பயன்பாட்டை ஆரம்பம் முதலே அவதானித்து வந்துள்ளேன்.இதில் YUM மாத்திரம் மட்டும் அல்ல வேறு சில மென்பொருட்களும் உள்ளது.(உ-ம்)WGET,apt-get,uptodate.

நாம் YUM ஐ பார்ப்போம்.

இந்த கமென்ட் லயினை மேம்படுத்தி கிராபிகள் முறைக்கு ஏற்றவாறு "Yum Extender" என்று பெயரிட்டுள்ளார்கள்.இதுவும் Snaptic மாதிரி தான்.

ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாமா?

சிஸ்டம் டூல் --> டெர்மினல் போய் திறக்க வேண்டும்.இது நமது வின்னோஸில் உள்ள டாஸ் மாதிரி விண்டோ திறக்கும்.
அதில் உங்கள் பெயரோடு வந்து கடைசியில் கர்சர் நின்றுகொண்டு நிற்கும்.


ஆதாவது உங்கள் கட்டளைக்காக காத்திருக்கிறது.

என் கணினியில் எவ்வளவு மென்பொருள் உள்ளது என்பதை காண்பிக்க

YUM LIST ALL என்று அடித்தால் போதும்,உள்ளே இருக்கும் அவ்வளவையும் கொட்டி காண்பித்துவிடும்.

மென்பொருளை நிறுவ அட்மினிஸ்ட்ரேட்டர்(லினக்ஸ்ஸில் அதற்கு Root அக்கவுன்ட் என்று பெயர்) அனுமதி தேவை அதனால்,

su - (ஆதாவது சூப்பர் யூசர்,ஒரு ஸ்பேஸ் அதற்குப்பிறகு மைனஸ்) Enter,

உங்கள் கடவு எண்ணை கேட்கும்.

சரி,ஏதோ ஒரு மென்பொருளை நிறுவ.. உதாரணத்துக்கு மீடியா பிளேயர்.

yum install mediaplayer

நிஜமாக அவ்வளவு தாங்க.

இப்படி கமென்ட் கொடுத்தவுடன் அது என்ன பண்ணும் அதனுள் ஏற்கனவே உள்ள Repositries க்கு போய் தேவையான மென்பொருளை பார்த்து,ஒரு லிஸ்ட் போட்டு கீழ்கண்ட மென்பொருட்கள் நிறுவ வேண்டியுள்ளது என்றும் YES or No என்று கேட்க்கும்.Y அடித்து சம்மதம் சொன்னால் தேவையானவற்றை நிறுவி,முடிந்த செய்தியை கொடுக்கும்.

எனக்கு எப்படி தெரியும் என்ன மென்பொருள் இருக்கிறது ? எங்கு கிடைக்கிறது ? நல்ல கேள்வி தான்.

இங்கு பலதரப்பட்ட மென்பொருட்கள் கொட்டிக்கிடக்கிறது,உங்கள் தேவையை தேடுதல் மூலம் கண்டுகொள்ளலாம்.

பல மென்பொருட்களுக்கு கணினியை மூடி திறக்கவேண்டிய அவசியம் இருக்காது.

எனக்கு இந்த கமென்ட் லயின் சரிப்படாது படம் போட்ட மாதிரி இருந்தா நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள்.

டெர்மினலில் ஒரே ஒரு தடவை yum install yumextender போட்டு Enter ஐ தட்டிடுங்க.கொஞ்ச நேரத்தில் அந்த மென்பொருள் நிறுவப்பட்டுவிடும்.

முடிந்த பிறகு, நீங்க பட முறையில் மென்பொருளை நிறுவலாம்.

கீழே பாருங்க.என்னங்க ஏதோ புரிந்த மாதிரி இருக்கா,புரியவில்லை என்றால் அதற்கு நான் தான் காரணம்.:-))

கேள்வி இருந்தா கேளுங்க எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்.இதில் நானும் கத்துக்குட்டி தான்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, March 16, 2007

லினக்ஸில் மென்பொருள்

புதிதாக லினக்ஸ் நிறுவும் பலருக்கு தங்களுக்கு தேவையான மென்பொருளை எங்கிருந்து பெருவது அதை எப்படி நிறுவுவது என்ற குழப்பம் இருக்கும்.

நான் 5 வருடங்களுக்கு முன்பு நிறுவிய போது எல்லாமே கன்சோல் மூலமாக இருந்தது.இப்போது பல மாற்றங்கள் வந்து மிக எளிதாக மாறிவிட்டது.

