Showing posts with label மேன்பொருள். Show all posts
Showing posts with label மேன்பொருள். Show all posts

Sunday, August 02, 2009

பட அளவை மாற்ற

லினக்ஸில் ஒரு கோப்பின் உள்ளே மிகப்பெரிய அளவில் ஒரு 100 படம் இருக்கு என்று வைத்துக்கொள்வோம் அதை அத்தனையும் வலையில் ஏற்றனும் என்றால் கொஞ்சம் கஷ்டம்.முதலில் அதிக வேகமுள்ள இணையம் வேண்டும் அதோடில்லாமல் தேவையில்லாமல் மிக அதிக அளவுள்ள படங்களை இணையத்தில் ஏற்றுவதால் அவ்வளவு பிரயோஜனம் இலை.

இப்படி இருக்கிற 100 படங்களை கொஞ்சம் அளவை குறைத்தால் வலை ஏற்றுவதற்கும் இணைய வேகமும் நம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் அல்லவா?ஒவ்வொரு படத்தையும் ஏதோ மென்பொருளில் ஏற்றி அளவை குறைத்து திரும்ப சேமித்து என்று வேலை அதிகம் வைக்கும்.வின்டோஸ் என்றால் பல மென்பொருட்கள் இருக்கும் ஆனால் லினக்ஸில் என்ன செய்வது?ரொம்ப ரொம்ப சுலபம் "ஒரே ஒரு வரி" அத்தனையும் சில வினாடிகளில் முடித்து விடலாம்.அதை எப்படி என்று பார்கலாமா?

உதாரணத்துக்கு உங்கள் Picture கோப்பில் படங்கள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம்.

cd /home/Pictures என்று டெர்மினலில் தட்டச்சு செய்யுங்கள்.இதன் மூலம் நீங்கள் அந்த கோப்பின் வாசலில் இருப்பீர்கள்.

அதற்கு மேல் கொடுக்கப்போகும் கமென்டுக்குள் முன்னால் Synaptic Package Manager மூலம் உங்கள் கணினியில் Image Magick என்ற முன்பொருள் நிறுவப்பட்டிருக்கா என்று சோதனை செய்துகொள்ளவும்.இல்லை என்றால் நிறுவிக்கொள்ளவும்.நிறுவிய பிறகு

mogrify -resize 1024 *JPG (படம் jpeg or jpg or JPG ஆக இருக்கக்கூடும்) அதற்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளவும்.

அவ்வளவு தான் முடிந்தது.சில நொடிகளில் எல்லா படங்களும் மாற்றப்பட்டிருக்கும். நான் பண்ண தவறுகளை கீழே உள்ள படத்தை சொடுக்கி பாருங்கள்.

From லினக்ஸ்

Friday, April 24, 2009

லினக்ஸில் Bug?

வரும் படங்களை பாருங்கள்..
Bit Torrent மூலம் தரவிரக்கம் செய்யும் போது எடுத்தது.தரவிரக்கம் வேகம் MB யில் இருக்கு அதுவும் ஒரு செகண்டுக்கு.
பிழையாக செய்தி காண்பிக்கிறது - 1 நிமிடம் மட்டுமே பாக்கி என்று 20 நிமிடமாக காட்டிக்கொண்டிருக்கிறது.
இது லினக்ஸின் பிழையா அல்லது அந்தமென்பொருளின் பிழையா என்று தெரியவில்லை.



கொஞ்ச நேரம் கழித்து,


Monday, March 30, 2009

Test for Picture Zoom

Test (இந்த முயற்சி - கடைசி படத்தில் மட்டுமே)






கீழே படத்தின் மீது சொடுக்கவும்.







test

Thursday, March 26, 2009

லினக்ஸின் பன் முகம்

தொடர்ந்து ஆச்சரியங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் லினக்ஸில் இது தான் நான் சமீபத்தில் எனது கணினியில் செய்தது.
என்னுடைய திரையை கனசதுரமாக மாற்றி சுற்றிச் சுற்றி பல திரைகளில் ஒரே சமயத்தில் வேலை பார்க்கலாம்.





