நம்ம லினக்ஸ்க்கு கொஞ்ச வருடங்களுக்கு முன்பு USB மற்றும் வெப் கேமிரா என்றால் வேப்பங்காய் போல் கசக்கும்.
எனக்கு பிடித்த ஆளுடன் தான் வேலை செய்வேன் என்று சொல்லி வேலை செய்வார்,் அதுவும் அமெரிக்கா & யூரோப் ஆளுங்க உபயோகிக்கிற மாடலுடன் தான் வேலை செய்வார் இல்லை அந்த கேமிராவுக்கும் மாத்திரம் தான் டிரைவர் கிடைக்கும்.
நான் லினக்ஸில் கை வைக்கும் போது உள் இருக்கும் மோடத்துடன் சண்டை போட்டு ஓய்ந்து போனான்,பிறகு நம்ம USB Thumb drive அதற்கு பிறகு வெப் கேமிரா.இந்த மூன்றாவது எனக்கு தண்ணி காண்பித்த மாதிரி வேறு எதுவும் காட்டவில்லை.
பல மாதங்களுக்கு முன்பு நமது சக பதிவாளர் மயூரன் இந்த வெப்கேமராவை லினக்ஸில் எப்படி முடிகிறது என்று சொல்லி ஒரு படமும் ஏற்றியிருந்தார்.
அப்போதில் இருந்து நம் கேமராவையும் எப்படியாவது லினக்ஸில் நிறுவிவிடவேண்டும் என்று முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பழைய லாஜிடெக் வெப் கேமரா கிடைத்தது.அதன் மாடல் எண் எதுவும் இல்லை. இருந்தாலும் படத்தை வைத்து வின்டோஸுக்கான டிரைவர் பிடித்து அது வேலை செய்கிறதா என்று தெரிந்துகொண்டேன். அடுத்ததாக லினக்ஸ்.
லினக்ஸை பொருத்த வரை இந்த பக்கத்தில்் தான் நிறைய வெப்கேமிராவுக்கு வேண்டிய டிரைவர் கிடைக்கும்.அதையும் இரண்டாக பிரித்து 2.4. & 2.6 கெர்னல் என்று கொடுத்துள்ளார்கள். என்னுடைய லினக்ஸ் 2.6 என்பதால் அதை தரவிரக்கி நிறுவினேன்.
இதில் எப்படி வெப்கேமிரா வேலை செய்கிரதா என்று பார்க்க கீழே உள்ள மென்பொருளை ஆரம்பித்தேன்,சில செட்டிங்களை கொடுத்தவுடன் கேமிரா மூலம் என் படம் தெரிய ஆரம்பித்தது.்
இதை விண்டாஸ் ஆளுங்களுக்கு காண்பிக்க amsn என்ற மென்பொருள் உதவியாக இருக்கும் என்று நினைத்து அதையும் நிறுவினேன். நேற்று இரவு என்னுடைய தொடுப்பில் உள்ள ஒருவரும் இணையத்தில் இல்லாததால் சோதிக்க முடியவில்லை.
முடிந்த பிறகு சொல்கிறேன்.
No comments:
Post a Comment