Monday, October 22, 2007

உபுண்டு 7.04 ---> 7.10

சில நாட்களுக்கு முன்பு தான் வந்த இந்த மேம்பட்ட பகுதி 7.10 ஐ நிறுவலாம் என்று நினைத்து அந்த பேக்கேஜ் மேம்பாட்டை துவங்கினேன்.

முதல் அதிர்ச்சியே "இப்போது சுமார் 650 MB " அளவுக்கு தறவிரக்கம் செய்ய போகிறேன் என்றது. என்னடா இது புது வெர்சன் அவர்கள் வலையில் இருந்து இறக்கினாலே அந்த அளவு தானே இருக்கும்,நாமோ மேம்படுத்த தானே செய்கிறோம் எதற்கு இந்த அளவு தறவிரக்கம் செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் "சரி" என்று சொன்னேன்.

சுமார் 1.30 மணித்துளிகள் ஆகும் என்றது.மானிடரை மட்டும் மூடிவிட்டு வேறு பணிகளை செய்ய ஆரம்பித்தேன்.

அகலப்பட்டை இல்லாதவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். நொந்து நூலாகிவிடுவீர்கள்.

மாலை 7 மணிக்கு ஆரம்பித்து இரவு சுமார் 9 மணிக்கு முடிந்தது.அதற்க்குப்பிறகு புது வெர்ஷனை நிறுவவா என்று கேட்டது.புதிதாக நிறுவினாலேயே சுமார் 1 மணி நேரம் தான் ஆகும்,சரி தூங்குவதற்கு முன்பு முடிந்துவிடும் என்று நினைத்து அனுமதி கொடுத்தேன்.

அனுமதி கொடுத்தவுடன் அடுத்த பாம் விழுந்தது. ஆதாவது என்னுடைய கணினியை மேம்படுத்த சுமார் 6 மணி நேரமாகும் என்றது.இரவு 10.30 மணிக்கு மீதம் 4 மணி நேரம் இருக்கு என்றது.மறுபடியும் மானிட்ரை மூடிவிட்டு தூங்க போய்விட்டேன்.காலை 6 மணிக்கு பார்க்கும் போது சில விபரங்களை மாற்ற என் அனுமதி கேட்டு அப்படியே நின்று போயிருந்த்து.எப்போது நின்றது என்று தெரியவில்லை.அனுமதி கொடுத்தவுடன் இன்னும் 1.30 மணி நேரம் ஆகும் என்றது.எல்லாம் நல்ல படியாக எல்லாம் முடிந்து கணினி ஆரம்பித்து புது வர்சன் உள்ளே போனது.இப்போது கணினி திரை நல்ல ரெசலூஷனில் வந்தது. ஆனால் கம்பியில்லா இணைய இணைப்பு தான் வரவில்லை.

Ndiswrapper திரும்ப நிறுவ வேண்டும் போல் இருக்கிறது.ஒன்று மட்டும் நன்றாக உணரமுடிந்தது. மற்ற லினக்ஸை விட ஆரம்பிக்கும் நேரமும் மூடும் நேரமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, October 17, 2007

PDFEdit- pdf திருத்தி

ஆதாவது மென்பொருள் பெயர் சொல்வது போலவே இது PDF கோப்பை திருத்த லினக்ஸில் உபயோகப்படுத்தக்கூடியது.

உங்கள் PDF கோப்பை திருத்த வேண்டும் என்றால் பல வெள்ளி பணம் கொடுத்து விலை உயர்ந்த மென்பொருளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை.இதை உபயோகப்படுத்தி PDF கோப்பை மாற்றலாம்.

படிப்படியாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் இங்கு.படித்து பயன் பெருங்கள்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்கள் லினக்ஸில் கொட்டிக்கிடக்கிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, October 15, 2007

வட்டு இல்லாமல் லினக்ஸ் நிறுவ.

நான் இதுவரை லினக்ஸை தறவிரக்கம் செய்யவேண்டும்,பிறகு வட்டில் எழுத வேண்டும்,அது முடிந்தவுடன் வட்டு வழியாக ஆரம்பித்து நிறுவ வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.சற்று முன் தான் மாற்றுவழி ஒன்றை படிக்க நேர்ந்தது.அது தான்

UNetbootin

மேலே கொடுத்துள்ள மென்பொருளை நீங்கள் வின்டோசிலோ அல்லது லினக்ஸில் இருக்கும் போது தறவிரக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.நிறுவியவுடன் கணினியை ஆரம்பிக்கச்சொல்லும்.உங்கள் தேவைக்கு ஏற்ற கோப்பை நிறுவிக்கொள்ளுங்கள்.