இதை நிறுவ Compiz என்ற மென்பொருளை நிறுவ வேண்டும்,உபுண்டுவில் இருப்பவர்கள் இதை Synaptic Package Manager மூலம் நிறுவிக்கொள்ளலாம்.இதை நிறுவிய பிறகு எல்லா Application உம் காகிதம் போல் இழுத்து/வளைத்து எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.இதனுடன் கூடிய செட்டிங்க்ஸில் தேவையான மாறுதல்களை செய்து உங்கள் கணினி திரையை அழகுபடுத்தலாம்.

அடுத்து..
இந்த மேக்(MAC) கணினியை நான் ஒரே ஒரு முறை தான் உபயோகித்துள்ளேன் அதில் பல விஷயங்கள் இருந்தாலும் முகப்பில் வரும் Application Task Icons தான் மிகவும் பிடித்திருந்தது.அதே முறையை லினக்ஸிலும் கொண்டுவர முடியும் என்று படித்திருந்தாலும் அதை முயலாமல் இருந்தேன்.அந்த யோஜனை இன்று தோன்றியதால் இங்கு சொல்லிய படி செய்தேன்,மிக எளிதாக வந்துவிட்டது.ஆர்வம் உள்ளவர் முயன்றுபார்கலாம்.

Saturday, February 07, 2009

PDF- Edit

இந்த வின்டோஸில் இல்லாத மென்பொருளே கிடையாது போலும் இருந்தாலும் அதை ஒவ்வொன்றாக வாங்கி வாங்கியே நம்முடைய கணினி வாங்கிய செலவு போல் 2 மடங்குக்கு வாங்கவேண்டி வரும்.சில மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் அது நம் தேவையை பூர்த்தி செய்யுமா? என்று வாங்கும் முன்பே சொல்ல முடியாது,என்ன தான் முன் பதிவு மென்பொருள் உபயோகித்து பார்த்துவிட்டு வாங்கினாலும் பிற்கால தேவைக்கு ஈடு கொடுக்கும் என்ற உத்திரவாதமும் இருக்காது.இப்படிப்பட்ட நிலையில் லினக்ஸுக்கு மாற்று இது வரை என் கண்ணில் படவில்லை.

ஒரே ஒரு உதாரணம் பார்க்கலாம்.

PDF- இவ்வகை கோப்புகளை நம்மில் பலரும் உபயோகித்திருக்கலாம்.அதன் பயன்பாடுகளில் மிக முக்கியமானது அதன் அளவு.மிகக்குறைந்த அளவில் பரிமாறிக்கொள்ள வசதியாக உள்ள ஒரு கோப்பு இது.

சில சமயங்களில் இணையத்தில் இருந்து இறக்கிய கோப்பு அளவில் கூடுதலாகவும் அதே சமயத்தில் பல பக்கங்களை கொண்டதாகவும் இருப்பது பல விதங்களில் தொந்தரவாகவும் இருக்கும்.இந்த கோப்பையே சில பக்கங்கள் உள்ள தொகுப்பாக மாற்ற முடிந்தால்... சௌகரியம் தானே.இந்த மன நிலையில் தேடிக்கொண்டிருந்த போது கிடைத்த ஒரு மென்பொருள் (இலவசம்) pdftk என்பதாகும்.இதற்கு GUI (Grraphical User Interface) கிடையாது,எழுத்து வடிவில் நம்முடைய கட்டளையை கொடுத்தால் அதுவே பிரித்துக்கொடுத்து விடும்.

ஆமாம்,இக்கட்டளைகளை எப்படி அறிந்துகொள்வது?

இது எல்லாவற்ருக்கும் கீழே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி தெரிந்துகொள்ளுங்கள்.



ஆதாவது பல பக்கங்களை கொண்ட ஒரு pdf (mergepdf) என்ற கோப்பை முதல் பத்து பக்கங்களை மட்டும் கொண்ட மற்றொரு புதிய கோப்பாக split.pdf என்று ஏற்படுத்திக்கொண்டேன்.இம் மென்பொருளில் மேலும் பல வித உத்திகளை கையாள வசதி செய்துகொடுத்துள்ளார்கள்,அததனையும் இலவசமாக.ஆர்வம் உள்ளவர்கள் முயன்றுபாருங்கள்.

