Monday, November 06, 2006

பாகப்பிரிவினை (1)

சொத்துன்னு இருந்து பிள்ளைகளும் இருந்துட்டா இந்த பிரச்சனை வராம இருக்காது.ஒரே ஒரு குழந்தை மட்டும் இருந்தால் பிரச்சனை இல்லை.ஒன்றுக்கு மேல் போனால் அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கனும்.


மேலே சொன்னவையெல்லாம் வாழ்கையில் மட்டும் இல்லை கணினி வன்பொருள் வாங்கி இயங்குதளம் போடும் போது அததற்கு தேவையான இடத்தை கொடுத்துட்டு போய்டா, போகும் போதாவது நிம்மதியாக போகலாம் அல்லவா?
இதை ஆங்கிலத்தில் அதுவும் கணினி மொழியில் "Partition"என்று சொல்வார்கள்.

கொஞ்ச காலத்துக்கு முன்பெல்லாம் நமது "வின்டோஸ்" மாத்திரம் இருந்த நேரத்தில் ஒரு வன்பொருளை (Harddisk)ஐ மூன்றாகவோ நான்காகவோ பிரித்து ஒவ்வொன்றிலும் இயங்குதளம்,பாட்டு,புகைப்படம் மற்றும் தேவையான கடிதங்கள் என்று பிரித்துவைத்திருந்தார்கள்.இப்போதும் சிலர் அப்படி வைத்துள்ளார்கள்.இயங்கு தளத்தில் கோளாறு ஏற்பட்டு திரும்ப நிறுவவேண்டிய சமயத்தில் மற்றவற்றில் உள்ளவை அப்படியே இருக்கும்.

இன்று பல இயங்குதளம் வந்துவிட்ட நிலையில் ஏன் மைக்ரோசாப்ட்யே நோவலுடன் கூட்டு வைத்து கணினியில் ஒன்றாக இருக்க திட்டம் போடுகின்ற வேளையில்,நமது கணினியை தயார் நிலையில் வைக்கவேண்டாம்?

வாங்க, வைக்கலாம்.

லினக்ஸ் பற்றி எழுதிய பதிவில் திரு மயூரன் இந்த பங்காடுதல் பற்றி இலுகுவாக புரியுமாறு எழுதச்சொன்னார்.
அப்போது என்னிடம் புது வன்பொருள் இல்லாத்தால் கொஞ்சநாள் தள்ளிப்போட வேண்டியிருந்தது.
ஊருக்கு போவதற்கு முன்பு 80 GB கொள்ளலவு கொண்ட சீகேட் வன்பொருள் வாங்கினேன்.

அதை எந்த மாதிரி பங்கு போட்டேன் என்று காண்பிக்கிறேன்.

புரிஞ்சா எடுத்துக்கங்க புரியலை என்றால் "போட்டுத்தாக்குங்க"

நண்மையையும் தீமையும் "மயூரனுக்கே" போகட்டும். :-))

இந்த பாகப்பிரிவினைக்கு பல மென்பொருட்கள் சந்தையில் இருந்தாலும் "சும்மா" கிடைக்கச்சே எதுக்கு பணம் கொடுத்து வாங்கனும்.நாம்ம ஒன்னும் பொறக்கச்சே சில்வர் ஸ்பூனோட பொறக்கலேயே??அதனாலே இலவச மென்பொருளில் கிடைப்பதையே பார்ப்போம்.

இப்படியெல்லாம் எழுதுகிறதால் நான் இந்த விஷயத்தில் அதிமேதாவி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். வன்பொருள் வாங்கும் திறன் இருப்பதாலும் நாலையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதாலும் இந்த மாதிரி முயற்சிகளில் இறங்குகிறேன். அதே சமயத்தில் வலைபதிவாளர்களுக்கு போட்டு காண்பிக்கிறேன்.அவ்வளவு தான்.

பங்காடுதலுக்கு உரிய சில இலசவச மென் பொருட்கள்.

1.MS Bootable disk.
2.QT parted (இணையத்தில் இருந்து தரவிரக்கம் செய்து கொள்ளலாம்)
3.Knoppix Live Cd (இதிலும் இரண்டாம் நிலையில் உள்ள மென்பொருள் தான் உள்ளது)
4.Ultimate Bootable Cd (இதில் பல மென் பொருட்கள் சேர்ந்து கிடைக்கிறது,இதையும் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.
5.இன்னும் இருக்கு பல,இப்போதைக்கு நம்பர் 2ஐ பார்க்கலாம்.

இப்படி பல இருந்தும் நான் எடுத்துக்கொள்ள இருப்பது No.2.

இப்போதைக்கு கீழே உள்ள படத்தை மட்டும் பாருங்க!!



மீதி அடுத்த பதிவில்..
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: