Tuesday, December 25, 2012

PAE தொந்தரவு

சிங்கையை விட்டு வந்த பிறகு லினக்ஸ் பக்கமே தலைவைத்து படுக்கவில்லை,காரணம் நேரமின்மை என்பதோடு இல்லாமல் தரவிறக்கம் செய்யத்தகுந்த இணைய இணைப்பு கிடைக்காமல் இருந்ததும் தான்,அதற்குள் உபுண்டு 9,10,11,12.04 &  12.10 பதிப்புகள் வெளியே வந்துவிட்டிருந்தது.துபாயில் வாங்கிய வன்பொருள் கையை விரிக்க ஒரு பாதுகாப்புக்காக வைத்திருந்த பழைய வன்பொருளை வைத்து கணினியை ஓட்டிக்கொண்டிருந்தேன்.அதன் கொள்ளலவு வெறும் 40 ஜிபி என்பதால் லினக்ஸ்கு தேவையான இடம் ஒதுக்கமுடியாமல் இருந்தது.

என்ன தான் துபாய் வன்பொருள் கையை விரித்த்விட்டிருந்தாலும் அதை தூக்கிப்போடவில்லை, வேறு ஒரு Live வட்டு மூலம் அதில் இருக்கும் சில முக்கியமான கோப்புகளை வெளியில் எடுக்க முடிந்ததை வெளியில் எடுத்து போட்டேன்.தேவையானவற்றை எடுத்தவுடன் கை சும்மா இருக்கவில்லை.அப்பயோ இப்பயோ இருக்கும் வட்டில் ஏன் லினக்ஸை முயலக்கூடாது என்று எண்ணி புதிய பதிப்பான உபுண்டு 12.10 ஐ தரவிறக்கினேன்,வட்டில் எழுதினேன்.எழுதிய வட்டு மூலம் கணினியை ஆரம்பித்தவுடன் பிழையுடன் நின்றுபோனது.அந்த பிழை என்னுடைய கனிணி புதிய கணினி நினைவு கொள்ளலவுக்கு தகுந்த கெர்னல் இல்லை என்று சொன்னது.பிழைக்கு தகுந்த வழியை தேடி அலையோ அலை என்று அலைந்து ஒன்றும் புரியாமல் தூக்கி தனியாக வைத்துவிட்டு விண்டோஸ் மூலமே கணீனியை இயக்கி வந்தேன். அதற்குள் உபுண்டுவின் பல பதிப்புகளை தரவிறக்கி முயற்சித்து தோல்வி அடைந்தேன். பழைய கணிகளில் புதிய பதிப்பை எப்படி நிறுவுவது எப்படி என்று பல பக்கங்களை படித்திருந்தாலும் என்னுடைய கணினி எனக்கு “பெப்பே” காட்டியது.Grub என்னும் Boot Loader வந்தால் ஏதாவது செய்யலாம் அதுவே தெரியாத போது என்ன செய்ய முடியும்.காரணங்கள் பல இருந்தாலும் அதை அலசிப்பார்த்து ஒவ்வொன்றாக முயன்று பார்க்கலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

முதலில் விண்டோஸ் இயங்கு தளத்தை நிறுவினேன்.லினக்ஸூக்கு தேவையான இடத்தை அதன் பிறகு Gparted மூலம் பிரித்துக்கொண்டேன் பிறகு உபுண்டு 11.10 ஐ அந்த பகுதியில் நிறுவினேன்.Boot Loader ஐ மறக்காமல் எந்த தொகுதியில் லினக்ஸ் நிறுவினேனோ அங்கு நிறுவினேன்.எல்லாம் முடிந்த பிறகு கணினியை தொடங்கினால் விண்டோஸுக்கு தான் போயிற்றே தவிர லினக்ஸ் பக்கமே தெரியவில்லை.சரி விண்டோஸ் Boot Loader ஐ திருத்த எண்ணி அதன் தொடர்பான பகுதிகளை படித்து என்னை தயார்படுத்திக்கொண்டேன்.பல பதிவுகளை படித்ததன் மூலம் நான் அறிந்துகொண்டது,எந்த பகுதியில் லினக்ஸ் இருக்கிறதோ அதன் பூட் லோடரின் முதல் 512 B க்கு தேவையான கமெண்டை எடுத்து அதை C டிரைவில் எங்காவது சேமித்து வைத்து அதன் தொடர்பை Boot.ini கோப்பில் எழுதிவிட்டால் போதும்.இப்பணியை செய்த பிறகு விண்டோஸ் தொடங்கும் போது இரண்டு இயங்குதளமும் தெரியும்.