உபுண்டு லினக்ஸ் உபயோகப்படுத்துபவர்கள் இதை synaptic Package Manager மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

Wednesday, February 04, 2009

ffmpeg

ரொம்ப நாளாக இந்த பக்கமே வரமுடியலை ஏனென்றால் மடிக்கணினி உபயோகிக்க வேண்டிய நிலை அதோடு அதில் இருக்கும் Winxp யில் கைவைக்க மனது வரவில்லை.

இருந்தாலும் அரிக்கும் கையை சொறியாமல் இருக்க முடியாதே!! உபுண்டு 8.10 ஐ வின்டோஸுக்கு பக்கத்திலேயே நிறுவினேன்.

மேலே போவோம்.

தலைப்பை பார்த்து பயந்திடாதீங்க,இது ஒரு மென்பொருளின் பெயர் அதுவும் .avi ஆக இருக்கும் கோப்பை நமக்கு வேண்டிய வேறு வித கோப்பாக மாற்றிக்கொடுக்கும் மென்பொருள்.இது கமென்ட் லயன் என்பதால் கொஞ்சம் யோசித்தேன் ஆனால் எப்போதோ மயூரன் எழுதிய பதிவும் அங்கும் இங்கும் படித்த பக்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் என்று இறங்கி வெற்றியும் பெற்றேன்.

உங்களிடம் உள்ள Synaptic Package Installer மூலம் இந்த மென்பொருளை தேடி நிறுவிவிடுங்கள்.அதன் பிறகு டெர்மினலை ஆரம்பித்து அதில்

ffmpeg man என்று கொடுத்து என்டரை அமுத்தவும்.இந்த மென்பொருள் என்னென்ன வேலை செய்யும் என்று எழுத்து மூலம் விளக்கியிருப்பார்கள்,மிக எளிமையாக.

நான் என்ன பண்ணினேன் என்பதை கீழுள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.



வெகு விரைவாக முடித்து அதையும் டெஸ்க் டாப்பில் போட்டுவிட்டது.

Wednesday, January 23, 2008

லினக்ஸில் வரைகலை

கட்டுமானத்துறையும் இந்த வரைகலையும் இப்போது பிரிக்கமுடியாத அளவுக்கு போய்விட்டது.விண்டோஸில் இதன் தொடர்பில் பல மென்பொருட்கள் இருந்தாலும் அடிச்சிக்கமுடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பது என்னவோ “AutoCad" தான்.

இதை விண்டோஸில் புரிந்துகொள்வதற்குள் நான் படாத பாடுபட்டேன்,ஆதாவது எந்த வகுப்புக்கும் போகாமல் வெறும் கேள்வி ஞானத்துடன் முயற்சித்தேன்.கொஞ்ச நாள் விடாது விழுந்து பிறகு அலுத்து “சீ இந்த பழம் புளிக்கும்” என்று விட்டெரிந்துவிட்டேன்.

ஒரு சமயத்தில் வர வேண்டிய பிராஜட் நேர கால தாமதம் ஆக கம்பெனி செலவிலேயே அனுப்பி படிக்கவைத்தார்கள்.ஏற்கனவே மண்டைக்குள் கொஞ்சம் போட்டு வைத்திருந்ததால் ஒரு வார கோர்ஸில் தேவையானவற்றை பிடித்துக்கொண்டுவிட்டேன்.

புது பிராஜட் வந்தவுடன் வேறு இடம்,புதிய தலைவர் என்றானவுடன் கணினியும் புதிதாக வாங்கப்பட்டது.தேவையான மென்பொருள் பட்டியலில் ஆட்டோகேட்டும் போட்டு கொடுத்தேன்.

அதி வேக புது கணினி கிடைத்தது அத்துடன் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் தலைவரும் வாய்த்தார். :-)

மென்பொருள் வாங்குபவதில் சுணக்கம் தெரிந்தது.சரி, சும்மாக இருக்காமல் கம்பெனி IT ஆளுங்களுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன்,ஆதாவது லினக்ஸில் இலவசமாக கிடைக்கக்கூடிய "QCAD" உள்ளது அதை இப்போது US 50 டாலருக்கு விற்கிறார்கள்,வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்றேன்.

