Saturday, June 28, 2008

நகர் படம் நறுக்குதல்

ஒரு பெரிய நகர்படத்தில் இருந்து தேவையான அளவை மட்டும் வெட்டுவது எப்படி என்று உபுண்டு லினக்ஸின் 8.10 இல் எப்படி என்று பார்ப்போமா?

வெட்டவேண்டும் என்றவுடன் அங்கு இங்கு என்று தேடாமல்...

system ---Administration --- synaptic package manager ஐ சொடுக்கவும்,அது திறந்த பிறகு அதில் தேடுதல் பொட்டியில் split video என்று கொடுத்தால் முதலிலேயே இந்த Avidemux என்ற மென்பொருளை காண்பிக்கும் பிறகு என்ன அதை சொடுக்கி நிறுவிக்கொள்ள வேண்டியது தான்.

இந்த மென் பொருளை உபயோகிக்கும் போது எடுத்த சில படங்கள்.







மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, May 21, 2008

தமிழ் எழுத்துரு பிரச்சனை

உபுண்டு 8.04 க்கு மாறிய பிறகு தமிழ் எழுத்துக்கள் அதுவும் தமிழ்மணம் தெரிவதில் பிரச்சனை இருப்பதாக போன பதிவில் எழுதியிருந்தேன்.

சில நாட்கள் கழித்து சாரங்கன் இதற்கு மாற்று வழி இருப்பாதகவும் அதைப் பற்றி எழுதியிருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

அவர் சொன்னபடி செய்து பார்த்தால் ஜிஎடிட்டில் நன்றாக தெரியும் எழுத்து தமிழ்மணத்தில் கொஞ்சம் கலங்கலாகத் தான் தெரிகிறது.

கீழே உள்ள படத்தில் பார்க்கவும்...



சாரங்கன் வேறு வழி எதுவும் இருக்கா?

நன்றி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, May 04, 2008

உபுண்டு 8.04

ஊருக்கு போய் வந்த பிறகு உபுண்டுவை திறந்த போது மென்பொருள் மேம்படுத்தல் ஞாபகமூட்டலில் உபுண்டு புதிய பதிவு இருப்பதாகவும், மேம்படுத்தலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தது.

ஏற்கனவே சூடுபட்டுக்கொண்ட நிகழ்வை இங்கு சொல்லியிருந்தேன்,இருந்தாலும் Software Updater மூலமே செய்துபார்க்கலாம் என்று அனுமதியளித்தேன்.பாதி வரை போய் அதன் பிறகு இணைய இணைப்பில் நேர்ந்த கோளாறினால் அப்படியே நின்று போயிருந்தது. தலை வலி ஆரம்பம் ஆனது.

இணைய இணைப்பு விட்டுப்போனது,எங்கு பிரச்சனை என்று ஆராய மனதில்லை. உடனே வின்டோஸுக்கு மாறி உபுண்டு 8.04 பதிவை தரவிரக்கினேன். சுமார் 45 நிமிடங்களுக்குள் 698 MB முடிந்தது. அதன் பிறகு வட்டில் எழுதி, நிறுவளை ஆரம்பித்தேன். என்னுடைய Boot Loader வரும்போது மட்டும் ஜாக்கிரதையாக இருந்து தேவைப்பட்ட இடத்தில்போட்டேன். இந்த முறை நிறுவும் போதே கம்பியில்லா இணைய இணைப்பை அதுவே தெரிந்துகொண்டது மிகவும் ஆறுதலாக இருந்தது. போன முறையில் இதற்காக மிகவும் போராட வேண்டியிருந்தது.

எல்லாம் ஒரு வழியாக முடிந்து திரை கீழே உள்ள மாதிரி திறந்தது.



திரையே அட்டகாசமாக இல்லை!!

முதலில் தமிழை தெரிய வைக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்தேன், ஆதாவது மொழிக்காக உள்ள இடத்துக்குப் போய் தமிழை தேர்ந்தெடுத்து தேவையானவற்றை நிறுவிக்கொண்டேன்,

அதன் பிறகு இணையத்துக்குப் போய் தமிமணத்துக்குள் போனால் இப்படித்தான் தெரிகிறது.எழுத்துக்கள் சிரியதாக.



முகப்பு பக்கம் மட்டுமே இந்த பிரச்சனை,தொடுப்புகளை சொடுக்கினாள் எவ்வித பிரச்சனையில்லாமல் எழுத்து நன்றாகவே தெரிகிறது.

மீதமுள்ள மென்பொருட்களை ஒவ்வொன்றாக சோதித்துக்கொண்டு வரும் நேரத்தில் நம்ம மயூரேசன் எழுதிய totem movie player யில் யூடியூப் படங்களை பார்க்கலாம் என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. அங்கு போய் அதில் சொல்லியிருந்தபடி நிறுவியவுடன் ஏற்படும் மாற்றங்களை கீழே பாருங்கள்.



