Monday, October 15, 2007

வட்டு இல்லாமல் லினக்ஸ் நிறுவ.

நான் இதுவரை லினக்ஸை தறவிரக்கம் செய்யவேண்டும்,பிறகு வட்டில் எழுத வேண்டும்,அது முடிந்தவுடன் வட்டு வழியாக ஆரம்பித்து நிறுவ வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.சற்று முன் தான் மாற்றுவழி ஒன்றை படிக்க நேர்ந்தது.அது தான்

UNetbootin

மேலே கொடுத்துள்ள மென்பொருளை நீங்கள் வின்டோசிலோ அல்லது லினக்ஸில் இருக்கும் போது தறவிரக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.நிறுவியவுடன் கணினியை ஆரம்பிக்கச்சொல்லும்.உங்கள் தேவைக்கு ஏற்ற கோப்பை நிறுவிக்கொள்ளுங்கள்.

கணினி ஆரம்பிக்கும் போது Boot பகுதியில் வந்து நிற்கும்.முதலில் ஏற்கனவே உள்ள வின்டோசும் அடுத்து நீங்கள் தேர்ந்தெடுத்த லினக்ஸ் பெயரும் வந்து நிற்கும்.அதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டியது தான்.அவ்வளவு தான் முடிந்தது.

இணையம் மூலம் சுமார் 700MB அளவுள்ள கோப்புகளை தறவிரக்கி அதுவே நிறுவிக்கொள்ளும்.மிக முக்கியமாக உங்களிடம் அதி வேக இணைய இணைப்பு இருப்பது மிக அவசியம்.

இப்படி செய்வதால் வட்டு ஒன்று இல்லாமலே லினக்ஸை நிறுவமுடிகிறது அதுவும் வின்டோஸ் / லினக்ஸ் உள்ளே இருக்கும் போதே.

படங்களுடன் இங்கு விரிவாக உள்ளது.படித்து அறிந்துகொள்ளுங்கள்.

உபுண்டுவை நிறுவ இங்கு பார்க்கவும்.

இதே மாதிரி இன்னொன்று கொடுத்துள்ளார்கள்,அதையும் பார்க்கவும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Abdul Haleem said...

Wubi உம் இதனை செய்யும், இனைய இனைப்பில்லாதவர்கள் அதனை install செய்த பாதிவழியில் (இனைய இனைப்பிற்கு கூடிய நேரம் எடுப்பின்)நிறுத்திவிட்டு, iso கோப்பினை Wubi/install எனும் folder இனுள் Ubuntu வை copy பன்னியபின், மீழ Wubi ஐ நிறுவுக, இப்போது உமது Windows Partition இலேயே Ubuntu வேலை செய்யும், Google பன்னுங்கோவன் மேலதிக தகவலுக்கு.

ஹலீம்

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி ஹலீம்.