Saturday, September 30, 2006

லினக்ஸ் நிறுவுதல்

இதற்கு முந்தைய பதிவில் லைவ் வட்டு மூலம் எப்படி பார்பது என்பதை பார்த்தோம்.

இப்போது எப்படி நிறுவுவது என்று பார்கலாம்.

முதலில் உங்கள் "பூட்" ஆப்ஸனை திறந்து உங்கள் கணினி வட்டுமூலம் பூட் செய்யுமாறு மாற்ற வேண்டும்.

இதை அடைய ஒவ்வொறு கணினியிலும் ஒவ்வொறு மாதிரி.சில கணினியில் "Esc" or "F2" வை அழுத்த வேண்டும். சரியான சமயம் தெரியாவிட்டால் "tap" செய்துகொண்டிருந்தால் இந்த screen வரும்.
மவுஸ் வேலை செய்யாததால் தட்டச்சில் உள்ள அம்புக்கீ கொண்டு "பூட்" க்கு சென்று பிறகு கீழே செல்லக்கூடிய அம்பின் மூலம் -First Boot க்கு சென்று "Page up /down " கீ மூலம் சிடி ராம் க்கு மாற்றவும்.

பிறகு மறக்காமல் சேமித்துவிட்டு வெளியேறவும்.

இப்போது நான் நிறுவ எடுத்துக்கொண்ட லினக்ஸ் "Mandriva 2006".

இதை எனது அலுவலக நண்பன் திரு.Poo Chin Bee, தரவிரக்கம் செய்து எரித்துக்கொடுத்தான்.

அவனுக்கு நன்றி சொல்வோம்.

இனி தொடங்கலாம் நிறுவுதலை.

வட்டை சிடி அல்லது டிவிடி டிரைவில் போட்டு தொடங்கவும்.

இது என்னுடைய கணினிக்கு ஒத்து வராததால் நான் எப்படி என் கணினியில் செய்தேன் என்பதை வரும் பதிவுகளில் காணலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, September 18, 2006

அலாரம்

பிரச்சனை முந்தாநாள்(17Sep06) குவைத் ஹரியுடன் பேசி முடிக்கும் வேலையில் ஆரம்பித்தது.அப்போது நான் fedora 5 யில் என்னுடைய வெப்காமை வேலைசெய்ய வைக்க பிரம்மபிரயத்தனம் செய்துகொண்டிருந்தேன்.

ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

அவரோடு வெறுமனே Type தானே பண்ணிக்கொண்டிக்கோம் சரி அதற்குள் எதுவும் புதிய மென்பொருள் இருக்கிறதா என்று பார்பதற்கு உதவும் yum Extender என்று சொல்லப்படுகிற "yumex" ஐ சொடுக்கினேன்.வழக்கம் போல் எல்லாம் சரியாக போய்கொண்டிருந்த வேளையில் திடிரென்று system hang ஆகிவிட்டது.என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை.சரி இதற்கு மேல் நேரம் இல்லை என்பதால் கணினியை மூடிவிட்டு சென்றுவிட்டேன்.

Photobucket - Video and Image Hosting


இத்தனை நாள் இப்படி நடக்காததால் மண்டைக்குள் ஒரு அரிப்பு.என்ன காரணம்? என்று.

பல நாட்கள் இதன் பக்கம் போகாததால் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன.Fedora forum.org போய் "Yumex" என்று தேடியபோது பலருக்கு இப்படி நேர்தது தெரிந்த்தது,அதற்கான விடையும் கிடைத்தது.தாவது இந்த மாதிரி மென்பொருட்கள் இருக்கும் இடத்தை லினக்ஸில் "Repositries" என்று சொல்வார்கள்.இது பல இடங்களில் இருப்பதாலும் சிலவற்றுக்குள் ஒத்துப்போகாத தண்மை கொண்டிருப்பதாலும் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரியவந்தது.அதற்குரிய setting யில் சில மாறுதல்களை செய்யச்சொல்லியிருந்தார்கள்.

இதை onlineயில் படித்துக்கொண்டிருக்கும் போதே மற்றொரு முறை முயற்சிப்போம் என்று சொடுக்கினேன்.கொஞ்ச நேரத்துக்கு சரியாக இருந்தது.இந்த நேரத்தில் தேவையான மாறுதல்களை பண்ணலாம் என்றால் எல்லாம் Grey out க இருந்தது.

சிறிது நேரத்துக்குப்பிறகு புரிந்தது.

இணையத்தில் இருந்து விடுவித்துக்கொண்டு திரும்பவும் Yumex ஐ சொடுக்கி தேவையான மாறுதல்களை செய்தபிறகு திரும்ப முயற்சித்தேன்.

சரியாகிவிட்டது.

அதற்கு பிறகு மயூரன் சொல்லியிருந்த ஒரு மென்பொருளையும் (ffmpeg) நிறுவினேன்.இனிமேல் தான் அதை திறந்து பார்க்கவேண்டும்.

