Wednesday, August 23, 2006

லினக்ஸ் (3)

லினக்ஸைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இதை படிக்கவும்.

இதையும் பாருங்க

விண்டோஸ் ஒரு கனிணியில் போட அதை வாங்கவேண்டும் அதுவும் ஒரு கனிணியில் மட்டும் தான் உபயோகிக்க முடியும்.இதில் உங்களுக்கு கிடைப்பது வெறும் இயங்கு தளம் தான்.ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் இணையத்தளத்துக்கு போய் தேவையான தகவல்களை பெறமுடியும்.

லினக்ஸை நீங்கள் எவ்வளவு கனிணியில் வேண்டுமானாலும் நிறுவலாம்,ஏனென்றால் இதன் சோர்ஸ் கோடு இலவசமாக கொடுக்கப்படுகிறது.அகலக்கட்டை இணைப்பு இருக்கும் பட்சத்தில் கீழ் கண்ட இணையப்பக்கத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.அல்லது நிறைய Groups (yahoo) உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள குழுமமாக பார்த்துக்கொண்டால் அவர்களிடம் இருந்தும் இந்த வட்டுக்களை வாங்கிக்கொள்ளலாம்.

லினக்ஸில் என்ன என்ன உள்ளது.

இதில் XP யில் உள்ளது போல் பல பயனார்கள் உபயோகப்படுத்தும் முறை இருக்கிறது.

Fire wall என்ற தடுப்புமுறையும் உள்ளது.

முக்கியமா ஓபன் பீஸ் உள்ளது இதில் மைக்ரோசாப்ட் பீஸ் உள்ளது போல் வேர்ட்,எக்ஸ்சல்,பவர்பாயின்டும் இருக்கிறது.

நீங்கள் வரைகலையில் விருப்பம் உள்ளவரா?ஆட்டோகேட் வாங்கமுடியாத பாக்கியசாலியா? பிடி "க்யுகேட்".இது அவ்வளவும் இலவசம்.க்யுகேட் &ஆ ட்டோகேட் ஒப்பிட்டு பார்க்கமுடியாது இருந்தாலும் மோசமில்லை.

ப்ரொக்ராமிஙில் செய்ய கம்பைலர் தேவையா... இருக்கு GCC.

இன்னும் பல!! அனைத்தும் இலவசம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: