இரவு முழுவதும் தரவிரக்கத்துக்கு போட்டுவிட்டு தூங்கினேன்,மறு நாள் சாயங்காலம் கணியை உபுண்டுவில் திறந்தால் மவுஸ் கர்சர்யை காணவில்லை.என்னடா இந்த தொந்தரவு என்று எதை எதையோ தோண்டி கூகிளிடம் கேட்டால் அது ஏதோ "Bug" சொல்லிவிட்டது.ஒரு சிலருக்கு தோனியதையெல்லாம் செய்த போது மவுஸ் திருப்பி கிடைத்தது அதையெல்லாம் நான் செய்த போது அது வேலைசெய்யவில்லை.
மவுஸ் கர்சர் மட்டும் இல்லை,எந்த விண்டோவிலும் மினிமைஸ்,Maximise மற்றும் மூட உதவும் பட்டன்களையும் பார்க்க முடியவில்லை அதோடு Move செய்யவும் முடியலை.
இன்று முழுவதும் தேடித்தேடி பல முயற்சிகளை செய்து கடைசியாக இந்த முறை எனக்கு உதவியது.
Synaptic யில் Metacity என்று தேடி அதை மறுமுறை நிறுவவும் அதன் பிறகு
System------>Preference----> Appearence-----> Visual Effects யில் Normal க்கு மாத்திடுங்க,அவ்வளவு தான் இனிமேல் எல்லாம் வேலை செய்யும்.இது ஒவ்வொரு முறை கணினியை ஆரம்பிக்கும் போது செய்யவேண்டி வரும்.
தற்காலிக நிவாரணம் தான்.
6 comments:
உபயோகமான தகவல்.
என்ன லினக்ஸ்
என்ன வெர்ஷன் என்று சொல்லவில்லையே!
Ok sir,
லினக்ஸ் வெர்ஸன் 10.04.
நன்றி குமரேசன்.
பாத்திங்களா இம்பட்ட காலமும் ஏமாத்தீட்டு..... இப்ப வந்த ஒர நல்லதை தந்திட்ட போறிங்களே உங்களுக்கே ஞாயமா..?
mathisutha.blogspot.com
வாங்க ம.தி.சுதா
என்ன பண்ணுவது ஏதாவது பிராபளம் வந்தால் தான் இந்த மாதிரி போடவேண்டியுள்ளது.
பகிர்வுக்கு நன்றி திரு.குமார் சார்
நான் உபுண்டு 9.04-லிருந்து 9.10-க்கு அப்டேட் செய்யும்போது எனக்கும் இந்த பிரச்சனை வந்தது முன்னரே இந்த தகவல் தெறிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் நன்றி சார்.
http://gnometamil.blogspot.com/
Post a Comment