லினக்சஸில் பல மாதிரிகள் இருப்பதால் மிக சுலபமாக உள்ள உபுண்டு லினக்ஸில் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

முதலில், கிடைக்கும் பல மென்பொருட்கள் .EXE ஆக கிடைக்காது.பைனரி மோடாகவோ அல்லது அந்தந்த லினக்ஸ் வகைக்கேற்றவாறு கிடைக்கும்.
உதாரணமாக:
பெடோரா: .RPM ஆகவும்
உபுண்டு : .DEP ஆகவும் கிடைக்கும்.
இது எங்கு கிடைக்கும்?
இது இருக்கும் இடத்துக்கு பெயர் :Repositries (தமிழாக்கச் சொல்லாதீர்கள்!!)
சரி உபுண்டுவில் பார்ப்போம்,
படத்தை பார்க்கவும்,

இதில் Synaptics Package Manager என்று இருக்கும் இடத்துக்கு போய், சொடுக்கவும்.

அது பிறகு இப்படி விரியும்.
இதில் ஒவ்வொரு தலைப்பின் வலது பக்கத்தில் விபரமாக கொடுத்திருப்பார்கள்.

எது வேண்டுமோ அதை சொடுக்கி பிறகு வலது சொடுக்கு மூலம் "Mark for Installation" என்பதை தேர்தெடுக்க வேண்டியது தான்.

பல மென்பொருள் நிறுவுதலுக்கு கணினியை Restart செய்யவேண்டிய அவசியமில்லை.

மிக முக்கியமாக "இணைய இணைப்பு" இருக்கா என்று பாருங்கள்.

சரி என்னிடம் இணைய இணைப்பு இல்லை,வேறு கணினி மூலம் சேமித்து என் கணினிக்கு கொண்டு வரமுடியுமா?

முடியும்.

அதற்கு முன்னால்..

லினக்ஸில் ஒரு மென்பொருள் நிறுவ அதனுடன் ஒத்திசைக்கப்பட்ட துணை மென்பொருட்கள் உங்கள் கணினியில் இருக்க வேண்டும்.அது இல்லாவிட்டால் பிழை செய்தியுடன் நின்று போய்விடும்.

உபுண்டு லினக்ஸ் வட்டு வெறும் 700 MB அளவு தான்,அதனால் மென்பொருள் நிறுவுவதற்கு தேவையான அவ்வளவு மென்பொருட்கள் அதனுள் இருக்காது.அதே FEDORA CORE எடுத்துக்கொண்டால் அதன் கொள்ளலவு கிட்டத்தட்ட 3 GB. இதில் தேவையான கம்பைலர் இருக்கும்.

ஆமாம் இந்த பேக்கேஜ் மேனேஜர் என்ன வேலை செய்கிறது?கேள்வி கேட்க கேட்க லினக்ஸில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.ஆதாவது இருக்கும் சில Repositries உள்ளே இருக்கும் மென்பொருளையும்,உங்கள் கணினியில் இருக்கும் மென்பொருளுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது.மேம்படுத்த வேண்டியவை/நிறுவியவை எவை என்பதையெல்லாம் பட்டியல் போட்டு காண்பித்துவிடும்.

இப்படி தரவிரக்கம் செய்வது தவறா?

இன்று வரை இல்லை.

ஏன் நம்மிடையே கூட சிலர் லினக்ஸை பற்றி அவ்வப்போது எழுதிவருகிறார்கள்.

அவர்களில் சிலர்
மயூரன்
மா.சிவக்குமார்

ஆர்வம் இருப்பவர்கள்,உங்கள் கணினியில் நிறுவிப் பார்கலாமே!!.

அடுத்த பதிவில் FEDORAவில் எப்படி என்று பார்ப்போம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, March 14, 2007

டெல்(Dell) லினக்ஸ் ??

ஏற்கனவே எழுதிவைத்திருந்த பதிவு காணாமல் போய்விட்டதால் மறுபடி பதியவேண்டியதாகி விட்டது.
Dell ஐ பற்றி தான் நம் எல்லோருக்கும் தெரியுமே,அவுங்க திரும்பவும் அவுங்க கணினியில் லினக்ஸை போடலாமா என்று யோசிக்கிறார்களாம்.
ஏற்கனவே ஒரு முறை போட்டு திரும்பிவிட்டதாக கேள்வி.
அவர்களுடைய உபயோகிப்பாளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் பலர் விரும்புவதாக தெரிகிறது
முந்தாநாள் வந்த மின் அஞ்சல் உங்கள் பார்வைக்கு

Dell to Linux users: We'll think about it

By Phil Hochmuth

Dell says it is seriously considering requests from users to pre-load its laptops and desktop computers in the factory with versions of the Linux operating system.

