Monday, March 30, 2009

Test for Picture Zoom

Test (இந்த முயற்சி - கடைசி படத்தில் மட்டுமே)


கீழே படத்தின் மீது சொடுக்கவும்.test
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 26, 2009

லினக்ஸின் பன் முகம்

தொடர்ந்து ஆச்சரியங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் லினக்ஸில் இது தான் நான் சமீபத்தில் எனது கணினியில் செய்தது.
என்னுடைய திரையை கனசதுரமாக மாற்றி சுற்றிச் சுற்றி பல திரைகளில் ஒரே சமயத்தில் வேலை பார்க்கலாம்.

இதை நிறுவ Compiz என்ற மென்பொருளை நிறுவ வேண்டும்,உபுண்டுவில் இருப்பவர்கள் இதை Synaptic Package Manager மூலம் நிறுவிக்கொள்ளலாம்.இதை நிறுவிய பிறகு எல்லா Application உம் காகிதம் போல் இழுத்து/வளைத்து எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.இதனுடன் கூடிய செட்டிங்க்ஸில் தேவையான மாறுதல்களை செய்து உங்கள் கணினி திரையை அழகுபடுத்தலாம்.

அடுத்து..
இந்த மேக்(MAC) கணினியை நான் ஒரே ஒரு முறை தான் உபயோகித்துள்ளேன் அதில் பல விஷயங்கள் இருந்தாலும் முகப்பில் வரும் Application Task Icons தான் மிகவும் பிடித்திருந்தது.அதே முறையை லினக்ஸிலும் கொண்டுவர முடியும் என்று படித்திருந்தாலும் அதை முயலாமல் இருந்தேன்.அந்த யோஜனை இன்று தோன்றியதால் இங்கு சொல்லிய படி செய்தேன்,மிக எளிதாக வந்துவிட்டது.ஆர்வம் உள்ளவர் முயன்றுபார்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, March 17, 2009

துபாய் பேருந்தில் லினக்ஸ்.

போன வெள்ளிக்கிழமை பேருந்தில் போகும் போது Al Quoz அருகே ஓரிடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் ஏதோ பார்ப்பதற்காக எல்லா சுவிச்சுகளை அணைத்துவிட்டு வெளியில் போனார்.சுமார் 2 நிமிடங்களுக்கு பிறகு வந்து பேருந்தை கிளப்புவதற்காக சுவிச்சை துவக்கும் போது,பேருந்து கணினி திறையில் LILO (லினக்சுக்கான பூட் லோடர்) ஓடிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.உள் வெளிச்ச பிரதிபலிப்பு இருப்பதால் படம் அவ்வளவு தெளிவாக இல்லை.பெரிதுபடுத்தி பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.சத்தமே இல்லாமல் துபாய் போக்குவரத்து கழகம் திறந்த மென்பொருள் மூலத்துக்கு மாறிக்கொண்டு வருகிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

என் யோக ஜாதகம்!!

லினக்ஸில் என்ன இல்லை?வாருங்கள் பார்ப்போம்.
கனினியில் ஜாதகம் மென்பொருள் பல வருடங்களாக இருந்தாலும் அது லினக்ஸிலும் இருக்கு என்பதற்கு இது உதாரணம்.
Synaptic Package Managerயில் (System--->Administration---->synaptic) இது பற்றி தேடும் போது Astrolog என்ற மென்பொருள் கிடைத்தது.இம்மென்பொருள் GUI வடிவில் இல்லை அதனால் டெர்மினல் மூலமாகவே செயல்படுகிறது.

Application----->Accessories----->Terminal

அதில் astrolog என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு கேள்விகள் கேட்கும் அதற்கு தகுந்த பதில்களை கொடுத்தால் உடனே கிடைக்கும் உங்கள் ஜாதகம்.இப்படி கணித்த ஜாதகத்தை அலசும் அறிவு எனக்கு இல்லாத்தால் அப்படியே விட்டுவிட்டேன்,ஆர்வம் உள்ளவர்கள் முயலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, March 09, 2009

ஜாவா...ஜாவா உயிரை வாங்காதே

மடிக்கணினி வன் தட்டு கண்ணை மூடும் நேரம் வந்தாலும் விடாமல் அதில் உபுண்டுவை(8.10) நிறுவினேன்.இம்முறை அனைத்தும் சூமூகமாகவே இருந்தது.இணையம் என்று வரும் போது பயர்பாக்ஸில் பிளாஸ் நகர்படமும் எந்தவித பிரச்சனையில்லாமல் வந்தது.பயர்பாக்ஸ் 3.04 வில் இருந்து 3.05 க்கு மேம்பாடு கண்டபோது பிளாசில் பிரச்சனை ஆரம்பித்தது.Plug-in இல்லை என்றும் அதை அடோப் வலைப்பக்கத்தில் இருந்து இறக்கி நிறுவவும் என்றது அத்தோடு அனைத்து வித flash கோப்புகளையும் பார்க்க முடியவில்லை.இந்நிலையில் 3.0.7 பயர்பாக்ஸ் மேம்பாடு கண்டது ஆனால் அதனால் இந்த Flash பிரச்சனையை சரியசெய்ய முடியவில்லை.

பல வித Forum களில் சொல்லப்பட்ட ஏகப்பட்ட வழிகள் எல்லாம் செய்து பார்த்து மலங்க மலங்க முழித்துக்கொண்டிருந்தேன்.இவ்வேளையில் புது வன்பொருளில் உபுண்டு 8.1 நிறுவி மேல் சொன்ன வழி வந்து நின்றிருந்தேன்.ஒரு வலைப்பக்கத்தில் சொல்லியிருந்த எளிய வழி இப்பிரச்சனைக்கு முடிவு வைத்தது,அது இது தான்.

முதலில் அடோப் இந்த பக்கத்தில் போய் உங்களுக்கு தேவையான .deb அல்லது .tar.gz கோப்பாகவோ இறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.அச்சமயத்தில் உங்கள் பயர்பாக்ஸ் ஐ மூடிவிடவும்.நிறுவுதலை /usr/lib/java வில் நிறுவிக்கொள்ளவும்.நிறுவுதல் முடிந்தவுடன் அதை சரி பார்க்க இங்கு சென்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.இது எல்லாம் சரியாக இருந்தால் பிரச்சனையில்லை,பல சமயங்களில் இது வேலை செய்வதில்லை அந்த மாதிரி சமயங்களில் கீழ்கண்ட முறையில் இரு கோப்புகளுக்கு ஒரு தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டால் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் அதற்கு முன்பு Synaptic Package Manager மூலம் sun-java6-jre நிறுவிக்கொள்ளவும் அதோடு sun-java6-bin ஐயும் நிறுவிக்கொள்ளவும்.

கடசியாக உங்கள் டெர்மினலை திறந்து கீழ்கண்டவாறு தட்டச்சு செய்து எண்டரை அமுத்தவும்.மறக்காமல் பயர்பாக்ஸை மூடி திறக்கவும்.

cd /usr/lib/firefox-3.0.7/plugins

sudo ln -s /usr/lib/jvm/java-6-sun/jre/plugin/i386/ns7/libjavaplugin_oji.so

இனி பாருங்க எல்லாமே சூப்பராக இருக்கும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...