Monday, March 09, 2009

ஜாவா...ஜாவா உயிரை வாங்காதே

மடிக்கணினி வன் தட்டு கண்ணை மூடும் நேரம் வந்தாலும் விடாமல் அதில் உபுண்டுவை(8.10) நிறுவினேன்.இம்முறை அனைத்தும் சூமூகமாகவே இருந்தது.இணையம் என்று வரும் போது பயர்பாக்ஸில் பிளாஸ் நகர்படமும் எந்தவித பிரச்சனையில்லாமல் வந்தது.பயர்பாக்ஸ் 3.04 வில் இருந்து 3.05 க்கு மேம்பாடு கண்டபோது பிளாசில் பிரச்சனை ஆரம்பித்தது.Plug-in இல்லை என்றும் அதை அடோப் வலைப்பக்கத்தில் இருந்து இறக்கி நிறுவவும் என்றது அத்தோடு அனைத்து வித flash கோப்புகளையும் பார்க்க முடியவில்லை.இந்நிலையில் 3.0.7 பயர்பாக்ஸ் மேம்பாடு கண்டது ஆனால் அதனால் இந்த Flash பிரச்சனையை சரியசெய்ய முடியவில்லை.

பல வித Forum களில் சொல்லப்பட்ட ஏகப்பட்ட வழிகள் எல்லாம் செய்து பார்த்து மலங்க மலங்க முழித்துக்கொண்டிருந்தேன்.இவ்வேளையில் புது வன்பொருளில் உபுண்டு 8.1 நிறுவி மேல் சொன்ன வழி வந்து நின்றிருந்தேன்.ஒரு வலைப்பக்கத்தில் சொல்லியிருந்த எளிய வழி இப்பிரச்சனைக்கு முடிவு வைத்தது,அது இது தான்.

முதலில் அடோப் இந்த பக்கத்தில் போய் உங்களுக்கு தேவையான .deb அல்லது .tar.gz கோப்பாகவோ இறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.அச்சமயத்தில் உங்கள் பயர்பாக்ஸ் ஐ மூடிவிடவும்.நிறுவுதலை /usr/lib/java வில் நிறுவிக்கொள்ளவும்.நிறுவுதல் முடிந்தவுடன் அதை சரி பார்க்க இங்கு சென்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.இது எல்லாம் சரியாக இருந்தால் பிரச்சனையில்லை,பல சமயங்களில் இது வேலை செய்வதில்லை அந்த மாதிரி சமயங்களில் கீழ்கண்ட முறையில் இரு கோப்புகளுக்கு ஒரு தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டால் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் அதற்கு முன்பு Synaptic Package Manager மூலம் sun-java6-jre நிறுவிக்கொள்ளவும் அதோடு sun-java6-bin ஐயும் நிறுவிக்கொள்ளவும்.

கடசியாக உங்கள் டெர்மினலை திறந்து கீழ்கண்டவாறு தட்டச்சு செய்து எண்டரை அமுத்தவும்.மறக்காமல் பயர்பாக்ஸை மூடி திறக்கவும்.

cd /usr/lib/firefox-3.0.7/plugins

sudo ln -s /usr/lib/jvm/java-6-sun/jre/plugin/i386/ns7/libjavaplugin_oji.so

இனி பாருங்க எல்லாமே சூப்பராக இருக்கும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Unknown said...

விண்டோஸ் காசு குடுத்து வாங்க வேண்டும். லினக்ஸ் காசு குடுத்து படிக்க வேண்டும். அவ்வளவு கஷ்டம். இலவசமாய் குடுத்தும் ஒரு சதவிகிதம் மட்டுமே லினக்ஸ். மீதம் எல்லாம் விண்டோஸ். கம்ப்யூட்டர் தெரியாதாவர்களும் வொர்க் பண்ணலாம். லினக்ஸ் அப்படியா?

Unknown said...

இது பூல் சாதரண பிரச்சினைக்கு மண்டையை உடைக்கும்.

வடுவூர் குமார் said...

ஆமாங்க பூடானிஸ்ட்.தப்பிக்கும் வழியும் எளிதாகவே இருக்கும்.

வடுவூர் குமார் said...

என்ன பண்ணுவது!! பெரிய இடத்தில் இருப்பவர்கள் எல்லோருமே முயற்சிக்கு இடமே கொடுக்காமல் பொத்து பொத்து என்று அங்கேயே விழுகிறார்கள்.

NewSense admin said...

another thing in linux is dependancy problems,while installing softwares.

(sorry im just new to this blog. how to post comments in tamil,,? _

வடுவூர் குமார் said...

In linux install SCIM to type in tamil.
If u were in windows try NHM Writter.

Imran Mohamed , Sri Lanka said...

Unix has been used for 40 years for mainframes computers, Linux is a PC version of Unix in other words! So it is so fast and flexible to the computers!
Only problem supporting soft-wares and drivers,in future they will fix it!!!
Keep on studying Linux is interesting

வடுவூர் குமார் said...

yes Imran,who wants to explore different o/s linux is the best option.