கமலின் பேட்டி..



ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை....



தமிழியிலேயே தேடமுடியும் அதோடு வீடியோ தரமும் அருமையாக இருக்கு.

இணைய இணைப்புக்கு மாத்திரம் ஒவ்வொரு தடவையும் கடவுச்சொல் அடிக்கவேண்டியிருப்பது போன்ற சில நச்சு வேலைகள் இருப்பதை தவிர பெரிய தொந்தரவு கண்ணில் படவில்லை.

ஏதாவது ஒரு விண்டோவை மூடும் போது 3D முறையில் அழகாக மூடுகிறது.

முடிந்தால் முயற்சித்து பாருங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, April 10, 2008

எங்கெல்லாம் சுத்து்தோ!!

என்னுடைய பதிவுகளை தமிழ்மண திரட்டியில் இருந்து விலக்கச்சொன்ன பிறகு வேறு எங்கேத் தெரியப்போவுது என்று இருந்தேன்.

இன்று காலை பொழுது போகாம “ThatsTamil" பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது வலைப்பக்கத்தில் உபுண்டு- பென் டிரைவில் என்று தெரிந்தது,என்னடா நான் போட்ட தலைப்பா இருக்கே என்று பார்த்தால் அது என் சுட்டிக்குத்தான் போகிறது.அட! இப்படியெல்லாம் செய்யமுடியுமா? என்றிருந்தது.

இந்த மாதிரி எங்கெங்கு போகிறதே? யாராவது பயணடைந்தால் சரி.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, March 15, 2008

வீடியோவை பிடிக்க

லினக்ஸ் - உபுண்டுவில் வீடியோவை பிடிக்க ஒரு சுலபமான வழியை இணையத்தில் காண நேர்ந்தது,அது கீழ் வருமாறு.

இப்ப நீங்க யூடூபில் ஒரு படம் பார்க்கிற்ரிங்க அதை சேமித்து பிறகு பார்க்கவோ அல்லது யாரிடமோ காண்பிக்கவோ சேமிக்க வேண்டும்,எப்படி செய்வது?

கீழே உள்ள படத்தை பார்க்கவும்,



நான் விஜய் பாட்டை பார்க்கிறேன்... முழு பாட்டையும் உங்கள் பக்கம் கேட்ச் செய்தவுடன்,உங்கள் tmp folder ஐ திறந்து பாருங்கள் அங்கு உட்கார்ந்திருக்கும் நீங்கள் பார்த்தவீடியோ ஏதோ ஒரு பெயருடன்.அதை அப்படியே காப்பி/பேஸ்ட் முறையில் எங்கு வேணுமா அங்கு போட்டுவிட்டு அதை மறக்காமல் .flv என்று பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்.

அவ்வளவு தான்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, February 23, 2008

உபுண்டு - ஸ்கை பி

லினக்ஸில் பல வருடங்களாக இருந்த முக்கியமான தடை நேற்று எனக்கு தீர்ந்தது ஆதாவது வீடியோ/ஆடியோ Chat.

கீழே இருக்கும் படத்தை பார்த்து பயந்திடாதீங்க.. எதுக்கு 2 கேமிரா? ஒன்று வின்டோசுக்கு மற்றொன்று லினக்ஸுக்கு.இட பக்க கேமிரா வின்டோஸில் நல்ல ஒளி தரத்துடன் வீடியோ சேட் செய்ய முடியும் அதனால் அதைவிட மனதில்லை ஆனால் லினக்ஸில் வேலை செய்யவில்லை.Logitech கேமிராக்கள் பல லினக்ஸில் நன்றாக வேலை செய்கிறது.



பல வருடங்களாக மென்பொருட்கள் இருந்தாலும் ஒன்று ஆடியோ இருக்கும், வீடியோ இருக்காது.இப்படியே போய் கொண்டிருந்த வாழ்வில் ஏதோ ஒரு ஃரம்மில் லினக்ஸுக்கான மென்பொருளை ஸ்கைபி (Skype) பீட்டா வெர்ஷனாக வெளியிட்டு இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.அங்கு போய் அதை நிறுவியவுடன் முயன்று பார்த்தேன்,என்னுடைய வெப் கேம்மில் உள்ள மைக் வேலை செய்தது ஆனால் வீடியோவை பார்க்கமுடியவில்லை.

காரணத்தை கண்டுபிடிக்க சில மணி நேரம் பிடித்தது. ஸ்கைபி யை உபயோகிக்கும் முன்பு இதே மாதிரி ஒரு மென்பொருளான Ekiga வை உபயோகித்ததால் கேமிரா அதனுடன் இருந்துவிட்டது.அதை நீக்கியவுடன் கீழே உள்ள மாதிரி தெரிந்தது.





