Showing posts with label Fedora. Show all posts
Showing posts with label Fedora. Show all posts

Saturday, July 04, 2009

Fedora 11

இன்று காலை தரவிறக்கிய Fedora 11 Live CD ஐ முயற்சிக்க வட்டு இல்லாத்தால் சற்று முன் முஸ்தாபா வில் வாங்கி வந்தேன்.
ISO கோப்பை வட்டில் எழுதிவிட்டு பூட் செய்தேன்...
முதல் முகம்..
F11 ist page

பூட் ஆகிறது

Start f11

ஆரம்பிக்கிறது..

DSC00476

வந்திடுச்சி ஃபெடோரா 11, முகப்பு பக்கம் உபுண்டு சாயலடிக்கிறது.

DSC00477

கோப்புகள் சரியாக திறக்கிறது.

DSC00478

அடுத்து கம்பியில்லா தொடர்புகள்....இவ்வளவு இருக்கா!!

wireless


ஒவ்வொன்றாக முயற்சிக்கும் போது வெப் கேம் வந்தது அதை முயற்சிக்க சீஸ் என்ற மென்பொருள் இருந்தது வழக்கம் போல் வேலை செய்யவில்லை,அதற்கான உதவி கோப்பை தேடினால அதில் உள்ள பதில் இன்னும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது ஆதாவது உபுண்டு ஃபோரம்க்கு போகச்சொன்னார்கள். வேடிக்கையாக இல்லை??

camera

இணையம்

firefox

தமிழ் எப்படி தெரிகிறது??கீழ் படம்

Tamilmanam

படங்கள் அனைத்தும் அலைபேசியில் எடுத்ததால் தெளிவு குறைவாக இருக்கு,பொருத்துக்கொள்ளவும்.

இது லைவ் சிடி என்பதால் ஆபீஸ் மென்பொருட்கள் சேர்க்கவில்லை போலும்.மொத்ததில் நன்றாக இருக்கு.இன்னும் இந்த வெப்கேம் பிரச்சனை எப்பத்தான் தீரப்போகிறதோ தெரியலை.

Sunday, January 20, 2008

கம்பியில்லா தொடர்பு

கீழே சொல்லப்பட்டு இருக்கின்ற விபரங்கள் லினக்ஸில் வேலை செய்பவர்களுக்கு அதுவும் install shield மூலம் தரப்படுகிற நிறுவு கோப்புகளை உடைக்க உதவும்.

என்ன தலையை சுத்துகிறதா? எனக்கும் அப்படி சுத்தி தான் இப்போது தான் தெளிவடைந்தேன்.நான் தெளிவடைந்தால் போதுமா? நீங்கள் குழம்பவேண்டாமா?
தொடருவோம்.

இந்த லினக்ஸில் ஒரு வன்பொருளை வேலைசெய்வதற்குள் சில சமயம் தாவு தீர்ந்துவிடும்.ஊரோடு ஒத்துப்போய் பலர் உபயோகப்படுத்தும் வன் பொருளை உபயோகித்தால் பிழைத்தீர்கள் அப்படியில்லாவிட்டால் தேடித்தேடியே களைத்துவிடுவோம்.அதனால் என்னவோ பலரும் லினக்ஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.நான் அப்படியில்லை,வேலை செய்யும் வரை விடமாட்டேன் இல்லாவிட்டால் இதற்கு மேல் முடியாது என்றபட்சத்தில்
வேறு வேலை பார்க்க கிளம்பிவிடுவேன்.

இப்போதைக்கு எனக்கு தண்ணிகாட்டிக் கொண்டு இருக்கும் வன்பொருள் “கம்பியில்லா” அடாப்டர்.

