Tuesday, September 21, 2010

திரும்பவும் Flash ல் தொந்தரவு.

உபுண்டுவில் ஒவ்வொரு முறையும் மேம்படுத்தும் போது ஏதாவது ஒன்று தொல்லை கொடுக்காமல் விடுவதில்லை, அந்த வரிசையில் சமீபத்தில் 10.04 க்கு மேஜை கணினியை மேம்படுத்தியவுடன் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் பயர்பாக்ஸ் மற்றும் சிஸ்டம்களில் சத்தம் இல்லை.
தேடு பொறியில் இரண்டு நாட்களாக தேடித்தேடி பலவற்றை படித்தாலும் நமக்கு தண்ணிகாட்டிக்கொண்டிருந்தது.எதேச்சையாக alsamixer ஐ டெர்மினலில் கொடுத்து ஒரு பாடலை ஓடவிட்டுக்கொண்டு ஒவ்வொரு சேனலையும் ஏற்றி இறக்கி முயற்சித்துக்கொண்டிருந்த போது ஒன்றில் மாறுதல் செய்யும் போது சத்தம் வர ஆரம்பித்தது.அடுத்து பயர்பாக்ஸ் இதிலும் விழுந்து எழுந்து என்னனென்வோ செய்தும் செம தண்ணிகாட்டியது.பல கருத்துகள் அதற்கேற்ப மாறுதல்கள்...சில மாறுதல் ஏன் செய்யவேண்டும் அதனால் என்ன பலன் என்ன என்பது கூட தெரியாமல் செய்தேன்,அசைய மருத்தது.இலவசமாக கிடைக்குதே என்று ஏன் இதோடு மன்றாடுகிறார் என்ற பார்வையோடு மனைவி!!

கடைசியில் வெற்றி கிடைத்தது இப்படி...

Firefox Address bar இல் about:plugins அடிங்க அவற்றில் இதுவரை நீங்கள் போட்டுள்ள plugin யின் வரிசை கிடைக்கும்.என்னுடைய firefox யில் இரண்டு வித Shock Flash Player இருந்தது. அதன் மேற்பகுதியில் அது எந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கும்.இப்போது என்னுடைய கணினியில் வெர்சன் 9 & 10 ம் இருந்தது. 9 தை நீக்கிவிட்டால் சரியாகிவிடும் என்று தோனி கீழ்கண்ட மாதிரி கமென்டை terminal லில் கொடுத்தேன் அவ்வளவு தான் சவுண்ட் அட்டகாசமாக வர ஆரம்பித்துவிட்டது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

34 comments:

கிரி said...

இப்படி போராடி கிடைக்கும் சந்தோசம்..விவரிக்க முடியாதது :-)

வடுவூர் குமார் said...

நன்றி கிரி.

திவாண்ணா said...

ஏன் குமார், பயர்பாக்ஸ்லே tools>addons> plugins போய் வேண்டாததை நீக்கிடலாமே? டெர்மினல் பழகி போச்சோ?

p said...

எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது... இப்போது... சரிசெய்துவிட்டேன்.. :-) :-)மிக்க நன்றி... :-)

வடுவூர் குமார் said...

நன்றி சேதுபதி.

வடுவூர் குமார் said...

திவா அதில்வெர்ஷன் 9 தான் தெரிந்தது,அதன் மூலம் வெளியேற்ற முடியவில்லை.

சரவணன்.D said...

நல்ல பதிவு வடுவூர் திரு.குமார் சார்.
text சரியாக தெரியவில்லையே சார்.

வடுவூர் குமார் said...

அப்படியா சரவணன்,இக்குறையை இது வரை யாரும் சொல்லவில்லையே,பார்க்கிறேன்.நன்றி.

திவாண்ணா said...

சரியாத்தானே தெரியுது?!!! விஸ்டா பயன்படுத்தறீங்களா?

ராஜா.சுமா said...

வணக்கம்,
என்னிடம் HP Scanjet 2400 Scaner உள்ளது. உபுண்டு 10.10 மற்றும் Pinguy Os எதிலும் அது வேலை செய்ய வில்லை உபுண்டுக்கு ஏற்ற டிரைவர் எதுவும் உள்ளதா தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.
My mail id. peru.raja@gmail.com

வடுவூர் குமார் said...

ராஜா,என்னிடம் 2200 மாடல் இருக்கு அதில் சரியாக வேலை செய்கிறதே!!

திவாண்ணா said...

சுமுஸ் அதுக்கு சரியா சப்போர்ட் இல்லை. எல்காட் லே ஒரு அரைகுறை ட்ரைவர் போட்டு இப்ப அதையும் காணலை. எதுக்கும் இதை பாருங்க. http://tinyurl.com/2uhgt5m

திவாண்ணா said...

kumar, this template does not support tamil font rendering well.

Anonymous said...

ennidam ubuntu 9.04 version ullathu. internet connection illamal version 10.10 upgrade panna mudiuma

வடுவூர் குமார் said...

possible,provided if u have the iso file in your harddisk or burned on CD.

திவாண்ணா said...

oh!புதிய உபுண்டுவில் தமிழ் ஆதரவு நிறுவாமல் பார்த்து அவசரப்பட்டு எழுதிவிட்டேன். சரியாகத்தான் தெரிகிறது.! மன்னிக்க!

Anonymous said...

yes i have the iso file version10.10. if you dont mind could you please explain the procedure...

வடுவூர் குமார் said...

If possible, install Gmount-iso then its very easy to mount from that tool.Last time I did it with some scripts...I can't remember now,When I found I will send it.

திவாண்ணா said...

/yes i have the iso file version10.10. if you dont mind could you please explain the procedure...//

is it a alternate version? if so write it to a cd. insert the cd and it will offer to upgrade. as simple as that.

சரவணன்.D said...

நான் உபுண்டுவில் பார்த்தேன் எழுத்துக்கள் உடைந்து தென்பட்டது சார் இப்போது நன்றாகத் தெரிக்கிறது நன்றி.
http://gnometamil.blogspot.com/

சரவணன்.D said...

உங்கள் BLOG-இல் FOLLOWER widget ஏன் இணைக்கவில்லை சார்.

வடுவூர் குமார் said...

அப்படியா? என்னுடைய கணினியில் எவ்வித வித்தியாசம் இல்லாத்தால் அப்படியே விட்டு விட்டேன்,நன்றி சரவணன்.

சரவணன்.D said...

நன்றி சார்....

Anonymous said...

@ dhiva i tried that one...
it extracting the files and everything is ok... but it is not installing the files....

can i remove fully and reinstall again?

i have windows XP and ubuntu in dual boot.

திவாண்ணா said...

yes certainly you can. In many ways desirable too.

Anonymous said...

@ திவா ....
நான் alternate cd பயன்படுத்தி upgrade செய்து விட்டேன்.
நான் வெர்சன் 9.10 வைத்து இருந்தேன். upgrade செய்யும் போது 10.10 பயன்படுத்தி விட்டேன். இது என் தவறு.
பின்னர் 10.04 பயன்படுத்தி upgrade செய்தேன். நன்றி.....
ஒரு சந்தேகம் ... நெட்வொர்க் மேனேஜர் எப்படி பயன்படுத்துவது?

திவாண்ணா said...

அனானி, நெட்வொர்க் மேனேஜர் சாதாரணமாக தானே வேலை செய்யும். ஈதர்நெடில் ப்ராட்பேண்ட் இணைத்து இருந்தால் தானே கண்டு பிடித்து இணைக்கும். 10.10 இல் கொஞ்சம் பிரச்சினை இருப்பது போல இருக்கிறது. என்ன வலை இணைப்பு என்று சொன்னால் வழி தேவை இருந்தால் சொல்ல முடியும்.
ஆமாம் 10.10 இன்னும் சமீபத்திய வெளியீடுதானே? ஏன் தவறு என்கிறீர்கள்.10.04 இல் லாங்டெர்ம் ஆதரவு இருப்பதால் பரவாயில்லை. அப்படியே பயன்படுத்தலாம்.

சரவணன்.D said...

தங்களின் பதிவிர்க்காக காத்திருக்கிறேன் சார்...

வடுவூர் குமார் said...

நானும் அடுத்த தொந்தரவுக்காக காத்திருக்கேன். :-)

சரவணன்.D said...

ரொம்ப நல்லா பேசுரீங்க சார்...

எஸ்.கே said...

உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_3381.html

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி எஸ்கே

Karthikeyan Rajendran said...

என்ன சார் பிளாகில் பதிவு போட்டு பல நாள் ஆச்சு போல இருக்கு

வடுவூர் குமார் said...

ஆமாம் கார்த்தி, சென்னை வந்ததில் இருந்து நேரமே கிடைக்கவில்லை.