கணினி ஆரம்பிக்கும் போது Boot பகுதியில் வந்து நிற்கும்.முதலில் ஏற்கனவே உள்ள வின்டோசும் அடுத்து நீங்கள் தேர்ந்தெடுத்த லினக்ஸ் பெயரும் வந்து நிற்கும்.அதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டியது தான்.அவ்வளவு தான் முடிந்தது.

இணையம் மூலம் சுமார் 700MB அளவுள்ள கோப்புகளை தறவிரக்கி அதுவே நிறுவிக்கொள்ளும்.மிக முக்கியமாக உங்களிடம் அதி வேக இணைய இணைப்பு இருப்பது மிக அவசியம்.

இப்படி செய்வதால் வட்டு ஒன்று இல்லாமலே லினக்ஸை நிறுவமுடிகிறது அதுவும் வின்டோஸ் / லினக்ஸ் உள்ளே இருக்கும் போதே.

படங்களுடன் இங்கு விரிவாக உள்ளது.படித்து அறிந்துகொள்ளுங்கள்.

உபுண்டுவை நிறுவ இங்கு பார்க்கவும்.

இதே மாதிரி இன்னொன்று கொடுத்துள்ளார்கள்,அதையும் பார்க்கவும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மயூரனுக்கு நன்றி

லினக்ஸில் அதுவும் உபுண்டு உபயோகப்படுத்துவர்களுக்காக மயூரன் ஒரு அருமையான பணியை செய்துகொடுத்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு புது உபுண்டு வெர்ஷன் ஆன 7.04 ஐ ஒரு பார்ட்டிஷியனில் நிறுவினேன்.முதலில் திரை முகப்பு எல்லாம் தேவைக்கு குறைவான ரிசொல்யூஷன் வந்து அதை /etc/X11 கோப்பில் உள்ளே சென்று மாற்றி சரி செய்தேன்,அடுத்து கம்பியில்லா USB அடாப்டர் பிரச்சனை.அதை சரி செய்ய 1 வாரம் ஆனது.போன பதிவில் அதைப் பற்றி சொல்லியிருந்தேன்.இது முடிந்தவுடன் இணையத்துக்கு போய் தமிழ் பக்கங்களை பார்க்கும் போது.. படிக்கவே முடியாத அளவுக்கு உடைந்து காணப்பட்டது. கூகிளான் டவரை கேட்ட போது எங்கெங்கோ சுற்றவிட்டார்.முறையான எதுவும் கிடைக்க்கவில்லை.அப்ப்போது தான் மயூரன் போட்ட பதிவு ஞாபகம் வந்தது அங்கு போய் தறவிரக்கம் செய்தேன்.அதை எப்படி நிறுவ வேண்டும் என்ற விளக்கமும் அதில் உள்ள "read me" கோப்பில் உள்ளது.

முதலில் சுருக்கப்பட்ட அந்த கோப்பை விரிவாக்கம் செய்து அதை ஒரு ஃபோல்டரில் சேமிக்கவும். பிறகு அந்த கோப்பிற்கு போய் அதில் உள்ள install.sh ஐ இரு முறை முறையில் சொடுக்கி"Run in Terminal" என்பதை தேர்ந்தெடுத்தால் போதும் எல்லாம் முடிந்து கணினியை திரும்ப ஆரம்பிக்கச்சொல்லும்.பாருங்கள் தமிழிலேயே கேட்கிறது.

முடிந்த பிறகு கணினியை திரும்ப ஆரம்பிக்கச்சொல்கிறது.இதில் ஒரு பிழை இருக்கிறது. Cancel பட்டன் காணப்படுவதில்லை.கணினியை restart பண்ணவுடன் இணையத்துக்கு போய் தமிழ் பக்கங்களை பார்த்தால்....
ஆஹா! ஆஹா! அருமையிலும் அருமை.தமிழ் எழுத்துக்கள் படிக்கக்கூடிய அளவில் நன்றாக வே தெரிகிறது,இருந்தாலும் முழுமையாக இல்லை.ஆதாவது கொம்புகள் மற்றும் சில இடங்களில் தேவையில்லாத gap இருக்கிறது.எப்படியோ தமிழ் படிக்கக்கூடிய அளவில் வருகிறதே அதுவே சந்தோஷம் தான்.தமிழுக்காக மயூரனனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, October 14, 2007