கணினி மாற்றுபவதற்கு முன்பு பழைய புதினத்தில் சரியாக வேலைசெய்த அடாப்டர் புதிதில் வேலை செய்ய மறுத்தது.இன்றைய காலக்கட்டத்தில் இணைய இனைப்பு இல்லாவிட்டால் எந்த இயங்குதளமும் ஆக்ஸிஜன் இல்லாத செவ்வாய் போல் தான்.அதனால் எப்படியாவது இணைய இணைப்பை பெறுவதில் முட்டி மோதிக்கொண்டிருந்தேன்.பல வழிகள் செய்தும் இன்றுவரை கிடைக்கவில்லை.பல வன்பொருள் நிறுவனங்கள்

விண்டோஸுக்கு மாத்திரம் டிரைவர்கள் வழங்குவதால் அதை உடைத்து அதிலிருந்து லினக்ஸுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டார்கள்.அப்படி உடைக்க ஆரம்பிக்கும் போது அதிலும் ஆயிரம் தலைவலிகள் இருப்பது தெரிந்தது.

இந்த நிறுவல் கோப்புகள் சுறுக்கப்பட்டு இருந்தாலும் அதனுள் இருக்கும் கோப்புகளை விரிவுபடுத்தி அதனுள் இருக்கும் .inf மற்றும் .sys கோப்புகளை எடுப்பது என்பது ஒரு பிரம்மபயத்தனம்.இந்த இரு கோப்புகள் இருந்தால் லினக்ஸில் உள்ள ndiswrapper என்ற மென்பொருள் மூலம் அடாப்டருக்கு தேவையான டிரைவர்களை நிறுவிவிட்டால் ஓரளவு(ஓரளவு தான்) பிரச்சனையை தீர்த்துவிடலாம்.

இந்த நிறுவல் கோப்புகளை விரிவாக்க சரியான இலவச மென்பொருள் கிடைக்காமல் இருந்தது.கூகிளாண்டவரிடம் தேடல் முறையை வித்தியாசப்படுத்தி கேட்ட போது ஒரு மென்பொருளை காண்பித்தது அத்தோடு அதை எப்படி நிறுவுவது அதன் மேல் விளக்கங்களும் அருமையாக இங்கு சொல்லியிருந்தார்கள்.அதன் படி அந்த மென்பொருளை தரவிரக்கி ஜிப் மூலம் விரிவாக்கி அதனுள் (release கோப்பின் உள்)இருக்கும் i6comp என்னும் கோப்பை /windows உள்ளே வைத்துவிடுங்கள்.நிறுவல் எதுவும் கிடையாது.இதை கீ பாயிண்டு மென்பொருள் என்கிறார்கள்.இந்த மாதிரி மென்பொருளை command prompt யில் மூலம் வேலை வாங்கவேண்டும்.

கோப்பை வைத்தாகிவிட்டதா?

இப்போது விண்டோஸ் முலம் Command Prompt க்கு வாருங்கள்,அதில் பிராம்ப்ட் வந்தவுடன் "i6comp" என்று தட்டச்சு செய்து எண்டரை அழுத்துக்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க தேவையான கட்டளைகளை காண்பிக்கும்.நமக்கு வேண்டியது .inf and .sys மட்டுமே.அதனா ல் அடாப்டரின் .exe கோப்பை ஏதாவது ஜிப் மூலம் திறந்து அதன் கோப்புகளை ஏதோ ஒரு போட்டியில் போட்டு வைக்கவும்.அதில் நமக்கு தேவை கீழ்கண்ட 3 கோப்புகள் மாத்திரம்.

1.data1
2.data.htr
3.data2

மீதமுள்ளவற்றை நீக்கிவிடலாம்.

இப்போது திரும்ப command prompt க்கு வந்து மேலே சொன்ன கோப்புகள் உள்ள இடத்துக்கு வாருங்கள்.

>i6comp e -r data1.cab

என்று கொடுத்து எண்டரை அழுத்துக்கள் அவ்வளவு தான்.படத்தில் கண்டவாறு விரிவாக்கி அதன் போல்டரிலேயே கொண்டுபோய் சேர்த்துவிடும்.அதனுள் நமக்கு தேவையான .inf and .sys கோப்பும் இருக்கும்.