இதை முடிக்கவே மணி இரவு 10.45 கிவிட்டதால் கணினியை மூடிவிட்டு பல் துலக்கிவிட்டு படுக்கைக்கு போக மணி 11 ஆகிவிட்டது.

அலாரம் நின்று போயிருந்ததால் அதை 24 மணி நேரக்கணக்கில் சரி செய்து காலை 4.45க்கு அலாரம் வைத்து தூங்கிவிட்டேன்.

முழிப்பு வந்து பார்த்தால் மணி காலை 2.45!!

என்ன இன்று இவ்வளவு சீக்கிரம் முழிப்பு வந்துவிட்டதே என்று திரும்ப தூங்கி எழுத்து பார்த்தால் காலை 3.58.

சே!!

என்னாயிற்று இன்று முழிப்பு இவ்வளவு சீக்கிரமே வந்துவிட்டது?? என்று யோசித்தபடியே திரும்ப படுக்கலாம் என்ற போது..

கா.. கா.. கா..

இவ்வளவு சீக்கிரம் காக்கா கரையாதே? என்ற யோஜனையுடன் ஹாலில் வந்து பார்த்தால் காலை மணி 6.

அப்புறம் என்ன?

சும்மா உட்கார்ந்திருப்பது,மூச்சுப்பயிற்சிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வேலைகளை மாற்றி மாற்றி செய்துவிட்டு 7.05க்கு வேலைக்கு கிளம்பினேன்.

நல்லா தூங்கியதற்கு காரணம் அலாரம் மட்டும் இல்லை..

மற்றொரு லினக்ஸில் (மேன்ரேக்-10.1)யில் என் மற்றொரு வெப்காம் வேலை செய்ததும் தான்.

அதைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, September 08, 2006

உபுண்டு-கடைசி படங்கள்

பிரிஃபரன்ஸ் கீழே

Photobucket - Video and Image Hosting

இது அட்மினிஸ்ரேஷன்

Photobucket - Video and Image Hosting

சிஸ்டம் உள்ளே

Photobucket - Video and Image Hosting

லாக் அவுட்

Photobucket - Video and Image Hosting

நண்பர்களே இது வரை பார்த்தது லைவ் சிடி எனப்படுகிற வட்டிலிருந்து எடுத்தது.

இனி இதை நிறுவும் போது செய்யவேண்டியது என்ன, மற்றும் பல விபரங்களை அவ்வப்போது கொடுக்கிறேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, September 05, 2006

உபுண்டு-மீதி படங்கள்(1)

லைவ் சிடியில் வந்துள்ள மீதிபடங்களை இங்கு பார்ப்போம்.

இதில் உள்ள ஜிம்ப் என்ற மென்பொருள் போட்டோ ஷாப்புக்கு ஈடானது.என்னுடைய புகைப்படத்தை இதன் மூலம் தான் மாற்றி அமைத்தேன்.


Photobucket - Video and Image Hosting

இதில் உள்ள "எவலூஸன்" அவுட்லுக் எக்ஸ்ப்ரஸ் க்கு ஈடானது.

Photobucket - Video and Image Hosting

அடுத்து "பிலேசஸ்"

Photobucket - Video and Image Hosting

இது சிஸ்டம் கீழ் உள்ளவைகள்ஏனோ படம் சின்னதாகிவிட்டது.

Photobucket - Video and Image Hosting

மிச்சத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, September 03, 2006

உபுண்டு-லினக்ஸ்

போன பதிவுகளில் லைவ்-வட்டின் மூலம் டெஸ்க் டாப் வரை பார்த்தோம் இப்போது மீதியை பார்ப்போம்.

எப்போதும் வின்டோஸ்யில் "Start" கீழே இருக்கும், லினக்ஸ்யில் மேலே இருக்கும்.கவலைப்படவேண்டாம்.இதுவும் மாற்றக்கூடியது தான். "Start"க்கு பதில் அப்ளிகேஷன்யில் தொடங்க வேண்டும்.
ஆபீஸ் உள்ளே இருக்கும் சிலவற்றை படத்தில் பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

சவுண்டு & வீடியோவில் உள்ள சில மென்பொருட்கள்.

Photobucket - Video and Image Hosting

சிஸ்டம் டூடில் உள்ளவற்றில்
டெர்மினல் மற்றும் ரூட் டெர்மினலை பார்த்துக்கொள்ளவும்.இதன் விளக்கத்தை பின்பு பார்ப்போம்.

Photobucket - Video and Image Hosting

விளையாட்டுப்பகுதியில் உள்ளவை

Photobucket - Video and Image Hosting

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, September 01, 2006

லைவ் சிடி-படம் (2)

வன்பொருளைத் தேடுகிறது.
Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

எல்லாம் தேடி முடித்த பிறகு..


Photobucket - Video and Image Hosting

ஆஹா வந்துடிச்சு...டெஸ்க்டாப்

Photobucket - Video and Image Hosting

உள்ளே போவோமா??

நடப்பது அவ்வளவும் உங்கள் Harddisk ஐ தொடாமல்,

மிச்சமுள்ள ஆச்சரியத்துக்கு வாங்க அடுத்த பதிவுக்கு.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...