கீழே சொல்லப்பட்டு இருக்கின்ற விபரங்கள் லினக்ஸில் வேலை செய்பவர்களுக்கு அதுவும் install shield மூலம் தரப்படுகிற நிறுவு கோப்புகளை உடைக்க உதவும்.
என்ன தலையை சுத்துகிறதா? எனக்கும் அப்படி சுத்தி தான் இப்போது தான் தெளிவடைந்தேன்.நான் தெளிவடைந்தால் போதுமா? நீங்கள் குழம்பவேண்டாமா?
தொடருவோம்.
இந்த லினக்ஸில் ஒரு வன்பொருளை வேலைசெய்வதற்குள் சில சமயம் தாவு தீர்ந்துவிடும்.ஊரோடு ஒத்துப்போய் பலர் உபயோகப்படுத்தும் வன் பொருளை உபயோகித்தால் பிழைத்தீர்கள் அப்படியில்லாவிட்டால் தேடித்தேடியே களைத்துவிடுவோம்.அதனால் என்னவோ பலரும் லினக்ஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.நான் அப்படியில்லை,வேலை செய்யும் வரை விடமாட்டேன் இல்லாவிட்டால் இதற்கு மேல் முடியாது என்றபட்சத்தில்
வேறு வேலை பார்க்க கிளம்பிவிடுவேன்.
இப்போதைக்கு எனக்கு தண்ணிகாட்டிக் கொண்டு இருக்கும் வன்பொருள் “கம்பியில்லா” அடாப்டர்.
கணினி மாற்றுபவதற்கு முன்பு பழைய புதினத்தில் சரியாக வேலைசெய்த அடாப்டர் புதிதில் வேலை செய்ய மறுத்தது.இன்றைய காலக்கட்டத்தில் இணைய இனைப்பு இல்லாவிட்டால் எந்த இயங்குதளமும் ஆக்ஸிஜன் இல்லாத செவ்வாய் போல் தான்.அதனால் எப்படியாவது இணைய இணைப்பை பெறுவதில் முட்டி மோதிக்கொண்டிருந்தேன்.பல வழிகள் செய்தும் இன்றுவரை கிடைக்கவில்லை.பல வன்பொருள் நிறுவனங்கள்
விண்டோஸுக்கு மாத்திரம் டிரைவர்கள் வழங்குவதால் அதை உடைத்து அதிலிருந்து லினக்ஸுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டார்கள்.அப்படி உடைக்க ஆரம்பிக்கும் போது அதிலும் ஆயிரம் தலைவலிகள் இருப்பது தெரிந்தது.
இந்த நிறுவல் கோப்புகள் சுறுக்கப்பட்டு இருந்தாலும் அதனுள் இருக்கும் கோப்புகளை விரிவுபடுத்தி அதனுள் இருக்கும் .inf மற்றும் .sys கோப்புகளை எடுப்பது என்பது ஒரு பிரம்மபயத்தனம்.இந்த இரு கோப்புகள் இருந்தால் லினக்ஸில் உள்ள ndiswrapper என்ற மென்பொருள் மூலம் அடாப்டருக்கு தேவையான டிரைவர்களை நிறுவிவிட்டால் ஓரளவு(ஓரளவு தான்) பிரச்சனையை தீர்த்துவிடலாம்.
இந்த நிறுவல் கோப்புகளை விரிவாக்க சரியான இலவச மென்பொருள் கிடைக்காமல் இருந்தது.கூகிளாண்டவரிடம் தேடல் முறையை வித்தியாசப்படுத்தி கேட்ட போது ஒரு மென்பொருளை காண்பித்தது அத்தோடு அதை எப்படி நிறுவுவது அதன் மேல் விளக்கங்களும் அருமையாக
இங்கு சொல்லியிருந்தார்கள்.அதன் படி அந்த மென்பொருளை தரவிரக்கி ஜிப் மூலம் விரிவாக்கி அதனுள் (release கோப்பின் உள்)இருக்கும் i6comp என்னும் கோப்பை /windows உள்ளே வைத்துவிடுங்கள்.நிறுவல் எதுவும் கிடையாது.இதை கீ பாயிண்டு மென்பொருள் என்கிறார்கள்.இந்த மாதிரி மென்பொருளை command prompt யில் மூலம் வேலை வாங்கவேண்டும்.
கோப்பை வைத்தாகிவிட்டதா?
இப்போது விண்டோஸ் முலம் Command Prompt க்கு வாருங்கள்,அதில் பிராம்ப்ட் வந்தவுடன் "i6comp" என்று தட்டச்சு செய்து எண்டரை அழுத்துக்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க தேவையான கட்டளைகளை காண்பிக்கும்.நமக்கு வேண்டியது .inf and .sys மட்டுமே.அதனா ல் அடாப்டரின் .exe கோப்பை ஏதாவது ஜிப் மூலம் திறந்து அதன் கோப்புகளை ஏதோ ஒரு போட்டியில் போட்டு வைக்கவும்.அதில் நமக்கு தேவை கீழ்கண்ட 3 கோப்புகள் மாத்திரம்.
1.data1
2.data.htr
3.data2
மீதமுள்ளவற்றை நீக்கிவிடலாம்.
இப்போது திரும்ப command prompt க்கு வந்து மேலே சொன்ன கோப்புகள் உள்ள இடத்துக்கு வாருங்கள்.
>i6comp e -r data1.cab
என்று கொடுத்து எண்டரை அழுத்துக்கள் அவ்வளவு தான்.படத்தில் கண்டவாறு விரிவாக்கி அதன் போல்டரிலேயே கொண்டுபோய் சேர்த்துவிடும்.அதனுள் நமக்கு தேவையான .inf and .sys கோப்பும் இருக்கும்.

ஆமாம் இது இரண்டும் கிடைத்தால் வேலை செய்யுமா?
தெரியாது வீட்டுக்கு போய் தான் முயற்சிக்கனும். :-))