என்னுடைய கணினியில் லினக்ஸ் இருந்தாலும் அதில் இருந்து என்னால் துவங்க முடியாத்தால் மேலே சொன்ன அந்த 512 மேட்டர் ஐ எடுக்கமுடியவில்லை.திரும்பவும் Live வட்டு மூலம் லினக்ஸை நிறுவாமல் முயன்று பார்க்கும் Option ஐ தேர்ந்தெடுத்தாலும் என்னால் லினக்ஸ் உள்ள கோப்பில் போய் எடுக்க முடியவில்லை.மிக முக்கியமாக Admin கணக்கு மூலம்.தொகுப்பு 11.10யில் Admin அக்கவுண்ட் இருக்காது அதை நாம் Create பண்ண பிறகு தான் கீழ்கண்ட Command  மூலம் தேவையான கோப்பை பெற முடிந்தது.

dd if=/dev/sdax of=mbr.bin bs=512 count=1

இதில் sdX யில் X நீங்கள் லினக்ஸ் நிறுவியுள்ள பகுதியாகும்.

கடைசியாக ஒருவழியாக லினக்ஸ் முகப்பு வரும் என்ற ஆசையோடு பூட் செய்தால், பூட் லோடர் வந்தது ஆனால் லினக்ஸ் பூட் ஆகவில்லை.பிரவுன் கலரில் முகப்பு எந்த தொடுப்பும் இல்லாமல் ஸ்கிரின் வந்தது.இப்படி ஒரு நிலை எனக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் வெவ்வேறு கணினிகளுக்கு இருப்பது தேடிப்பார்த்ததில் கிடைத்தது.பல வித யோஜனைகள் சொல்லப்பட்டிருந்தது இதில் எனக்கு எது உபயோகமாக இருக்கும் என்று தெரியவில்லை இருந்தாலும் முயன்றுவிடுவது என்று யோசித்து root account மூலம் கணினியில் நுழைந்து அதன் மூலம் பூட் லோடர் கோப்பில் நுழைந்து

“acpi=off" என்ற வரிகளை நுழைத்தேன்.

அவ்வளவு தான் லினக்ஸ் அட்டகாசமாக நுழைய ஆரம்பித்துவிட்டது. 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

இரா.கதிர்வேல் said...

சார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு அனுபவம் மிகுந்த பதிவு.

இரா.கதிர்வேல் said...

சார் அவ்வப்பொழுது இந்தப் பக்கம் கொஞ்சம் வாங்க.

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி கதிர்வேல்.

DR said...

விடாமுயற்ச்சி விஸ்வரூப வெற்றிங்கிரத நிரூபிச்சிட்டீங்க... வாழ்த்துக்கள்...

வடுவூர் குமார் said...

நன்றி DR.

திவாண்ணா said...

அஹா, க்ரேட்.ஆமாம் ஏன் உபுன்டு (சூப்பர்) பார்டிஷன்ல க்ரப் நிறுவினீங்க? அப்படி செய்யறது பல லினக்ஸ் ட்ஸ்ட்ரோ பயன்படுத்தும்போதுதான்.

வடுவூர் குமார் said...

திவா,விண்டோஸ் பூட் லோடர்யில் கைவைக்க வேண்டாம் என்று நினைத்து செய்தேன்.
சமீபத்திய நிலவரம்:இன்னும் கொஞ்ச நாள் தாங்கும் என்று நினைத்த Harddisk புட்டுகிச்சு.எல்லாம் போச்சு.

Muruganandan M.K. said...

நல்ல அனுபவப் பகிர்வு
ஆனால் இவையெல்லாம் முடியாது

வடுவூர் குமார் said...

நன்றி முருகானந்தம்.