Sunday, August 02, 2009

பட அளவை மாற்ற

லினக்ஸில் ஒரு கோப்பின் உள்ளே மிகப்பெரிய அளவில் ஒரு 100 படம் இருக்கு என்று வைத்துக்கொள்வோம் அதை அத்தனையும் வலையில் ஏற்றனும் என்றால் கொஞ்சம் கஷ்டம்.முதலில் அதிக வேகமுள்ள இணையம் வேண்டும் அதோடில்லாமல் தேவையில்லாமல் மிக அதிக அளவுள்ள படங்களை இணையத்தில் ஏற்றுவதால் அவ்வளவு பிரயோஜனம் இலை.

இப்படி இருக்கிற 100 படங்களை கொஞ்சம் அளவை குறைத்தால் வலை ஏற்றுவதற்கும் இணைய வேகமும் நம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் அல்லவா?ஒவ்வொரு படத்தையும் ஏதோ மென்பொருளில் ஏற்றி அளவை குறைத்து திரும்ப சேமித்து என்று வேலை அதிகம் வைக்கும்.வின்டோஸ் என்றால் பல மென்பொருட்கள் இருக்கும் ஆனால் லினக்ஸில் என்ன செய்வது?ரொம்ப ரொம்ப சுலபம் "ஒரே ஒரு வரி" அத்தனையும் சில வினாடிகளில் முடித்து விடலாம்.அதை எப்படி என்று பார்கலாமா?

உதாரணத்துக்கு உங்கள் Picture கோப்பில் படங்கள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம்.

cd /home/Pictures என்று டெர்மினலில் தட்டச்சு செய்யுங்கள்.இதன் மூலம் நீங்கள் அந்த கோப்பின் வாசலில் இருப்பீர்கள்.

அதற்கு மேல் கொடுக்கப்போகும் கமென்டுக்குள் முன்னால் Synaptic Package Manager மூலம் உங்கள் கணினியில் Image Magick என்ற முன்பொருள் நிறுவப்பட்டிருக்கா என்று சோதனை செய்துகொள்ளவும்.இல்லை என்றால் நிறுவிக்கொள்ளவும்.நிறுவிய பிறகு

mogrify -resize 1024 *JPG (படம் jpeg or jpg or JPG ஆக இருக்கக்கூடும்) அதற்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளவும்.

அவ்வளவு தான் முடிந்தது.சில நொடிகளில் எல்லா படங்களும் மாற்றப்பட்டிருக்கும். நான் பண்ண தவறுகளை கீழே உள்ள படத்தை சொடுக்கி பாருங்கள்.

From லினக்ஸ்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

சங்கர் said...
This comment has been removed by the author.
வடுவூர் குமார் said...

நன்றி சங்கர்.

சங்கர் said...
This comment has been removed by the author.
RAGUNATHAN said...

நான் உபுண்டு அண்மைய பதிப்பை wubi மூலம் நிருவயுள்ளேன். நமக்குத் தேவையான தமிழ் எழுத்துருக்களை எப்படி இன்ஸ்டால் செய்வது? மேலும் தமிழ் இடைமுகப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.என்று விளக்க முடியுமா?

வடுவூர் குமார் said...

ரகுநாதன்
உபுண்டு Forum யில் இதற்கான பதில் இருக்கு அதுவில்லாமல் குறிப்பிட்ட எழுத்துரு தான் வேண்டும் என்றால் அதை font folder யில் போட வேண்டும் என்று படித்த ஞாபகம்.இம் மாதிரி முயன்றதில்லை.
தமிழ் இடைமுகப்புக்கு போக Language Option இல் மாற்றம் செய்யுங்கள்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வணக்கம்.

TamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.

நன்றி.

வடுவூர் குமார் said...

அழைப்புக்கு நன்றி,அவ்வப்போது வருகிறேன்.

மணி said...

லினக்ஸ் இவ்வளவு மேட்டர் இருக்கா பொறுமையாக படிக்கனும். லினக்ஸ் இயக்கியதே இல்லை.

வடுவூர் குமார் said...

வாங்க மணி
போட்டு பாருங்க பிறகு வேறு இயங்கு தளம் பக்கம் போக மாட்டீர்கள்.

மகா said...

But kumar sir is linux supporting tamil fonts .....

வடுவூர் குமார் said...

மகா,நன்றாகவே சப்போர்ட் செய்கிறதே!