Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Saturday, February 07, 2009

பயர் பாக்ஸ்

இந்த பயர்பாக்ஸ் வந்ததில் இருந்து மற்ற உலாவிகள் பக்கம் திரும்பவே முடிவதில்லை,ஒவ்வொரு நாளும் ஆச்சரியமூட்டும் அளவுக்கு விபரங்கள் அடங்கியுள்ள ஒரு உலாவி என்றால் மிகையில்லை.இதெல்லாம் தான் எல்லோரும் தெரியுமே,புதுசா ஏதாவது இருக்கா என்று கேட்கிறீர்களா? இல்லாமலா!

இந்த உலாவியின் வலது பக்கத்தில் கூகிளுக்கான தேடுபொறி இதோடு சேர்ந்துவருவது தெரிந்ததே அதை உபயோகப்படுத்தும் போது பெறும்பாலும் ஆங்கிலத்திலேயே விபரங்கள் ஆங்கில பக்கத்திலேயே வரும்.இது எல்லாம் நீங்கள் வசிக்கும் தேசத்தை பொருத்தது.இங்கு துபாயில் அதை உபயோகபடுத்தும் போது அந்த பக்கத்தின் முகப்பில் ஒரே அராபிக் மொழியில் இருக்கும்,இது உள்ளூர்காரர்களுக்கு வசதி ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கு இது தலைவலி.இதை ஆங்கிலத்துக்கு கொண்டுவர அங்கு சுட்டி ஒன்றும் இல்லாத பட்சத்தில் கூகிளாரிடமே அடைக்கலம் அடைந்தேன்.விடைகள் பல இருந்தாலும் இது தான் சரியாக இருக்கும் என்ற குத்துமதிப்பில் இதை செயல்படுத்தினேன்,வெற்றியும் கிடைத்தது.

நீங்கள் வெளிதேசத்தில் அதுவும் ஆங்கில பேச்சு மொழி வழக்கில் இல்லாவிட்டால் இம்முறை உங்களுக்கு பயனளிக்ககூடும்.

ஆதாவது பயர்பாக்ஸ் இருக்கும் கோப்பின் உள்ளே searchplugin என்ற பொட்டி உள்ளே google.xml என்ற கோப்பை திறந்து அதில் உள்ள கடைசி வரியில் உள்ள firefox ஐ நீக்கிவிட்டி ncr (No Country Restriction) என்று போட்டுவிட்டால் முடிந்தது.

படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கிப்பாருங்கள்.

Monday, October 15, 2007

மயூரனுக்கு நன்றி

லினக்ஸில் அதுவும் உபுண்டு உபயோகப்படுத்துவர்களுக்காக மயூரன் ஒரு அருமையான பணியை செய்துகொடுத்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு புது உபுண்டு வெர்ஷன் ஆன 7.04 ஐ ஒரு பார்ட்டிஷியனில் நிறுவினேன்.முதலில் திரை முகப்பு எல்லாம் தேவைக்கு குறைவான ரிசொல்யூஷன் வந்து அதை /etc/X11 கோப்பில் உள்ளே சென்று மாற்றி சரி செய்தேன்,அடுத்து கம்பியில்லா USB அடாப்டர் பிரச்சனை.அதை சரி செய்ய 1 வாரம் ஆனது.போன பதிவில் அதைப் பற்றி சொல்லியிருந்தேன்.



இது முடிந்தவுடன் இணையத்துக்கு போய் தமிழ் பக்கங்களை பார்க்கும் போது.. படிக்கவே முடியாத அளவுக்கு உடைந்து காணப்பட்டது. கூகிளான் டவரை கேட்ட போது எங்கெங்கோ சுற்றவிட்டார்.முறையான எதுவும் கிடைக்க்கவில்லை.அப்ப்போது தான் மயூரன் போட்ட பதிவு ஞாபகம் வந்தது அங்கு போய் தறவிரக்கம் செய்தேன்.அதை எப்படி நிறுவ வேண்டும் என்ற விளக்கமும் அதில் உள்ள "read me" கோப்பில் உள்ளது.

முதலில் சுருக்கப்பட்ட அந்த கோப்பை விரிவாக்கம் செய்து அதை ஒரு ஃபோல்டரில் சேமிக்கவும். பிறகு அந்த கோப்பிற்கு போய் அதில் உள்ள install.sh ஐ இரு முறை முறையில் சொடுக்கி



"Run in Terminal" என்பதை தேர்ந்தெடுத்தால் போதும் எல்லாம் முடிந்து கணினியை திரும்ப ஆரம்பிக்கச்சொல்லும்.