The potential change in the company's stance comes a few weeks after a torrent of comments were posted on Dell's Web 2.0-ish blog site dellideastorm.com. The site emulates the Digg.com model of community-rated articles, where readers of the site can submit ideas, and then others can vote on which ones are the best - and as a result get promoted to the top of the list.

Since dellideastorm.com went live, a very loud chorus of users have called for Dell to put Linux on its PCs and laptops - a practice it stopped several years ago. Tens of thousands of comments on the site have called for Dell to support such platforms as Fedora, Ubuntu, and OpenSUSE - free Linux versions which do not require subscriptions for support. Now Dell appears to be listening. Reports last week said that Dell is "listening to what customers are saying about Linux and taking it into consideration."

FreedomHEC, the Linux device driver conference, helps you get Linux hardware support fast, with help directly from the core kernel team. Open up new markets for your product in devices, servers, and anywhere else that uses the fast-growing Linux operating system.

With Microsoft Windows Vista hitting the market now, Dell is in a tricky situation. Certainly, it's customer support centers are getting calls from people needing help with the latest Windows operating system. Perhaps Dell is nervous about supporting another desktop operating system at this time. (Although this would be an unlikely issue, as many Linux users fall into the self-help IT support crowd.) The question is, how long does Dell keep dellideastorm.com up, if it is reluctant to act on the most popular idea on the site?

கூடிய சீக்கிரம் டெல் கணினிகளில் லினக்ஸை பார்கலாம்.வைரஸ் அவ்வளவாக இல்லாத ஒரு இயங்குதளத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
வரவேற்பு எப்படி இருக்கும் என்று போகப்போக தான் தெரியும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, March 06, 2007

ஸ்கிரிப்ட் என்றால் என்ன?

என்னுடைய போன பதிவில்,லினக்ஸ்ஸில் USB மோடம்(கம்பியில்லா) மூலம் இணையத்தை அடைவதைப்பற்றி சொல்லியிருந்தேன்.

இந்தியாவில் இன்னும் இது வராததால் அவ்வளவு பின்னூட்டம் வரவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.:-))

சும்மா தமாசுக்குங்க.

வாங்க மேலே படிக்க..

இதைப்பற்றி பல Forum ங்களில் படிக்கும் போது,ஒரு சிலர் நான் சிம்பிளாக ஒரு ஸ்கிரிப்ட் எழுதினேன்,இப்போது நன்றாக வேலை செய்கிறது என்று சொல்லியிருப்பார்கள்.புதிதாக தெரிந்துகொள்பவர்களுக்கு மண்டையை பிச்சிக்கொள்ளவேண்டும் போல் இருக்கும்.

என்ன ஸ்கிரிப்ட்?அது எப்படி எழுத வேண்டும்,அதை எங்கு வைக்கவேண்டும் இப்படி பல கேள்விகளை ஒருவரிடம் இங்கு கேட்டிருந்தேன்.

ஆர்வம் உள்ளவர்கள் மேலே சொடுக்கவும்.

அதை அமுல் படுத்தியவுடன் வந்த ஸ்கிரீன் ஷாட் கீழே பாருங்கள்.

படத்தை பெரிதாக்க அதன் மேல் சொடுக்கவும்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, March 05, 2007

கம்பியில்லா தொடர்பு.

இங்கு சிங்கையில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கம்பியில்லா இணையத்தொடர்பு என்ற முறையை M1 என்ற நிறுவனம் கொண்டுவந்தது.சிங்கப்பூரில் எந்த இடத்தில் இருந்தும் எவ்வித கேபிள் இல்லாமல் இணையத்தில் இணையலாம்.
இதில் பதிவு செய்துகொண்டவர்களுக்கு 3விதமான கருவியில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள சொன்னார்கள்.
1.USB மோடம்- ஒரு சின்ன Phone போல் உள்ளது.இதைப்பற்றி இங்கு சொல்லியிருந்தேன்.
2.PCMCIA -அட்டை,இது மடிக்கணினி வைத்திருப்பவர்களுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும்.
3.ஒரு சின்ன அலுவலகம் அல்லது பல கணினிகள் இணைக்கும் வச்திக்காக ரூட்டர் மாதிரி ஒரு சாதனம்

என்னுடைய தேவைக்கு தகுந்த மாதிரி என்க்கு தேவைப்பட்ட USB மோடம் வாங்கிக்கொண்டேன்.இது XP,2000 மற்றும் ஆப்பிள் கணினிகளில் நிறுவ எந்த வித மென்பொருளும் தேவைப்படாது.இந்த வன்பொருளை இணைக்கும் போது தானாகவே அதை நிறுவிக்கொள்ளும்.மேக் சிஸ்டத்துக்கு மாத்திரம் வட்டு கொடுத்துள்ளார்கள்.

