Saturday, February 23, 2008

உபுண்டு - ஸ்கை பி

லினக்ஸில் பல வருடங்களாக இருந்த முக்கியமான தடை நேற்று எனக்கு தீர்ந்தது ஆதாவது வீடியோ/ஆடியோ Chat.

கீழே இருக்கும் படத்தை பார்த்து பயந்திடாதீங்க.. எதுக்கு 2 கேமிரா? ஒன்று வின்டோசுக்கு மற்றொன்று லினக்ஸுக்கு.இட பக்க கேமிரா வின்டோஸில் நல்ல ஒளி தரத்துடன் வீடியோ சேட் செய்ய முடியும் அதனால் அதைவிட மனதில்லை ஆனால் லினக்ஸில் வேலை செய்யவில்லை.Logitech கேமிராக்கள் பல லினக்ஸில் நன்றாக வேலை செய்கிறது.



பல வருடங்களாக மென்பொருட்கள் இருந்தாலும் ஒன்று ஆடியோ இருக்கும், வீடியோ இருக்காது.இப்படியே போய் கொண்டிருந்த வாழ்வில் ஏதோ ஒரு ஃரம்மில் லினக்ஸுக்கான மென்பொருளை ஸ்கைபி (Skype) பீட்டா வெர்ஷனாக வெளியிட்டு இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.அங்கு போய் அதை நிறுவியவுடன் முயன்று பார்த்தேன்,என்னுடைய வெப் கேம்மில் உள்ள மைக் வேலை செய்தது ஆனால் வீடியோவை பார்க்கமுடியவில்லை.

காரணத்தை கண்டுபிடிக்க சில மணி நேரம் பிடித்தது. ஸ்கைபி யை உபயோகிக்கும் முன்பு இதே மாதிரி ஒரு மென்பொருளான Ekiga வை உபயோகித்ததால் கேமிரா அதனுடன் இருந்துவிட்டது.அதை நீக்கியவுடன் கீழே உள்ள மாதிரி தெரிந்தது.





சுமார் 6 வருடங்களாக லினக்ஸில் விளையாடிய பிறகு நேற்று தான் வீடியோ/ஆடியோ சேட்டிங் கை வந்தது.

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதன் தொடர்பில் எழுதிய முந்தைய பதிவு இங்கே.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Jay said...

லினக்சில் வர வர பெரியாளாகிட்டீங்க.. நமக்கு இன்னமும் லினக்ஸ் வர மனமில்லை.. விரைவில் வரணும்!

வடுவூர் குமார் said...

வாங்க மயூரேசன்
தபூண்டுகொடுத்த உங்களுக்கே லினக்ஸ் பக்கத்தில்வரவில்லையா??!!
அதிசியம் தான். :-))

Jay said...

ஆகா.. நீங்களும் குழப்பிட்டீங்களா??
அது மயூரன். நான் மயூரேசன்.

வடுவூர் குமார் said...

போச்சுடா...
:-))