Wednesday, November 29, 2006

துண்டாடுதல்- தொடர்ச்சி

என்னுடைய புதிய வன்பொருள் உணரப்பட்டுள்ளதை காட்டும் படம்.



இடது பக்கம் உள்ள கட்டங்களில் இரண்டாவது கட்டத்தில் உள்ளது தான் அதன் கொள்ளலவு.



முதலில் தேவையான file சிஸ்டம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு சின்ன குறிப்பு.
வின் 95யிலிருந்து ME வரை fat32 யில் போடலாம்.
வின் ௯XP க்கு முதலில் Fat32 வைத்துவிட்டு பிறகு அந்த இயங்குதளம் போடும் போது NTFS க்கு மாற்றிக்கொள்ளலாம்.
லினக்ஸ்க்கு EXT3 அல்லது EXT2 வில் வைத்துக்கொண்டு பிறகு அந்தந்த இயங்குதளம் நிறுவும் போது அதற்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளலாம்



முதல் துண்டு ஏற்படுத்தப்படுகிறது.
இடது பக்கம் உள்ள கட்டங்களில் அதற்கு தேவையான விவரங்களை கொடுக்கவேண்டும்.



அதே மாதிரி இரண்டாவது மற்றும் 3 வது துண்டும் வெட்டப்படுகிறது









3 துண்டுகள் ஏற்படுத்திவிட்டாகி விட்டது.மேல் உள்ள கட்டங்களில் தெரியும் பச்சை நிற கட்டங்கள் தான் நீங்கள் துண்டாடியது.



இதில் முக்கியமான(Primary Partition) பகுதிகள் 3 மட்டுமே உருவாக்கமுடியும்.மீதியை Extended Partition ஆக வைத்துக்கொள்ளவும்.



மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

பகீ said...

உங்களிடமே லினக்ஸைப்பற்றி கதைத்திருக்கிறேன். மன்னிக்கவும். ஏன் லினக்சுக்கு பிளாஸ் பிளேயர் உள்ளது தானே??

வடுவூர் குமார் said...

பகீ
லினக்ஸில் இன்னும் நான் கற்றுக்குட்டி தான்.மயூரன் என்று ஒருவர் எழுதிவருகிறார்,இங்கு பார்க்கவும்.உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.
அடிப்படையில் என் வேலை கட்டுமானத்துறையில், அதனால் நேரம் கிடைக்கும் போது லினக்ஸில் மூக்கை நுழைப்பேன்.இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறது அதற்கு தகுந்த நண்பர் குழாம் அமையவில்லை.அதனால் இணையமும் நூலக புத்தகங்களும் தான் துணை.
அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக பணிபுரிபவர்களே "லினக்ஸ்" என்றால் என்ன என்று கேட்டு நான் பார்த்திருக்கிறேன்.
மன்னிப்பெல்லாம் எதற்கு பகீ- நட்பார்ந்த வார்தைகள் போதும்.
நன்றி