Monday, October 15, 2007

மயூரனுக்கு நன்றி

லினக்ஸில் அதுவும் உபுண்டு உபயோகப்படுத்துவர்களுக்காக மயூரன் ஒரு அருமையான பணியை செய்துகொடுத்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு புது உபுண்டு வெர்ஷன் ஆன 7.04 ஐ ஒரு பார்ட்டிஷியனில் நிறுவினேன்.முதலில் திரை முகப்பு எல்லாம் தேவைக்கு குறைவான ரிசொல்யூஷன் வந்து அதை /etc/X11 கோப்பில் உள்ளே சென்று மாற்றி சரி செய்தேன்,அடுத்து கம்பியில்லா USB அடாப்டர் பிரச்சனை.அதை சரி செய்ய 1 வாரம் ஆனது.போன பதிவில் அதைப் பற்றி சொல்லியிருந்தேன்.



இது முடிந்தவுடன் இணையத்துக்கு போய் தமிழ் பக்கங்களை பார்க்கும் போது.. படிக்கவே முடியாத அளவுக்கு உடைந்து காணப்பட்டது. கூகிளான் டவரை கேட்ட போது எங்கெங்கோ சுற்றவிட்டார்.முறையான எதுவும் கிடைக்க்கவில்லை.அப்ப்போது தான் மயூரன் போட்ட பதிவு ஞாபகம் வந்தது அங்கு போய் தறவிரக்கம் செய்தேன்.அதை எப்படி நிறுவ வேண்டும் என்ற விளக்கமும் அதில் உள்ள "read me" கோப்பில் உள்ளது.

முதலில் சுருக்கப்பட்ட அந்த கோப்பை விரிவாக்கம் செய்து அதை ஒரு ஃபோல்டரில் சேமிக்கவும். பிறகு அந்த கோப்பிற்கு போய் அதில் உள்ள install.sh ஐ இரு முறை முறையில் சொடுக்கி



"Run in Terminal" என்பதை தேர்ந்தெடுத்தால் போதும் எல்லாம் முடிந்து கணினியை திரும்ப ஆரம்பிக்கச்சொல்லும்.



பாருங்கள் தமிழிலேயே கேட்கிறது.

முடிந்த பிறகு கணினியை திரும்ப ஆரம்பிக்கச்சொல்கிறது.இதில் ஒரு பிழை இருக்கிறது. Cancel பட்டன் காணப்படுவதில்லை.



கணினியை restart பண்ணவுடன் இணையத்துக்கு போய் தமிழ் பக்கங்களை பார்த்தால்....
ஆஹா! ஆஹா! அருமையிலும் அருமை.தமிழ் எழுத்துக்கள் படிக்கக்கூடிய அளவில் நன்றாக வே தெரிகிறது,இருந்தாலும் முழுமையாக இல்லை.ஆதாவது கொம்புகள் மற்றும் சில இடங்களில் தேவையில்லாத gap இருக்கிறது.எப்படியோ தமிழ் படிக்கக்கூடிய அளவில் வருகிறதே அதுவே சந்தோஷம் தான்.



தமிழுக்காக மயூரனனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

மு. மயூரன் said...

//ஆரம்பிக்கச்சொல்கிறது.இதில் ஒரு பிழை இருக்கிறது. Cancel பட்டன் காணப்படுவதில்லை.//

மேலே உள்ள X அடையாளத்தை பயன்படுத்தலாம். (அடுத்த பதிப்பில் இது திருத்தப்படும்)

//இருந்தாலும் முழுமையாக இல்லை.ஆதாவது கொம்புகள் மற்றும் சில இடங்களில் தேவையில்லாத gap இருக்கிறது.//

இது உபுண்டுவின் எழுத்துருவான serif இன் பிரச்சினை. ஈ கார வரிசை எழுத்துகக்ளின் கொம்புகள் சரியாக வரையப்படவில்லை.

இந்தப்பிரச்சினைக்காகத்தான் தபுண்டுவில் சூரியன்டொட் கொம் எழுத்துருவைச் சேர்த்திருக்கிறேன். அதனைப் பயன்படுத்தலாம்.

serif ஆங்கிஅத்துக்கும் அழகாக இருக்கும் என்பதால் தான் அதனை கொடாநிலையாக்கியுள்ளேன்.

வடுவூர் குமார் said...

மேல் விபரங்களுக்கு நன்றி,மயூரன்.
அந்த சூரியன் டாட் காம் எழுத்துருவுக்கு எப்படி மாற்றுவது?

மா சிவகுமார் said...

நல்ல தகவல். நான் உபுண்டு போட்டால் நினைவு வைத்துக் கொள்கிறேன். மயூரனுக்கு என் நன்றிகளும்.

அன்புடன்,
மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

நன்றி மா சி.