ஆமாம் இது இரண்டும் கிடைத்தால் வேலை செய்யுமா?

தெரியாது வீட்டுக்கு போய் தான் முயற்சிக்கனும். :-))

Monday, September 24, 2007

லினக்சும் வெப் கேமிராவும்

நம்ம லினக்ஸ்க்கு கொஞ்ச வருடங்களுக்கு முன்பு USB மற்றும் வெப் கேமிரா என்றால் வேப்பங்காய் போல் கசக்கும்.

எனக்கு பிடித்த ஆளுடன் தான் வேலை செய்வேன் என்று சொல்லி வேலை செய்வார்,் அதுவும் அமெரிக்கா & யூரோப் ஆளுங்க உபயோகிக்கிற மாடலுடன் தான் வேலை செய்வார் இல்லை அந்த கேமிராவுக்கும் மாத்திரம் தான் டிரைவர் கிடைக்கும்.

நான் லினக்ஸில் கை வைக்கும் போது உள் இருக்கும் மோடத்துடன் சண்டை போட்டு ஓய்ந்து போனான்,பிறகு நம்ம USB Thumb drive அதற்கு பிறகு வெப் கேமிரா.இந்த மூன்றாவது எனக்கு தண்ணி காண்பித்த மாதிரி வேறு எதுவும் காட்டவில்லை.

பல மாதங்களுக்கு முன்பு நமது சக பதிவாளர் மயூரன் இந்த வெப்கேமராவை லினக்ஸில் எப்படி முடிகிறது என்று சொல்லி ஒரு படமும் ஏற்றியிருந்தார்.

அப்போதில் இருந்து நம் கேமராவையும் எப்படியாவது லினக்ஸில் நிறுவிவிடவேண்டும் என்று முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பழைய லாஜிடெக் வெப் கேமரா கிடைத்தது.அதன் மாடல் எண் எதுவும் இல்லை. இருந்தாலும் படத்தை வைத்து வின்டோஸுக்கான டிரைவர் பிடித்து அது வேலை செய்கிறதா என்று தெரிந்துகொண்டேன். அடுத்ததாக லினக்ஸ்.

லினக்ஸை பொருத்த வரை இந்த பக்கத்தில்தான் நிறைய வெப்கேமிராவுக்கு வேண்டிய டிரைவர் கிடைக்கும்.அதையும் இரண்டாக பிரித்து 2.4. & 2.6 கெர்னல் என்று கொடுத்துள்ளார்கள். என்னுடைய லினக்ஸ் 2.6 என்பதால் அதை தரவிரக்கி நிறுவினேன்.

இதில் எப்படி வெப்கேமிரா வேலை செய்கிரதா என்று பார்க்க கீழே உள்ள மென்பொருளை ஆரம்பித்தேன்,சில செட்டிங்களை கொடுத்தவுடன் கேமிரா மூலம் என் படம் தெரிய ஆரம்பித்தது.்




இதை விண்டாஸ் ஆளுங்களுக்கு காண்பிக்க amsn என்ற மென்பொருள் உதவியாக இருக்கும் என்று நினைத்து அதையும் நிறுவினேன். நேற்று இரவு என்னுடைய தொடுப்பில் உள்ள ஒருவரும் இணையத்தில் இல்லாததால் சோதிக்க முடியவில்லை.

முடிந்த பிறகு சொல்கிறேன்.

Wednesday, September 19, 2007

Wireless in Linux

இந்த USB க்கும் லினக்ஸுக்கும் பல சமயங்களில் பொருந்தியே வராது.ரெஹேட் 7 யில் இருந்து பார்த்துக்கொண்டு வருகிறேன்.பல விஷயங்களில் நம்மை போட்டு பார்த்திடும்.இந்த மாதிரி சிறிய பிரச்சனைகளாலேயே பல புதியவர்கள் இந்த பக்கம் தலைவைத்து கூட படுப்பதில்லை.

இதற்கு முன் நான் உபயோகித்து வந்த 3G கம்பியில்லா தொடர்பை நிறுத்திவிட்டு என்னுடைய வீட்டில் உள்ள அகலக்கட்டை இணையத்துக்கு மாறலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது,எந்த விதமான வன்பொருள் லினக்ஸ்/வின்ன்ட்டோஸுக்கு ஒத்துவரும் என்று பார்த்தேன்,அதோடில்லாமல் பிற்காலத்தில் டெஸ்க்டாப்பை தூக்கிப்போட்டுவிட்டாலும் மடிக்கணினியில் உபயோகப்படுத்துகிற மாதிரி இருந்தால் நலம் என்று ஆராய்ந்துகொண்டிருந்தேன்.இப்போது இருக்கும் வீட்டில் கம்பியில்லா தொடர்பு உள்ளது அதற்கு தகுந்த மாதிரி என்னுடைய மேஜை கணினியில் PCI வைகையை சேர்ந்த கம்பியில்லா அட்டை போடவேண்டும்.இல்லாவிட்டால் USB அடாப்டர் மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.

நான் துணிந்து இறங்கியது USB அடாப்டர் பக்கம்,அதற்கு காரணம் விலை குறைவு,மடிக்கணினியிலும் உபயோகப்படுத்தலாம்.

ஒரு வாரம் முன்பு இங்குள்ள சிம் லிம் ஸ்கொயர் கடைத்தொகுதிக்கு போய் ஒவ்வொரு கடையாய் ஆராய்ந்துகொண்டிருக்கும் போது ஒரு கடையில் இருந்த சிப்பந்தி நான் எடுத்த Linksys அடாப்டரை பார்த்துவிட்டு இதைவிட விலை குறைந்த அடாப்டர் உள்ளது பார்க்கிறீர்களா? என்று சொல்லி அதன் விபரங்களை சொன்னார்.

விலை குறைவாக இருந்தது அத்துடன் அதன் அட்டையில் இது லினக்ஸ்ஸில் வேலை செய்யும் என்று போட்டிருந்தது. சரி என்று வாங்கிக்கொண்டேன்.

அதற்கான வின்ன்டோஸ் மென் பொருளை போட்டபோது கொஞ்ச நேரம் பிகு பண்ணிவிட்டு வேலை செய்ய ஆரம்பித்தது.

அடுத்து லினக்ஸில்..

கொடுத்த வட்டில் என்ன செய்யவேண்டும் என்று விரிவாக கொடுத்திருந்தார்கள் எல்லாம் சரியாக செய்தும் அந்த மென்பொருளை நிறுவ முடியவில்லை,கணினி மொழில் பிழைச்செய்து வந்து நின்றுவிட்டது.லினக்ஸில் ஒரு வன்பொருள் வேலைசெய்ய அதன் சிப் பெயர் தெரிந்தால் குழுமம் மூலம் நமக்கு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வன்பொருளுடன் வந்த வட்டில் பல கோப்புகளின் பெயர்கள் அதன் சிப் பெயரில் இருந்ததால் மிக எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.அதன் பிறகு குழுமத்தில் போய் தேடிய போது பல விபரங்கள் கிடைத்தது அதில் ஒன்று தான் இந்த USB அடாப்டருக்கு உள்ள Firmware ஐ இறக்கி அதை /usr/lib/firmware யில் போடவேண்டும் என்பது.
அதையும் செய்துவிட்டு பார்த்தால்...ஹூகும் சரியாக வரவில்லை.

கடந்த இரண்டு நாட்களாக பல குழுமத்தில் கேள்வி கேட்டும் எதுவும் சரியாக வரவில்லை.கடைசியாக நேற்று இரவு முயற்சித்த போது பல முறை கடவு எண்ணை கொடுத்த போது ஒரு முறை தொடர்பு ஏற்படுத்திக்கொண்டது.