Ndiswrapper

இப்படி ஒரு மென்பொருள் லினக்ஸில் கம்பியில்லா சாதனங்களுக்கு தேவையான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிங்கையில் உள்ள சிம் லிம் ஸ்கொயர் (Sim Lim Sq) கடைத்தொகுதியை சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த USB அட்டாப்டர் கம்பியில்லா தொடர்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக சொல்லி விற்றுக்கொண்டிருந்தார்கள் அதுவும் இது லினக்ஸில் வேலை செய்யும் என்று போட்டிருந்தார்கள். முதலில் நான் எடுத்தது Linksys அடாப்டரை தான் அது சுமார் 45 வெள்ளி என்று போட்டிருந்தார்கள் ஆனால் லினக்ஸ் சப்போர்ட் பற்றி ஒன்றும் சொல்லவில்லை,இருந்தாலும் இணையத்தில் பலர் இது வேலை செய்வதாக போட்டிருந்ததால் அதைத்தான் வாங்க எண்ணியிருந்தேன். அப்போது தான் அந்த கடைக்காரர் இதை காண்பித்து விலை குறைவு அதோடிலில்லாமல் 2 வருட உத்திரவாதம் கொடுக்கிறார்கள் என்று. (போன வாரம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு இன்று வரை பதில்லில்லை).இது 35 வெள்ளி தான். வாங்கிவந்தேன்.
எப்போதும் போல் வின்டோஸில் பிரச்சனையில்லை.லினக்ஸில் அவர்கள் கொடுத்திருக்கும் வழிமுறைகள் எனக்கு சரியாக புரியவில்லையா இல்லை அந்த டிரைவரே சரியில்லையா? என்று தெரியவில்லை. வேலை செய்யவில்லை.

லினக்ஸில் இந்த வன்பொருள் வேலை செய்ய சில மென்பொருட்கள் தான் கண்ணில் பட்டது.

1. Ndiswrapper
2.Madwifi
3.Wifirader

மடிக்கணினியில் உள்ள கம்பியில்லா தொடர்ப்பு சிப்புகளுக்கு முதலில் சொன்ன மென்பொருள் மிகவும் உதவியாக இருப்பதாக் சொல்லப்படுகிறது.

இந்த Ndiswrapper யின் வேலையே வின்டோசில் உள்ள .inf & .sys கோப்பை எடுத்து லினக்சுக்காக வேலை செய்ய வைப்பதே.உங்களிடம் பல இயங்குதளம் இருக்கும் பட்சத்தில் வின் டோசில் உள்ள இந்த கோப்புகளை எடுத்து உபயோகப்படுத்திக்கலாம்.அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் வட்டில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அது மற்றொரு தலைவலி.

ஒரு வட்டில் 700 MB வரை சேமிக்க வசதியிருந்தும் அந்த நிறுவனம் வேண்டும் என்றே அதை சுருக்கி வட்டில் எழுதிக்கொடுப்பார்கள். அதை விரிவாக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் கிடைக்காது.நல்ல வேளையாக வின் டோசில் ஷார்வேர் மென்பொருள் கிடைத்தது அதன் மூலம் விரிவாக்கி அந்த கோப்புகளை எடுத்துவிட்டேன்.

செய்ய வேண்டியது இது தான்.

முதலில் ndiswrapper (1.48 version) நிறுவிக்கொள்ள வேண்டும். அது .tar.gz உடன் இருக்கும் அதை விரிவாக்கி ஒரு கோப்பில் போட்டுக்கொள்ளவும்.இப்போது டெர்மினல்க்கு போய்

cd /(எந்த இடத்தில் கோப்பு இருக்கிறதோ அதன் பெயரை கொடுக்கவும்)

இதை எப்படி செய்வது என்பதை மேலே உள்ள சுட்டியில் விரிவாக கொடுத்துள்ளார்கள்.அப்படி செய்யவும்.மிக முக்கியமாக அந்த wirless tools ஐ நிறுவவேண்டும்.

கணினியை மூடி திறந்தால் உங்கள் கம்பியில்லா தொடர்புக்கு தயராகிவிடும்.

இதை Fedora வில் நிறுவ இரண்டு நாட்கள் ஆனது என்றால் ubuntu வில் நிறுவ ஒரு வாரத்துக்கு மேல் ஆனது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...