அவ்வளவு தான்,உடனே ஒரு பழைய கணினியில் ரெட் ஹேட் லினக்ஸை போட்டு கொடுத்துவிட்டார்கள்.அதில் வரைபடம் போடப்போகும் போது தான் ஆட்டோகேட்க்கும் அதற்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருந்தது தெரிந்தது.

சரியான விளக்கப்புத்தகம் இல்லாததாலும் சொல்லிக்கொடுக்க யாரும் இல்லாததாலும் போராட ஆரம்பித்தேன்.விடை கீழே உள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் அனுபவிக்கவும்.



இன்னும் புரிந்துகொள்ள அதிகம் இருந்தாலும் சிறிய நிறுவனங்களுக்கு இது சரியான விலையே இல்லாததாலும் பொருத்தமாக இருக்கும்.நான் உபயோகிப்பது பழைய வர்சன்.

புதிய டிரைல் வர்சனில் 10 நிமிடங்கள்,மொத்தமாக 100 நிமிடங்கள் இலவசமாக உபயோகிக்கலாம்.

ஐம்பது வெள்ளிதானா!! முயற்சிக்கலாம்.

Wednesday, October 17, 2007

PDFEdit- pdf திருத்தி

ஆதாவது மென்பொருள் பெயர் சொல்வது போலவே இது PDF கோப்பை திருத்த லினக்ஸில் உபயோகப்படுத்தக்கூடியது.

உங்கள் PDF கோப்பை திருத்த வேண்டும் என்றால் பல வெள்ளி பணம் கொடுத்து விலை உயர்ந்த மென்பொருளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை.இதை உபயோகப்படுத்தி PDF கோப்பை மாற்றலாம்.

படிப்படியாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் இங்கு.படித்து பயன் பெருங்கள்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்கள் லினக்ஸில் கொட்டிக்கிடக்கிறது.

Monday, October 15, 2007

வட்டு இல்லாமல் லினக்ஸ் நிறுவ.

நான் இதுவரை லினக்ஸை தறவிரக்கம் செய்யவேண்டும்,பிறகு வட்டில் எழுத வேண்டும்,அது முடிந்தவுடன் வட்டு வழியாக ஆரம்பித்து நிறுவ வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.சற்று முன் தான் மாற்றுவழி ஒன்றை படிக்க நேர்ந்தது.அது தான்

UNetbootin

மேலே கொடுத்துள்ள மென்பொருளை நீங்கள் வின்டோசிலோ அல்லது லினக்ஸில் இருக்கும் போது தறவிரக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.நிறுவியவுடன் கணினியை ஆரம்பிக்கச்சொல்லும்.உங்கள் தேவைக்கு ஏற்ற கோப்பை நிறுவிக்கொள்ளுங்கள்.

கணினி ஆரம்பிக்கும் போது Boot பகுதியில் வந்து நிற்கும்.முதலில் ஏற்கனவே உள்ள வின்டோசும் அடுத்து நீங்கள் தேர்ந்தெடுத்த லினக்ஸ் பெயரும் வந்து நிற்கும்.அதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டியது தான்.அவ்வளவு தான் முடிந்தது.

இணையம் மூலம் சுமார் 700MB அளவுள்ள கோப்புகளை தறவிரக்கி அதுவே நிறுவிக்கொள்ளும்.மிக முக்கியமாக உங்களிடம் அதி வேக இணைய இணைப்பு இருப்பது மிக அவசியம்.

இப்படி செய்வதால் வட்டு ஒன்று இல்லாமலே லினக்ஸை நிறுவமுடிகிறது அதுவும் வின்டோஸ் / லினக்ஸ் உள்ளே இருக்கும் போதே.

படங்களுடன் இங்கு விரிவாக உள்ளது.படித்து அறிந்துகொள்ளுங்கள்.

உபுண்டுவை நிறுவ இங்கு பார்க்கவும்.

இதே மாதிரி இன்னொன்று கொடுத்துள்ளார்கள்,அதையும் பார்க்கவும்.