சுமார் 6 வருடங்களாக லினக்ஸில் விளையாடிய பிறகு நேற்று தான் வீடியோ/ஆடியோ சேட்டிங் கை வந்தது.

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதன் தொடர்பில் எழுதிய முந்தைய பதிவு இங்கே.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, January 23, 2008

லினக்ஸில் வரைகலை

கட்டுமானத்துறையும் இந்த வரைகலையும் இப்போது பிரிக்கமுடியாத அளவுக்கு போய்விட்டது.விண்டோஸில் இதன் தொடர்பில் பல மென்பொருட்கள் இருந்தாலும் அடிச்சிக்கமுடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பது என்னவோ “AutoCad" தான்.

இதை விண்டோஸில் புரிந்துகொள்வதற்குள் நான் படாத பாடுபட்டேன்,ஆதாவது எந்த வகுப்புக்கும் போகாமல் வெறும் கேள்வி ஞானத்துடன் முயற்சித்தேன்.கொஞ்ச நாள் விடாது விழுந்து பிறகு அலுத்து “சீ இந்த பழம் புளிக்கும்” என்று விட்டெரிந்துவிட்டேன்.

ஒரு சமயத்தில் வர வேண்டிய பிராஜட் நேர கால தாமதம் ஆக கம்பெனி செலவிலேயே அனுப்பி படிக்கவைத்தார்கள்.ஏற்கனவே மண்டைக்குள் கொஞ்சம் போட்டு வைத்திருந்ததால் ஒரு வார கோர்ஸில் தேவையானவற்றை பிடித்துக்கொண்டுவிட்டேன்.

புது பிராஜட் வந்தவுடன் வேறு இடம்,புதிய தலைவர் என்றானவுடன் கணினியும் புதிதாக வாங்கப்பட்டது.தேவையான மென்பொருள் பட்டியலில் ஆட்டோகேட்டும் போட்டு கொடுத்தேன்.

அதி வேக புது கணினி கிடைத்தது அத்துடன் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் தலைவரும் வாய்த்தார். :-)

மென்பொருள் வாங்குபவதில் சுணக்கம் தெரிந்தது.சரி, சும்மாக இருக்காமல் கம்பெனி IT ஆளுங்களுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன்,ஆதாவது லினக்ஸில் இலவசமாக கிடைக்கக்கூடிய "QCAD" உள்ளது அதை இப்போது US 50 டாலருக்கு விற்கிறார்கள்,வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்றேன்.

அவ்வளவு தான்,உடனே ஒரு பழைய கணினியில் ரெட் ஹேட் லினக்ஸை போட்டு கொடுத்துவிட்டார்கள்.அதில் வரைபடம் போடப்போகும் போது தான் ஆட்டோகேட்க்கும் அதற்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருந்தது தெரிந்தது.

சரியான விளக்கப்புத்தகம் இல்லாததாலும் சொல்லிக்கொடுக்க யாரும் இல்லாததாலும் போராட ஆரம்பித்தேன்.விடை கீழே உள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் அனுபவிக்கவும்.



இன்னும் புரிந்துகொள்ள அதிகம் இருந்தாலும் சிறிய நிறுவனங்களுக்கு இது சரியான விலையே இல்லாததாலும் பொருத்தமாக இருக்கும்.நான் உபயோகிப்பது பழைய வர்சன்.

புதிய டிரைல் வர்சனில் 10 நிமிடங்கள்,மொத்தமாக 100 நிமிடங்கள் இலவசமாக உபயோகிக்கலாம்.

ஐம்பது வெள்ளிதானா!! முயற்சிக்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, January 20, 2008

கம்பியில்லா தொடர்பு

கீழே சொல்லப்பட்டு இருக்கின்ற விபரங்கள் லினக்ஸில் வேலை செய்பவர்களுக்கு அதுவும் install shield மூலம் தரப்படுகிற நிறுவு கோப்புகளை உடைக்க உதவும்.

என்ன தலையை சுத்துகிறதா? எனக்கும் அப்படி சுத்தி தான் இப்போது தான் தெளிவடைந்தேன்.நான் தெளிவடைந்தால் போதுமா? நீங்கள் குழம்பவேண்டாமா?
தொடருவோம்.

இந்த லினக்ஸில் ஒரு வன்பொருளை வேலைசெய்வதற்குள் சில சமயம் தாவு தீர்ந்துவிடும்.ஊரோடு ஒத்துப்போய் பலர் உபயோகப்படுத்தும் வன் பொருளை உபயோகித்தால் பிழைத்தீர்கள் அப்படியில்லாவிட்டால் தேடித்தேடியே களைத்துவிடுவோம்.அதனால் என்னவோ பலரும் லினக்ஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.நான் அப்படியில்லை,வேலை செய்யும் வரை விடமாட்டேன் இல்லாவிட்டால் இதற்கு மேல் முடியாது என்றபட்சத்தில்
வேறு வேலை பார்க்க கிளம்பிவிடுவேன்.

