Monday, March 05, 2007

கம்பியில்லா தொடர்பு.

இங்கு சிங்கையில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கம்பியில்லா இணையத்தொடர்பு என்ற முறையை M1 என்ற நிறுவனம் கொண்டுவந்தது.சிங்கப்பூரில் எந்த இடத்தில் இருந்தும் எவ்வித கேபிள் இல்லாமல் இணையத்தில் இணையலாம்.
இதில் பதிவு செய்துகொண்டவர்களுக்கு 3விதமான கருவியில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள சொன்னார்கள்.
1.USB மோடம்- ஒரு சின்ன Phone போல் உள்ளது.இதைப்பற்றி இங்கு சொல்லியிருந்தேன்.
2.PCMCIA -அட்டை,இது மடிக்கணினி வைத்திருப்பவர்களுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும்.
3.ஒரு சின்ன அலுவலகம் அல்லது பல கணினிகள் இணைக்கும் வச்திக்காக ரூட்டர் மாதிரி ஒரு சாதனம்

என்னுடைய தேவைக்கு தகுந்த மாதிரி என்க்கு தேவைப்பட்ட USB மோடம் வாங்கிக்கொண்டேன்.இது XP,2000 மற்றும் ஆப்பிள் கணினிகளில் நிறுவ எந்த வித மென்பொருளும் தேவைப்படாது.இந்த வன்பொருளை இணைக்கும் போது தானாகவே அதை நிறுவிக்கொள்ளும்.மேக் சிஸ்டத்துக்கு மாத்திரம் வட்டு கொடுத்துள்ளார்கள்.

நமக்கு எது இருந்தாலும் நம் லினக்ஸில் அது வேலை செய்யாவிட்டால் தூக்கம் வராதே!தேடல் தொடங்கியது.நமது கூகிள் ஆண்டவரிடம் கேட்டதும்,உபுண்டுவில் இதை வேலைசெய்கிறது என்ற விஷயமும் அதை எப்படி செயல்படுத்துவது என்ற விபரமும் இங்கு போட்டிருந்தார்கள்.

பல முயற்சிக்கு பிறகு எப்படியோ வேலை செய்ய ஆரம்பித்தது.2 நாட்கள் வேலை செய்யதபிறகு,3 நாளில் இருந்து பிரச்சனை ஆரம்பித்தது.

பல நாள் தேடலுக்கு பிறகு ஒரு சின்ன உபாயம் கிடைத்தது,அதை அமல்படுத்தியபிறகு அழகாக வேலைசெய்கிறது.

இந்த USB மோடம் முதலில் உணரப்படும் போது ஒரு Mass Storage ஆகவும்,சிடி வட்டாகவும் தெரியும்.
சிடி வட்டை வலது சொடுக்கி தூக்கிவிடவேண்டும்.
மற்றதை "X" போட்டு மூடிவிடவேண்டும்.
அடுத்து,
கீழே உள்ள ஒரு சின்ன பைலை தரவிரக்கம் செய்துகொள்ளவும்.அதை திரைமுகப்பிலேயே வைத்துக்கொள்ளலாம்.
huaweiAktBbo-i386.out

அப்புறம் என்ன படத்தில் உள்ள மாதிரி செய்தால் இணையத்தின் உள்ளே போகலாம்.

மிக முக்கியமாக உங்கள் wvdial.conf நீங்கள் வாழும் தேசத்துக்கு தகுந்த மாதிரி மாற்றவேண்டும்.


.


இப்படி உபுண்டுவில் வேலை செய்யும் மோடம்,Fedora வில் மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது,இருந்தாலும் வழி பிறக்க வெகுநாள் இல்லை என்றே தோனுகிறது.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது,மற்றவற்றை காட்டிலும் உபுண்டு ஒரு 2 படி மேலே உள்ளது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: