Wednesday, August 30, 2006

"படத்துடன்" லைவ் சிடி

இப்பொது நான் எடுத்துக்கொண்டிருக்கும் இயங்கு தளம் "உபுண்டு லினக்ஸ்"

CD rom உள்ளே போட்டு கனிணியை ஆரம்பியுங்கள்.

ஏற்கனவே நான் நமது BIOSயில் மாறுதல் செய்தபடியால் கனிணி முதலில் சிடி ராமை பார்க்கும்.நமது லைவ் சிடி ஒரு இயங்கு தள சிடியாக இருப்பதால்,அதை தொடங்கும்.

Photobucket - Video and Image Hosting

இந்த ஸ்கிரீன் வந்தவுடன் "என்டர்"ஐ அழுத்தவும்.

முதலில் பல வரிகள் ஓடும் கவலைபடாதீர்கள் அது தனக்கு தேவையான வன்பொருட்கள் விபரங்களை எடுத்துக்கொண்டு அதற்கான driversஐ உங்களுடைய Ram யில் போட்டுவைத்துக்கொள்ளும்.இப்படி

Photobucket - Video and Image Hosting

தட தடன்னு ஓடினபிறகு ஒரு மொட்டையான திரை வரும்,பயந்திடாதீங்க...

அப்புறம் இதெல்லாம் கேட்கும்.கேட்டதை கொடுக்கவும்.

Photobucket - Video and Image Hosting

இதையும் கொடுங்க...

Photobucket - Video and Image Hosting

அப்புறம் வாங்க அடுத்த பதிவுக்கு மீதியையும் தரேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, August 28, 2006

இலவச சிடி

இயங்கு தளம் இலவசம்!
மென்பொருட்கள் இலவசம்!
பாதுகாப்பு கவசம் இலவசம்!

இப்படி பல விஷயங்கள் இலவசமாக இருக்கும் போது ஏன் இந்த சிடியையும் இலவசமாக கொடுக்கக்கூடாது.இணைய இனைப்பு அவ்வளவு சரியாக இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
அந்த மாதிரி எதுவும் இருக்கா?

இருக்கே!!

வீட்டுக்கே அஞ்சலில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!இன்னும் பலர் முயற்சிக்கலாமே?

நல்ல கேள்வி தான்.இன்னும் பலர் மிக மோசமான இணைய இணைப்பிலேயே வாழ்கிறார்கள் அவர்களுக்காக ..

இந்த தளத்திற்குப்போய் உங்கள் விபரங்களை கொடுத்தால் உங்கள் வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள்.இதில் 2 விதமான வட்டுக்கள் இருக்கும் (படத்தை பார்க்கவும்).
Photobucket - Video and Image Hosting

ஏதோ வீட்டுக்கே இலவசமாக அனுப்புவதால் இதை விற்க முயற்சி செய்யாதீர்கள்.அது போல் தேவைக்கு அதிகமாகவும் ஆர்டர் செய்யவேண்டாம்.பலர் சேர்ந்து ஒரே ஆர்டர் கொடுத்தால் அனுப்புவருக்கும் சுலபமாக இருக்கும் அவரும் அனாசியமாக செலவு செய்யவேண்டாம் அல்லவா?

லைவ் சிடி தரவிறக்கம் செய்ய இங்கே போகவும்

லினக்ஸில் பலவிதம் இருப்பதை போல அதை நிறுவக்கூடிய கனிணியை பிராசசரை பொருத்து எந்த விதமான வட்டை ஆர்டர் பண்ணவேண்டும் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

1.X86-கனிணிகள்-பொதுவாக 64 பிட் பிராசசர் தவிர எல்லா இன்டெல் பிராசசர் கனிணிகளுக்கும் பொருந்தும்.
2.AMD-பிராசசர் உள்ள கனிணிக்கு,
3.PPC-என்று சொல்லப்படுகிற Macintosh கனிணிக்கு உகந்தது.

எதை நீங்கள் தரவிறக்கம் செய்யப்போகிறீர்களா அதையும் இந்த முறையிலேயே இறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சரி வட்டு இப்போது உங்கள் கையில்.

முதலில் லைவ் சிடியை பார்ப்போமா??

இரு இரு!!??

எல்லாமே இலவசம் ஆதனால் எல்லாவற்றையும் எழுத்திலேயே போடலாம் என்று பார்கிறாயா?

கொஞ்சம் படம் போட்டு சொல்லு,புரியமாதிரி இருக்கும்,என்கிறீர்களா?

அதுவும் சரி ஆனா அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, August 23, 2006

லயிவ் சிடி

எல்லாம் இருக்கு ஏதோ பிரச்சனை என்றால் யாரை பார்ப்பது?

பக்கத்தில் தெரிந்தவர்களிடம் கேட்கவும் அல்லது உங்கள் குழுமத்தில் கேள்வி கேட்டு பதில் பெறலாம்.நீங்கள் உபயோகப்படுத்தும் லினக்ஸின் Forumயில் கேள்வி பதில்கள் கொட்டிக்கிடக்கின்றன.அள்ளிக்கீங்க.

எங்களால் அப்படி எல்லாம் தொப்புன்னு குதிக்கமுடியாது இன்னும் நிறைய சந்தேகம் இருக்கு அதனால் இதை கனிணியில் நிறுவாமல் முயற்சி செய்து பார்க்கமுடியாதா??

முடியுங்க!! அதற்கு வேண்டியது உங்களிடம் உள்ள கனிணியில் CD rom மட்டும் தான்.
லினக்ஸ் சிலவற்றில் "லைவ் சிடி"என்று ஒன்று கொடுக்கிறார்கள் இதுவும் தறவிரக்கம் செய்துகொள்ளலாம்.ஓரே ஒரு சிடி அளவுக்கு இருக்கும்.ISO ·யில் கிடைக்கும் பட்சத்தில் அதை சிடி எழுத்தர் மூலம் பூட்டபிள் சிடியாக எழுதிக்கொள்ளவும்.

அடுத்து உங்கள் BIOS ஐ முதல் பூட் ஆப்ஷனை சிடிக்கு மாத்திக்குங்க.அதென்னங்க BIOS?

சரி தெரியாதவங்களுக்கு..

BIOS என்பதற்கான முழு விளக்கம் Basic Input Output System--ஆதாவது கனிணி ஆரம்பிக்கும் போது எதையதை பார்க்கவேண்டும் எங்கே தேடவேண்டும் மற்றும் எது முதலில் துவங்க வேண்டும் என்ற நியதி எழுதப்பட்டிருக்கும் இடம்.

இதில் பூட் ஆப்ஷன் என்று ஒன்று இருக்கும் அதில் போய் முதல் பூட்டுக்கு சிடியை பாரு என்று மாத்திவிட்டு மறக்காமல் சேமித்து வெளியேறிவிடுங்கள்.

நிறுத்து நிறுத்து..

முதலில் உள்ளே போகவே வழியை சொல்லவில்லை அதற்குள் வெளியேறும் வழியை சொல்ற?

மன்னிக்கனும்.

உள்ளே போற வழி!

ஒவ்வொறு கனிணிக்கும் ஒரு கீ.கனிணி பூட் கும் போது Esc அல்லது F2 அல்லது F10 கீயை விட்டுவிட்டு தட்டிக்கொண்டிருந்தால் இந்த Bios ஸ்கீரீன் வரும்.உங்க சுட்டி வேலை செய்யாததால் ஏரோ மற்றும் பேஜ் மேலே கீழே கீகளை உபயோகித்து மாற்றங்கள் செய்து,சேமித்து வெளியேறுங்கள்.மற்றவற்றில் கைவைத்து சூடு பட்டுக்கொள்ளாதீர்கள்.

சரி அப்புறம்?

வாங்க அடுத்த பதிவுக்கு.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

லினக்ஸ் (3)

லினக்ஸைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இதை படிக்கவும்.

இதையும் பாருங்க

விண்டோஸ் ஒரு கனிணியில் போட அதை வாங்கவேண்டும் அதுவும் ஒரு கனிணியில் மட்டும் தான் உபயோகிக்க முடியும்.இதில் உங்களுக்கு கிடைப்பது வெறும் இயங்கு தளம் தான்.ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் இணையத்தளத்துக்கு போய் தேவையான தகவல்களை பெறமுடியும்.

லினக்ஸை நீங்கள் எவ்வளவு கனிணியில் வேண்டுமானாலும் நிறுவலாம்,ஏனென்றால் இதன் சோர்ஸ் கோடு இலவசமாக கொடுக்கப்படுகிறது.அகலக்கட்டை இணைப்பு இருக்கும் பட்சத்தில் கீழ் கண்ட இணையப்பக்கத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.அல்லது நிறைய Groups (yahoo) உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள குழுமமாக பார்த்துக்கொண்டால் அவர்களிடம் இருந்தும் இந்த வட்டுக்களை வாங்கிக்கொள்ளலாம்.

லினக்ஸில் என்ன என்ன உள்ளது.

இதில் XP யில் உள்ளது போல் பல பயனார்கள் உபயோகப்படுத்தும் முறை இருக்கிறது.

Fire wall என்ற தடுப்புமுறையும் உள்ளது.

முக்கியமா ஓபன் பீஸ் உள்ளது இதில் மைக்ரோசாப்ட் பீஸ் உள்ளது போல் வேர்ட்,எக்ஸ்சல்,பவர்பாயின்டும் இருக்கிறது.

நீங்கள் வரைகலையில் விருப்பம் உள்ளவரா?ஆட்டோகேட் வாங்கமுடியாத பாக்கியசாலியா? பிடி "க்யுகேட்".இது அவ்வளவும் இலவசம்.க்யுகேட் &ஆ ட்டோகேட் ஒப்பிட்டு பார்க்கமுடியாது இருந்தாலும் மோசமில்லை.

ப்ரொக்ராமிஙில் செய்ய கம்பைலர் தேவையா... இருக்கு GCC.

இன்னும் பல!! அனைத்தும் இலவசம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

லினக்ஸ் (2)

லினக்ஸ் 1 இங்கே

லினக்ஸ் என்பது ஒரு பொதுவான பெயர் இதன் source code வெளிப்படையாக கிடைப்பதால் இதைக்கொண்டு பலர் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வெளியிடுகிறார்கள்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

Fedora
Suse
Debian
Ubuntu
Mandriva
Simply Mepis
Small Linux
Knoppix
Cent OS
Free BSD
PCLinux
Slackware
Kubuntu

இவை அத்தனையும் அதன் அதன் வலைத்தளங்களில் கிடைக்கும்.நான் உபயோகப்படுத்தியதில் என்னை கவர்ந்தது Fedora.

மேலும் தொடர வாங்க அடுத்த பதிவுக்கு..
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, August 16, 2006

லினக்ஸ் 1

முந்தய அனுபவங்கள் 1,2

Win95 யில் ஆரம்பித்து ஒரளவு தேர்ச்சி பெற்ற பிறகு கையை வைத்துக்கொண்டு சும்மாக இருக்கமுடியாமல் என்ன செய்வது என்று அலைந்துகொண்டிருந்த காலத்தில் கண்ணில் பட்டதுதான் லினக்ஸ்.

இதைப்பற்றி இங்கு செவ்வாய் தோறும் வரும் கம்பியூடர் டைம்ஸ்சில் அவ்வப்போது வரும் படைப்புகளை படித்தது தான்.வேறெந்த அநுபவமும் இல்லை.

மிக முக்கியமாக சொல்ல வேண்டியது நான் கனிணி வல்லுனர் அல்ல அவ்வப்போது கண்ணில் படுகிற காதில் விழுகிறதை வைத்து முட்டி மோதி தெரிந்து கொள்கிற சாதாரன ஆள்.

இந்த மாதிரி சமயத்தில் ஒரு நாள் நூலகத்தில் மேய்து கொண்டிருக்கும் போது "ரெட் ஹேட் 7" லினக்ஸ் என்று கண்ணில்பட்டது.சில பக்கங்களை புரட்டியதும் ஒரளவு புரிந்தது.சரி முயற்சிக்கலாம் என்று புத்தகத்தையும் வட்டையும் வாங்கிக்கொண்டு வந்தேன்.

அப்போது என்னுடைய கனிணியில் முக்கியமான கோப்புகள் எதுவும் இல்லாததால் இந்த மாதிரி முயல எந்த வித தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தேன்.

ஆமாம் விண்டோஸ் நல்லா இருக்கும் போது இதை எதுக்கு உபயோகப்படுத்தனும்?
ஞாயமான கேள்வி தான்.

இதுக்கு விடை வரும் பதிவுகளில் காணலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...