Sunday, October 14, 2007

Ndiswrapper

இப்படி ஒரு மென்பொருள் லினக்ஸில் கம்பியில்லா சாதனங்களுக்கு தேவையான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிங்கையில் உள்ள சிம் லிம் ஸ்கொயர் (Sim Lim Sq) கடைத்தொகுதியை சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த USB அட்டாப்டர் கம்பியில்லா தொடர்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக சொல்லி விற்றுக்கொண்டிருந்தார்கள் அதுவும் இது லினக்ஸில் வேலை செய்யும் என்று போட்டிருந்தார்கள். முதலில் நான் எடுத்தது Linksys அடாப்டரை தான் அது சுமார் 45 வெள்ளி என்று போட்டிருந்தார்கள் ஆனால் லினக்ஸ் சப்போர்ட் பற்றி ஒன்றும் சொல்லவில்லை,இருந்தாலும் இணையத்தில் பலர் இது வேலை செய்வதாக போட்டிருந்ததால் அதைத்தான் வாங்க எண்ணியிருந்தேன். அப்போது தான் அந்த கடைக்காரர் இதை காண்பித்து விலை குறைவு அதோடிலில்லாமல் 2 வருட உத்திரவாதம் கொடுக்கிறார்கள் என்று. (போன வாரம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு இன்று வரை பதில்லில்லை).இது 35 வெள்ளி தான். வாங்கிவந்தேன்.




எப்போதும் போல் வின்டோஸில் பிரச்சனையில்லை.லினக்ஸில் அவர்கள் கொடுத்திருக்கும் வழிமுறைகள் எனக்கு சரியாக புரியவில்லையா இல்லை அந்த டிரைவரே சரியில்லையா? என்று தெரியவில்லை. வேலை செய்யவில்லை.

லினக்ஸில் இந்த வன்பொருள் வேலை செய்ய சில மென்பொருட்கள் தான் கண்ணில் பட்டது.

1. Ndiswrapper
2.Madwifi
3.Wifirader

மடிக்கணினியில் உள்ள கம்பியில்லா தொடர்ப்பு சிப்புகளுக்கு முதலில் சொன்ன மென்பொருள் மிகவும் உதவியாக இருப்பதாக் சொல்லப்படுகிறது.

இந்த Ndiswrapper யின் வேலையே வின்டோசில் உள்ள .inf & .sys கோப்பை எடுத்து லினக்சுக்காக வேலை செய்ய வைப்பதே.உங்களிடம் பல இயங்குதளம் இருக்கும் பட்சத்தில் வின் டோசில் உள்ள இந்த கோப்புகளை எடுத்து உபயோகப்படுத்திக்கலாம்.அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் வட்டில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அது மற்றொரு தலைவலி.

ஒரு வட்டில் 700 MB வரை சேமிக்க வசதியிருந்தும் அந்த நிறுவனம் வேண்டும் என்றே அதை சுருக்கி வட்டில் எழுதிக்கொடுப்பார்கள். அதை விரிவாக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் கிடைக்காது.நல்ல வேளையாக வின் டோசில் ஷார்வேர் மென்பொருள் கிடைத்தது அதன் மூலம் விரிவாக்கி அந்த கோப்புகளை எடுத்துவிட்டேன்.

செய்ய வேண்டியது இது தான்.

முதலில் ndiswrapper (1.48 version) நிறுவிக்கொள்ள வேண்டும். அது .tar.gz உடன் இருக்கும் அதை விரிவாக்கி ஒரு கோப்பில் போட்டுக்கொள்ளவும்.இப்போது டெர்மினல்க்கு போய்

cd /(எந்த இடத்தில் கோப்பு இருக்கிறதோ அதன் பெயரை கொடுக்கவும்)

இதை எப்படி செய்வது என்பதை மேலே உள்ள சுட்டியில் விரிவாக கொடுத்துள்ளார்கள்.அப்படி செய்யவும்.மிக முக்கியமாக அந்த wirless tools ஐ நிறுவவேண்டும்.

கணினியை மூடி திறந்தால் உங்கள் கம்பியில்லா தொடர்புக்கு தயராகிவிடும்.

இதை Fedora வில் நிறுவ இரண்டு நாட்கள் ஆனது என்றால் ubuntu வில் நிறுவ ஒரு வாரத்துக்கு மேல் ஆனது.