இப்போதைக்கு எனக்கு தண்ணிகாட்டிக் கொண்டு இருக்கும் வன்பொருள் “கம்பியில்லா” அடாப்டர்.

கணினி மாற்றுபவதற்கு முன்பு பழைய புதினத்தில் சரியாக வேலைசெய்த அடாப்டர் புதிதில் வேலை செய்ய மறுத்தது.இன்றைய காலக்கட்டத்தில் இணைய இனைப்பு இல்லாவிட்டால் எந்த இயங்குதளமும் ஆக்ஸிஜன் இல்லாத செவ்வாய் போல் தான்.அதனால் எப்படியாவது இணைய இணைப்பை பெறுவதில் முட்டி மோதிக்கொண்டிருந்தேன்.பல வழிகள் செய்தும் இன்றுவரை கிடைக்கவில்லை.பல வன்பொருள் நிறுவனங்கள்

விண்டோஸுக்கு மாத்திரம் டிரைவர்கள் வழங்குவதால் அதை உடைத்து அதிலிருந்து லினக்ஸுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டார்கள்.அப்படி உடைக்க ஆரம்பிக்கும் போது அதிலும் ஆயிரம் தலைவலிகள் இருப்பது தெரிந்தது.

இந்த நிறுவல் கோப்புகள் சுறுக்கப்பட்டு இருந்தாலும் அதனுள் இருக்கும் கோப்புகளை விரிவுபடுத்தி அதனுள் இருக்கும் .inf மற்றும் .sys கோப்புகளை எடுப்பது என்பது ஒரு பிரம்மபயத்தனம்.இந்த இரு கோப்புகள் இருந்தால் லினக்ஸில் உள்ள ndiswrapper என்ற மென்பொருள் மூலம் அடாப்டருக்கு தேவையான டிரைவர்களை நிறுவிவிட்டால் ஓரளவு(ஓரளவு தான்) பிரச்சனையை தீர்த்துவிடலாம்.

இந்த நிறுவல் கோப்புகளை விரிவாக்க சரியான இலவச மென்பொருள் கிடைக்காமல் இருந்தது.கூகிளாண்டவரிடம் தேடல் முறையை வித்தியாசப்படுத்தி கேட்ட போது ஒரு மென்பொருளை காண்பித்தது அத்தோடு அதை எப்படி நிறுவுவது அதன் மேல் விளக்கங்களும் அருமையாக இங்கு சொல்லியிருந்தார்கள்.அதன் படி அந்த மென்பொருளை தரவிரக்கி ஜிப் மூலம் விரிவாக்கி அதனுள் (release கோப்பின் உள்)இருக்கும் i6comp என்னும் கோப்பை /windows உள்ளே வைத்துவிடுங்கள்.நிறுவல் எதுவும் கிடையாது.இதை கீ பாயிண்டு மென்பொருள் என்கிறார்கள்.இந்த மாதிரி மென்பொருளை command prompt யில் மூலம் வேலை வாங்கவேண்டும்.

கோப்பை வைத்தாகிவிட்டதா?

இப்போது விண்டோஸ் முலம் Command Prompt க்கு வாருங்கள்,அதில் பிராம்ப்ட் வந்தவுடன் "i6comp" என்று தட்டச்சு செய்து எண்டரை அழுத்துக்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க தேவையான கட்டளைகளை காண்பிக்கும்.நமக்கு வேண்டியது .inf and .sys மட்டுமே.அதனா ல் அடாப்டரின் .exe கோப்பை ஏதாவது ஜிப் மூலம் திறந்து அதன் கோப்புகளை ஏதோ ஒரு போட்டியில் போட்டு வைக்கவும்.அதில் நமக்கு தேவை கீழ்கண்ட 3 கோப்புகள் மாத்திரம்.

1.data1
2.data.htr
3.data2

மீதமுள்ளவற்றை நீக்கிவிடலாம்.

இப்போது திரும்ப command prompt க்கு வந்து மேலே சொன்ன கோப்புகள் உள்ள இடத்துக்கு வாருங்கள்.

>i6comp e -r data1.cab

என்று கொடுத்து எண்டரை அழுத்துக்கள் அவ்வளவு தான்.படத்தில் கண்டவாறு விரிவாக்கி அதன் போல்டரிலேயே கொண்டுபோய் சேர்த்துவிடும்.அதனுள் நமக்கு தேவையான .inf and .sys கோப்பும் இருக்கும்.



ஆமாம் இது இரண்டும் கிடைத்தால் வேலை செய்யுமா?

தெரியாது வீட்டுக்கு போய் தான் முயற்சிக்கனும். :-))
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...