முதல் முறையாக ஒரு USB அடாப்டர் லினக்ஸில் அதுவும் கம்பியில்லா தொடர்பு மூலம் வேலை செய்வதை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

கீழே அடாப்டரின் படம்.



இந்த அடாப்டர் சிங்கை வெள்ளி 35 க்கு வாங்கினேன் பிறகு தான் தெரிந்தது அமெரிக்காவில் இது சுமார்16 சிங்கப்பூர் வெள்ளிக்கு கிடைக்கிறது என்று.இதுக்காக அமெரிக்கா போக முடியுமா?

என்ன இருந்தாலும் 100% க்கு மேலா வைத்து விற்பது!! கொடுமைதான்.

Thursday, June 07, 2007

லினக்ஸில் தமிழ்

போன பதிவில் புதிதாக வெளியிடப்பட்ட பெடோரா 7 பற்றி சொல்லியிருந்தேன்.

பயர்பாக்ஸ்ஸில் தமிழ் உள்ளீடு செய்ய நம் நண்பர் திரு முகுந்த்தின் தமிழ் கீயை நிறுவினால் போதும்,அதுவே ஓபன் ஆபீஸில் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் உபுண்டு லினக்ஸில் மிக சிரமப்படவேண்டும்.

அதுவே பெடோராவில் எப்படி செய்வது என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது,ஆர்வம் உள்ளவர்கள் முயலலாம்.

svenkatesan என்பது நான் தான்.:-))

பெடோரா 7

போன 31ம் தேதி வெளியிடப்பட்ட புது மேம்படுத்தப்பட்ட பொதினம் ஃபெடோரா 7.
மிக அருமையான முகப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான ஒன்று
உங்கள் தேவைக்கேற்ப இந்த லினக்ஸை மாற்றி அமைத்து அதை லைவ் வட்டாக வேண்டும் இடத்துக்கு எடுத்துச்செல்லாம்.கணினியில் நிறுவி அவஸ்தப்படவேண்டாம்ஆதற்காக பிரத்யோகமாக ரிவைஸர் என்ற மென்பொருளை இலவசமாக கொடுக்கிறார்கள்.
இங்கு
இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?
ஆர்வம் உள்ளவர்கள் முயலுங்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நிறுவினேன்,படங்களுடன் பிறகு பதிவுகிறேன்.

Thursday, April 19, 2007

Fedora வில் மென்பொருள்

Fedora என்பது லினக்ஸ்ஸில் இருக்கும் பல பதிவுகளில் ஒன்று.இது முதன் முதலில் எனக்கு தெரிந்து போது RedHat 7 என்று வர ஆரம்பித்து பிறகு Fedora Core 1~6 வரை வந்துவிட்டது.இப்போது Fedora 7 டெஸ்ட் பதிவு 3 வரை ஓடிக்கொண்டிருக்கிறது.
முதலில் இருந்தே உபயோகப்படுத்திவருவதால் எனக்கு மிகவும் பிடித்த லினக்ஸ்ஸில் இதுவும் ஒன்று.

Fedora வில் மென்பொருள் நிறுவுதல் பற்றி பார்ப்போம்.

போன பதிவில் உபுண்டு லினக்ஸ்ஸில் மென்பொருள் நிறுவுவது பற்றி சொல்லியிருந்தேன்.
இப்போது பெடோராவில் எப்படி என்று பார்ப்போம்.
ஆங்கிலத்தில் இதன் அரிச்சுவடி இங்குள்ளது.
உங்களுக்கு கமேன்ட் லயினின் மூலம் நிறுவ அதிக விருப்பம் இருந்தால் அதற்கு ஏற்ற மென்பொருள் இந்த இயங்குதளத்தின் கூடவே வருகிறது.அதற்கு YUM (yello Dog updater,Modofiyer) என்று பெயர்.இதன் பயன்பாட்டை ஆரம்பம் முதலே அவதானித்து வந்துள்ளேன்.இதில் YUM மாத்திரம் மட்டும் அல்ல வேறு சில மென்பொருட்களும் உள்ளது.(உ-ம்)WGET,apt-get,uptodate.