நமக்கு எது இருந்தாலும் நம் லினக்ஸில் அது வேலை செய்யாவிட்டால் தூக்கம் வராதே!தேடல் தொடங்கியது.நமது கூகிள் ஆண்டவரிடம் கேட்டதும்,உபுண்டுவில் இதை வேலைசெய்கிறது என்ற விஷயமும் அதை எப்படி செயல்படுத்துவது என்ற விபரமும் இங்கு போட்டிருந்தார்கள்.

பல முயற்சிக்கு பிறகு எப்படியோ வேலை செய்ய ஆரம்பித்தது.2 நாட்கள் வேலை செய்யதபிறகு,3 நாளில் இருந்து பிரச்சனை ஆரம்பித்தது.

பல நாள் தேடலுக்கு பிறகு ஒரு சின்ன உபாயம் கிடைத்தது,அதை அமல்படுத்தியபிறகு அழகாக வேலைசெய்கிறது.

இந்த USB மோடம் முதலில் உணரப்படும் போது ஒரு Mass Storage ஆகவும்,சிடி வட்டாகவும் தெரியும்.
சிடி வட்டை வலது சொடுக்கி தூக்கிவிடவேண்டும்.
மற்றதை "X" போட்டு மூடிவிடவேண்டும்.
அடுத்து,
கீழே உள்ள ஒரு சின்ன பைலை தரவிரக்கம் செய்துகொள்ளவும்.அதை திரைமுகப்பிலேயே வைத்துக்கொள்ளலாம்.
huaweiAktBbo-i386.out

அப்புறம் என்ன படத்தில் உள்ள மாதிரி செய்தால் இணையத்தின் உள்ளே போகலாம்.

மிக முக்கியமாக உங்கள் wvdial.conf நீங்கள் வாழும் தேசத்துக்கு தகுந்த மாதிரி மாற்றவேண்டும்.


.


இப்படி உபுண்டுவில் வேலை செய்யும் மோடம்,Fedora வில் மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது,இருந்தாலும் வழி பிறக்க வெகுநாள் இல்லை என்றே தோனுகிறது.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது,மற்றவற்றை காட்டிலும் உபுண்டு ஒரு 2 படி மேலே உள்ளது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, February 18, 2007

சிடி ரோம் இல்லையே!!

லினக்ஸ் உபயோகிப்பவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் தேவைப்படும் போது அதனதன் Forum உள்ள இடத்துக்கு போய் விளக்கம் தேடுவார்கள்.

சமீபத்தில் உபுண்டு 6.10 Alternate வட்டுக்குரிய பைலை தரவிரக்கம் பண்ணி பிறகு வட்டுக்கு மாற்றினேன்.அதை ஏற்கனவே இருந்த பழைய வெர்ஷன் மீது நிறுவினேன்.

எல்லாம் முடிந்து திறந்தால் முகப்பு மட்டும் வரை போய் திரும்ப லாக் இன் பக்கத்துக்கு வந்து உயிரைவாங்கிக்கொண்டிருக்கிறது.

இதற்கு ஏதாவது வழியிருக்கா? என்று தேடிக்கொண்டிருந்தபோது, இப்படிப்பட்ட கேள்வியும் பதிலும் எவ்வளவு நகைச்சுவையாக இருக்கு பாருங்க.

சுட்டி இங்கே.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, February 02, 2007

லினக்ஸ் முருகா!!

தைப்பூச ரிலீஸ்

யார் யாரோ லினக்ஸ் பேர் வைத்திருக்கார்கள் நமது திருமுருகக்கடவுள் பெயரில் இல்லாவிட்டால் எப்படி?

இப்பத்தான் உள்ளே நுழைதிருக்கார் போலும் இன்னும் அறுபடைவீடுகள் கட்டப்படவில்லை.

கட்டிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

முருக பக்தர்களே அதுவும் லினக்ஸ் மேல் பற்றுதல் உள்ளவர்கள் உள் நுழைந்து அருள் பெறலாம்.

லினக்ஸ் முருகனுக்கு அரோகரா!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...