பாருங்கள் தமிழிலேயே கேட்கிறது.

முடிந்த பிறகு கணினியை திரும்ப ஆரம்பிக்கச்சொல்கிறது.இதில் ஒரு பிழை இருக்கிறது. Cancel பட்டன் காணப்படுவதில்லை.



கணினியை restart பண்ணவுடன் இணையத்துக்கு போய் தமிழ் பக்கங்களை பார்த்தால்....
ஆஹா! ஆஹா! அருமையிலும் அருமை.தமிழ் எழுத்துக்கள் படிக்கக்கூடிய அளவில் நன்றாக வே தெரிகிறது,இருந்தாலும் முழுமையாக இல்லை.ஆதாவது கொம்புகள் மற்றும் சில இடங்களில் தேவையில்லாத gap இருக்கிறது.எப்படியோ தமிழ் படிக்கக்கூடிய அளவில் வருகிறதே அதுவே சந்தோஷம் தான்.



தமிழுக்காக மயூரனனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

Saturday, June 09, 2007

லினக்ஸில் தமிழ்-2

போன பதிவில் லினக்ஸில் எப்படி தமிழில் உள்ளீடு செய்வது என்று வரியில் எழுதியிருந்தேன்.அது ஒருவருக்கு சரியாக வரவில்லை என்று சொல்லியிருந்தார்.அவர் குறையை நீக்க படத்துடன் கொடுத்துள்ளேன்.இன்னும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

நீங்கள் பார்பது பெடோரா 7 வில் எடுத்த படங்கள்.மற்ற லினக்ஸில் கொஞ்சம் வேறுபடும் அவ்வளவு தான்.

முதலில் ---> Application ----> Add/Remove software


மேலே உள்ள படத்தில் பாருங்க மொழிகள் இடது பக்கமும் அதற்கான தேர்வுகள் வலது பக்கமும் உள்ளது.தமிழை தேர்ந்தெடுங்க.இந்த Packager Manager வேலை செய்ய இணைய இணைப்பு தேவைப்படும்.இந்த மென்பொருட்கள் உள்ள சர்வரை அடைந்து அங்கு என்னென்ன மென்பொருட்கள் இருக்கு என்பதை காண்பிக்க இணையம் வேண்டும்.மறக்காமல் Apply ஐ சொடுக்கினால்,அதுவே நிறுவிக்கொள்ளும்.அதன் பிறகு

System--->Preferences----> Presonal ---> Input Method அதன் படம் கீழே



உடனே அதற்கு உண்டான பெட்டி கீழே காண்பித்த மாதிரி திறக்கும்.அதில் SCIM என்பதை தேர்ந்தெடுங்கள்.


இதை மூடிய பிறகு, இப்போது Desktop மேல் வலது பக்கம் பாருங்கள் சின்னதாக ஒரு கீ போர்ட் தெரியும் அதை ஒரு முறை சொடுக்கினால்,கீழே உள்ள மாதிரி விரிவடையும்.



தேவையான வற்றை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்ய வேண்டியது தான்.இதே முறையில் Open Office யில் எதில் வேண்டுமென்றாலும் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

இணையத்தில் தமிழில் உள்ளீடு செய்ய வேண்டுமா அதுவும் பயர்பாக்ஸில் செய்ய வேண்டுமா?
Firefox- Add on க்கு போய் தமிழ் கீ என்று தேடினால், திரு.முகுந்த் எழுதிய கீ கிடைக்கும்.இதை நிறுவுங்கள்.அதற்கு பிறகு பயர்பாக்ஸை மூடி திறங்கள்.

திறந்த பிறகு மவுஸில் வலது பக்கம் சொடுக்கவும்.கீழே காட்டியுள்ள மாதிரி கிடைக்கும்.அஞ்சல் முறையை தேர்ந்தெடுத்தால் Phonetic முறையில் தட்டச்சலாம்.




எங்கும் எதிலும் தமிழை புகுத்துவோம்... வாருங்கள்.

Thursday, April 19, 2007

வேர்ட் பிரஸ்ஸில் தமிழ்

இது லினக்ஸ் சம்பந்தப்பட்டது அல்ல.
பல வலைப்பதிவர்கள் வேர்ட் ப்ரெஸ் உபயோகித்து வலை பதிகிறார்கள்,அவர்கள் தங்கள் பக்கத்திலேயே தமிழில் பின்னூட்டம் இட இந்த பிளக் இன் உபயோகமாக இருப்பதாக இந்த வலைத்தளம் சொல்கிறது.
முயற்சித்து பாருங்கள்.