நாம் YUM ஐ பார்ப்போம்.

இந்த கமென்ட் லயினை மேம்படுத்தி கிராபிகள் முறைக்கு ஏற்றவாறு "Yum Extender" என்று பெயரிட்டுள்ளார்கள்.இதுவும் Snaptic மாதிரி தான்.

ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாமா?

சிஸ்டம் டூல் --> டெர்மினல் போய் திறக்க வேண்டும்.



இது நமது வின்னோஸில் உள்ள டாஸ் மாதிரி விண்டோ திறக்கும்.
அதில் உங்கள் பெயரோடு வந்து கடைசியில் கர்சர் நின்றுகொண்டு நிற்கும்.


ஆதாவது உங்கள் கட்டளைக்காக காத்திருக்கிறது.

என் கணினியில் எவ்வளவு மென்பொருள் உள்ளது என்பதை காண்பிக்க

YUM LIST ALL என்று அடித்தால் போதும்,உள்ளே இருக்கும் அவ்வளவையும் கொட்டி காண்பித்துவிடும்.

மென்பொருளை நிறுவ அட்மினிஸ்ட்ரேட்டர்(லினக்ஸ்ஸில் அதற்கு Root அக்கவுன்ட் என்று பெயர்) அனுமதி தேவை அதனால்,

su - (ஆதாவது சூப்பர் யூசர்,ஒரு ஸ்பேஸ் அதற்குப்பிறகு மைனஸ்) Enter,

உங்கள் கடவு எண்ணை கேட்கும்.

சரி,ஏதோ ஒரு மென்பொருளை நிறுவ.. உதாரணத்துக்கு மீடியா பிளேயர்.

yum install mediaplayer

நிஜமாக அவ்வளவு தாங்க.

இப்படி கமென்ட் கொடுத்தவுடன் அது என்ன பண்ணும் அதனுள் ஏற்கனவே உள்ள Repositries க்கு போய் தேவையான மென்பொருளை பார்த்து,ஒரு லிஸ்ட் போட்டு கீழ்கண்ட மென்பொருட்கள் நிறுவ வேண்டியுள்ளது என்றும் YES or No என்று கேட்க்கும்.Y அடித்து சம்மதம் சொன்னால் தேவையானவற்றை நிறுவி,முடிந்த செய்தியை கொடுக்கும்.

எனக்கு எப்படி தெரியும் என்ன மென்பொருள் இருக்கிறது ? எங்கு கிடைக்கிறது ? நல்ல கேள்வி தான்.

இங்கு பலதரப்பட்ட மென்பொருட்கள் கொட்டிக்கிடக்கிறது,உங்கள் தேவையை தேடுதல் மூலம் கண்டுகொள்ளலாம்.

பல மென்பொருட்களுக்கு கணினியை மூடி திறக்கவேண்டிய அவசியம் இருக்காது.

எனக்கு இந்த கமென்ட் லயின் சரிப்படாது படம் போட்ட மாதிரி இருந்தா நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள்.

டெர்மினலில் ஒரே ஒரு தடவை yum install yumextender போட்டு Enter ஐ தட்டிடுங்க.கொஞ்ச நேரத்தில் அந்த மென்பொருள் நிறுவப்பட்டுவிடும்.

முடிந்த பிறகு, நீங்க பட முறையில் மென்பொருளை நிறுவலாம்.

கீழே பாருங்க.



என்னங்க ஏதோ புரிந்த மாதிரி இருக்கா,புரியவில்லை என்றால் அதற்கு நான் தான் காரணம்.:-))

கேள்வி இருந்தா கேளுங்க எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்.இதில் நானும் கத்துக்குட்டி தான்.