Saturday, September 30, 2006

லினக்ஸ் நிறுவுதல்

இதற்கு முந்தைய பதிவில் லைவ் வட்டு மூலம் எப்படி பார்பது என்பதை பார்த்தோம்.

இப்போது எப்படி நிறுவுவது என்று பார்கலாம்.













முதலில் உங்கள் "பூட்" ஆப்ஸனை திறந்து உங்கள் கணினி வட்டுமூலம் பூட் செய்யுமாறு மாற்ற வேண்டும்.

இதை அடைய ஒவ்வொறு கணினியிலும் ஒவ்வொறு மாதிரி.சில கணினியில் "Esc" or "F2" வை அழுத்த வேண்டும். சரியான சமயம் தெரியாவிட்டால் "tap" செய்துகொண்டிருந்தால் இந்த screen வரும்.












மவுஸ் வேலை செய்யாததால் தட்டச்சில் உள்ள அம்புக்கீ கொண்டு "பூட்" க்கு சென்று பிறகு கீழே செல்லக்கூடிய அம்பின் மூலம் -First Boot க்கு சென்று "Page up /down " கீ மூலம் சிடி ராம் க்கு மாற்றவும்.

பிறகு மறக்காமல் சேமித்துவிட்டு வெளியேறவும்.

இப்போது நான் நிறுவ எடுத்துக்கொண்ட லினக்ஸ் "Mandriva 2006".

இதை எனது அலுவலக நண்பன் திரு.Poo Chin Bee, தரவிரக்கம் செய்து எரித்துக்கொடுத்தான்.

அவனுக்கு நன்றி சொல்வோம்.

இனி தொடங்கலாம் நிறுவுதலை.

வட்டை சிடி அல்லது டிவிடி டிரைவில் போட்டு தொடங்கவும்.

இது என்னுடைய கணினிக்கு ஒத்து வராததால் நான் எப்படி என் கணினியில் செய்தேன் என்பதை வரும் பதிவுகளில் காணலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: