Sunday, October 14, 2007

Ndiswrapper

இப்படி ஒரு மென்பொருள் லினக்ஸில் கம்பியில்லா சாதனங்களுக்கு தேவையான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிங்கையில் உள்ள சிம் லிம் ஸ்கொயர் (Sim Lim Sq) கடைத்தொகுதியை சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த USB அட்டாப்டர் கம்பியில்லா தொடர்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக சொல்லி விற்றுக்கொண்டிருந்தார்கள் அதுவும் இது லினக்ஸில் வேலை செய்யும் என்று போட்டிருந்தார்கள். முதலில் நான் எடுத்தது Linksys அடாப்டரை தான் அது சுமார் 45 வெள்ளி என்று போட்டிருந்தார்கள் ஆனால் லினக்ஸ் சப்போர்ட் பற்றி ஒன்றும் சொல்லவில்லை,இருந்தாலும் இணையத்தில் பலர் இது வேலை செய்வதாக போட்டிருந்ததால் அதைத்தான் வாங்க எண்ணியிருந்தேன். அப்போது தான் அந்த கடைக்காரர் இதை காண்பித்து விலை குறைவு அதோடிலில்லாமல் 2 வருட உத்திரவாதம் கொடுக்கிறார்கள் என்று. (போன வாரம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு இன்று வரை பதில்லில்லை).இது 35 வெள்ளி தான். வாங்கிவந்தேன்.




எப்போதும் போல் வின்டோஸில் பிரச்சனையில்லை.லினக்ஸில் அவர்கள் கொடுத்திருக்கும் வழிமுறைகள் எனக்கு சரியாக புரியவில்லையா இல்லை அந்த டிரைவரே சரியில்லையா? என்று தெரியவில்லை. வேலை செய்யவில்லை.

லினக்ஸில் இந்த வன்பொருள் வேலை செய்ய சில மென்பொருட்கள் தான் கண்ணில் பட்டது.

1. Ndiswrapper
2.Madwifi
3.Wifirader

மடிக்கணினியில் உள்ள கம்பியில்லா தொடர்ப்பு சிப்புகளுக்கு முதலில் சொன்ன மென்பொருள் மிகவும் உதவியாக இருப்பதாக் சொல்லப்படுகிறது.

இந்த Ndiswrapper யின் வேலையே வின்டோசில் உள்ள .inf & .sys கோப்பை எடுத்து லினக்சுக்காக வேலை செய்ய வைப்பதே.உங்களிடம் பல இயங்குதளம் இருக்கும் பட்சத்தில் வின் டோசில் உள்ள இந்த கோப்புகளை எடுத்து உபயோகப்படுத்திக்கலாம்.அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் வட்டில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அது மற்றொரு தலைவலி.

ஒரு வட்டில் 700 MB வரை சேமிக்க வசதியிருந்தும் அந்த நிறுவனம் வேண்டும் என்றே அதை சுருக்கி வட்டில் எழுதிக்கொடுப்பார்கள். அதை விரிவாக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் கிடைக்காது.நல்ல வேளையாக வின் டோசில் ஷார்வேர் மென்பொருள் கிடைத்தது அதன் மூலம் விரிவாக்கி அந்த கோப்புகளை எடுத்துவிட்டேன்.

செய்ய வேண்டியது இது தான்.

முதலில் ndiswrapper (1.48 version) நிறுவிக்கொள்ள வேண்டும். அது .tar.gz உடன் இருக்கும் அதை விரிவாக்கி ஒரு கோப்பில் போட்டுக்கொள்ளவும்.இப்போது டெர்மினல்க்கு போய்

cd /(எந்த இடத்தில் கோப்பு இருக்கிறதோ அதன் பெயரை கொடுக்கவும்)

இதை எப்படி செய்வது என்பதை மேலே உள்ள சுட்டியில் விரிவாக கொடுத்துள்ளார்கள்.அப்படி செய்யவும்.மிக முக்கியமாக அந்த wirless tools ஐ நிறுவவேண்டும்.

கணினியை மூடி திறந்தால் உங்கள் கம்பியில்லா தொடர்புக்கு தயராகிவிடும்.

இதை Fedora வில் நிறுவ இரண்டு நாட்கள் ஆனது என்றால் ubuntu வில் நிறுவ ஒரு வாரத்துக்கு மேல் ஆனது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: