எப்போதும் வின்டோஸ்யில் "Start" கீழே இருக்கும், லினக்ஸ்யில் மேலே இருக்கும்.கவலைப்படவேண்டாம்.இதுவும் மாற்றக்கூடியது தான். "Start"க்கு பதில் அப்ளிகேஷன்யில் தொடங்க வேண்டும்.
ஆபீஸ் உள்ளே இருக்கும் சிலவற்றை படத்தில் பார்க்கவும்.

சவுண்டு & வீடியோவில் உள்ள சில மென்பொருட்கள்.

சிஸ்டம் டூடில் உள்ளவற்றில்
டெர்மினல் மற்றும் ரூட் டெர்மினலை பார்த்துக்கொள்ளவும்.இதன் விளக்கத்தை பின்பு பார்ப்போம்.

விளையாட்டுப்பகுதியில் உள்ளவை

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்
5 comments:
முதல் 3 படத்தை சின்னதாக மாற்றினாலும் பெரிதாகவே காண்பிக்கிறது.
பொருத்துக்கொள்ளுங்கள்.
நேற்றைக்கு ஒரு மடிக் கணினியில் உபுண்டு 6.06 நிறுவினேன். எல்லா துணைக்கருவிகளையும் சரியாக இனம் கண்டு கொண்டு வடிவமைத்துக் கொண்டது. வட்டில் வராத நிரல்களை இணையத்திலிருந்து எளிதாக இறக்கிக் கொள்ள முடிந்தது. டாடா இண்டிகாமின் டேடா கார்டு மூலம், உள்ளமை வின்மோடம் மூலம் இணையம் இணைப்பதும் அதிக முயற்சி இல்லாமல் செய்ய முடிந்தது.
இந்த ஆண்டுக்குள், உபுண்டு ஒரு சுற்று வந்து விடும், வர வேண்டும் என்று தோன்றுகிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
புதியவர்கள் முயற்சிக்க ஒரு நல்ல இயங்கு தளம்.
அகலகட்டை இல்லாதவர்களுக்கு மீதமுள்ள மென்பொருட்கள் தரவிரக்கம் செய்வது கொஞ்சம் கஷ்டம்.
மடிப்பு கனிணியில் நிறுவியது பற்றி சொன்னதுக்கு நன்றி.
சில மடிப்பு கனிணியில் தடுமாறுகிறது.
கணினி தொடர்பா, அதுவும் லினக்ஸ் தொடர்பா, அதுவும் உபுண்டு தொடர்பா..(சரி, விதயத்துக்கு வரேன் ;)) நீங்க எழுதுறது ரொம்ப மகிழ்ச்சி..நான் உங்க இதப் படிக்கிறதுக்கு முன்னமே ஒரு மாசமா உபுண்டுவ என் மடிக்கணில பயன்படுத்திக்கிட்டு வரேன்..உபுண்டுவ அடிச்சுக்க இன்னொன்னு பொறந்த தான் வரணும் போல..அவ்வளவு எளிமையான இயங்குதளம்..உபுண்டு தத்துவமும் அருமையானது..அதப் பத்தியும் நீங்க நாலு வார்த்தை எழுதலாம்
வாங்க ரவிசங்கர்
நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்.
இதற்கான பதிலை அடுத்த பதிவில் இட்டுள்ளேன்.
Post a Comment