பிரச்சனை முந்தாநாள்(17Sep06) குவைத் ஹரியுடன் பேசி முடிக்கும் வேலையில் ஆரம்பித்தது.அப்போது நான் fedora 5 யில் என்னுடைய வெப்காமை வேலைசெய்ய வைக்க பிரம்மபிரயத்தனம் செய்துகொண்டிருந்தேன்.
ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.
அவரோடு வெறுமனே Type தானே பண்ணிக்கொண்டிக்கோம் சரி அதற்குள் எதுவும் புதிய மென்பொருள் இருக்கிறதா என்று பார்பதற்கு உதவும் yum Extender என்று சொல்லப்படுகிற "yumex" ஐ சொடுக்கினேன்.வழக்கம் போல் எல்லாம் சரியாக போய்கொண்டிருந்த வேளையில் திடிரென்று system hang ஆகிவிட்டது.என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை.சரி இதற்கு மேல் நேரம் இல்லை என்பதால் கணினியை மூடிவிட்டு சென்றுவிட்டேன்.
இத்தனை நாள் இப்படி நடக்காததால் மண்டைக்குள் ஒரு அரிப்பு.என்ன காரணம்? என்று.
பல நாட்கள் இதன் பக்கம் போகாததால் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன.Fedora forum.org போய் "Yumex" என்று தேடியபோது பலருக்கு இப்படி நேர்தது தெரிந்த்தது,அதற்கான விடையும் கிடைத்தது.தாவது இந்த மாதிரி மென்பொருட்கள் இருக்கும் இடத்தை லினக்ஸில் "Repositries" என்று சொல்வார்கள்.இது பல இடங்களில் இருப்பதாலும் சிலவற்றுக்குள் ஒத்துப்போகாத தண்மை கொண்டிருப்பதாலும் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரியவந்தது.அதற்குரிய setting யில் சில மாறுதல்களை செய்யச்சொல்லியிருந்தார்கள்.
இதை onlineயில் படித்துக்கொண்டிருக்கும் போதே மற்றொரு முறை முயற்சிப்போம் என்று சொடுக்கினேன்.கொஞ்ச நேரத்துக்கு சரியாக இருந்தது.இந்த நேரத்தில் தேவையான மாறுதல்களை பண்ணலாம் என்றால் எல்லாம் Grey out க இருந்தது.
சிறிது நேரத்துக்குப்பிறகு புரிந்தது.
இணையத்தில் இருந்து விடுவித்துக்கொண்டு திரும்பவும் Yumex ஐ சொடுக்கி தேவையான மாறுதல்களை செய்தபிறகு திரும்ப முயற்சித்தேன்.
சரியாகிவிட்டது.
அதற்கு பிறகு மயூரன் சொல்லியிருந்த ஒரு மென்பொருளையும் (ffmpeg) நிறுவினேன்.இனிமேல் தான் அதை திறந்து பார்க்கவேண்டும்.
இதை முடிக்கவே மணி இரவு 10.45 கிவிட்டதால் கணினியை மூடிவிட்டு பல் துலக்கிவிட்டு படுக்கைக்கு போக மணி 11 ஆகிவிட்டது.
அலாரம் நின்று போயிருந்ததால் அதை 24 மணி நேரக்கணக்கில் சரி செய்து காலை 4.45க்கு அலாரம் வைத்து தூங்கிவிட்டேன்.
முழிப்பு வந்து பார்த்தால் மணி காலை 2.45!!
என்ன இன்று இவ்வளவு சீக்கிரம் முழிப்பு வந்துவிட்டதே என்று திரும்ப தூங்கி எழுத்து பார்த்தால் காலை 3.58.
சே!!
என்னாயிற்று இன்று முழிப்பு இவ்வளவு சீக்கிரமே வந்துவிட்டது?? என்று யோசித்தபடியே திரும்ப படுக்கலாம் என்ற போது..
கா.. கா.. கா..
இவ்வளவு சீக்கிரம் காக்கா கரையாதே? என்ற யோஜனையுடன் ஹாலில் வந்து பார்த்தால் காலை மணி 6.
அப்புறம் என்ன?
சும்மா உட்கார்ந்திருப்பது,மூச்சுப்பயிற்சிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வேலைகளை மாற்றி மாற்றி செய்துவிட்டு 7.05க்கு வேலைக்கு கிளம்பினேன்.
நல்லா தூங்கியதற்கு காரணம் அலாரம் மட்டும் இல்லை..
மற்றொரு லினக்ஸில் (மேன்ரேக்-10.1)யில் என் மற்றொரு வெப்காம் வேலை செய்ததும் தான்.
அதைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.
No comments:
Post a Comment