Tuesday, September 21, 2010

திரும்பவும் Flash ல் தொந்தரவு.

உபுண்டுவில் ஒவ்வொரு முறையும் மேம்படுத்தும் போது ஏதாவது ஒன்று தொல்லை கொடுக்காமல் விடுவதில்லை, அந்த வரிசையில் சமீபத்தில் 10.04 க்கு மேஜை கணினியை மேம்படுத்தியவுடன் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் பயர்பாக்ஸ் மற்றும் சிஸ்டம்களில் சத்தம் இல்லை.
தேடு பொறியில் இரண்டு நாட்களாக தேடித்தேடி பலவற்றை படித்தாலும் நமக்கு தண்ணிகாட்டிக்கொண்டிருந்தது.எதேச்சையாக alsamixer ஐ டெர்மினலில் கொடுத்து ஒரு பாடலை ஓடவிட்டுக்கொண்டு ஒவ்வொரு சேனலையும் ஏற்றி இறக்கி முயற்சித்துக்கொண்டிருந்த போது ஒன்றில் மாறுதல் செய்யும் போது சத்தம் வர ஆரம்பித்தது.அடுத்து பயர்பாக்ஸ் இதிலும் விழுந்து எழுந்து என்னனென்வோ செய்தும் செம தண்ணிகாட்டியது.பல கருத்துகள் அதற்கேற்ப மாறுதல்கள்...சில மாறுதல் ஏன் செய்யவேண்டும் அதனால் என்ன பலன் என்ன என்பது கூட தெரியாமல் செய்தேன்,அசைய மருத்தது.இலவசமாக கிடைக்குதே என்று ஏன் இதோடு மன்றாடுகிறார் என்ற பார்வையோடு மனைவி!!

கடைசியில் வெற்றி கிடைத்தது இப்படி...

Firefox Address bar இல் about:plugins அடிங்க அவற்றில் இதுவரை நீங்கள் போட்டுள்ள plugin யின் வரிசை கிடைக்கும்.என்னுடைய firefox யில் இரண்டு வித Shock Flash Player இருந்தது. அதன் மேற்பகுதியில் அது எந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கும்.இப்போது என்னுடைய கணினியில் வெர்சன் 9 & 10 ம் இருந்தது. 9 தை நீக்கிவிட்டால் சரியாகிவிடும் என்று தோனி கீழ்கண்ட மாதிரி கமென்டை terminal லில் கொடுத்தேன் அவ்வளவு தான் சவுண்ட் அட்டகாசமாக வர ஆரம்பித்துவிட்டது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, August 30, 2010

மவுசை கானுமா?

இரவு முழுவதும் தரவிரக்கத்துக்கு போட்டுவிட்டு தூங்கினேன்,மறு நாள் சாயங்காலம் கணியை உபுண்டுவில் திறந்தால் மவுஸ் கர்சர்யை காணவில்லை.என்னடா இந்த தொந்தரவு என்று எதை எதையோ தோண்டி கூகிளிடம் கேட்டால் அது ஏதோ "Bug" சொல்லிவிட்டது.ஒரு சிலருக்கு தோனியதையெல்லாம் செய்த போது மவுஸ் திருப்பி கிடைத்தது அதையெல்லாம் நான் செய்த போது அது வேலைசெய்யவில்லை.

மவுஸ் கர்சர் மட்டும் இல்லை,எந்த விண்டோவிலும் மினிமைஸ்,Maximise மற்றும் மூட உதவும் பட்டன்களையும் பார்க்க முடியவில்லை அதோடு Move செய்யவும் முடியலை.

இன்று முழுவதும் தேடித்தேடி பல முயற்சிகளை செய்து கடைசியாக இந்த முறை எனக்கு உதவியது.

Synaptic யில் Metacity என்று தேடி அதை மறுமுறை நிறுவவும் அதன் பிறகு

System------>Preference----> Appearence-----> Visual Effects யில் Normal க்கு மாத்திடுங்க,அவ்வளவு தான் இனிமேல் எல்லாம் வேலை செய்யும்.இது ஒவ்வொரு முறை கணினியை ஆரம்பிக்கும் போது செய்யவேண்டி வரும்.
தற்காலிக நிவாரணம் தான்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, May 13, 2010

கூகிள் எர்த்-லினக்ஸில்

உபுண்டுவில் கூகிள் எர்த் எப்படி நிறுவுவது?
டெர்மினலை திறந்துகொள்ளவும் (Application-Accessories-Terminal)
முதல் படத்தில் உள்ள மாதிரி தட்டச்சு செய்து Enter ஐ அமுத்த வேண்டியது தான்.







முதலில் ஆரம்பிக்கும் போது கிராஸ் ஆனது பிறகு சரியாகிவிட்டது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, April 09, 2010

வீட்டுக்கு அழகு.

எப்பவும் போல் நம் வீட்டை அழகுபடுத்தி பார்க்கனும் அதுவும் சாமான்கள் வாங்குவதற்கு முன்பே செய்து பார்க்கனும் என்று தோன்றினால் மென்பொருட்களின் உதவியில்லாமல் முடியாது அதுவும் வின்டோஸ் கணினி என்றால் பல வித மென்பொருட்கள் இருக்கின்றன.அதெல்லாம் இருந்துட்டு போகட்டும் லினக்ஸில் என்ன இருக்கு என்று சுமார் 10 நிமிடத்துக்கு முன்பு கூகிளாரிடம் கேட்ட போது கொடுத்த முதல் மென்பொருள்..

SWEET HOME 3D



தரவிரக்கத்திற்கு தேவையான வழிமுறைகளை அங்கேயே கொடுத்திருக்கிறார்கள் அதன் படி செய்தால் சில நிமிடங்களில் உங்கள் வீட்டை வடிவமைக்க வேண்டிய மென்பொருள் தயாராக கணினியில் காத்திருக்கும்.எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் அவ்வப்போது பெட்டிச்செய்தியுடன் கொடுப்பதால் ஆர்வம் இருப்பவர்கள் உதவி கோப்பை கூட படிக்காமல் வேலை செய்யதொடங்கிடலாம்.



கட்டம் ஒன்று போட்ட உடனே அதன் பரப்பளவை கொடுத்துவிடுகிறது.ஜன்னல்,சோபா ...என்று எத்தனையோ விதங்களை கொடுத்து வேண்டிய இடத்தில் போட்டு அழகு பார்க்க வேண்டியது தான்.இப்படி உருவாக்கியதை பலவித கோப்புகளாக மாற்றவும் வசதி செய்துகொடுத்துள்ளார்கள்.உங்கள் கற்பனையை கட்டவிழ்த்து விட்டு தேவைப்பட்டதை போட்டு அழகு பாருங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, March 10, 2010

Auto Shutdown

சில சமயம் தரவிறக்கம் எப்போது முடியும் என்று தெரியாததால் கணினியை அப்படியே Onயில் விடவேண்டியிருக்கும் மற்றும் அவசியம் இல்லாத நேரத்தில் மின்சாரத்தை மிச்சம் பிடிக்க கணினியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மூடிக்கொள்ள வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். தேடுதலில் இறங்கிய போதும் அவ்வளவாக அகப்படவில்லை.உபுண்டுவில் Application---> கடைசியில் Ubuntu Software Centre யில் Gshutdown என்கிற மென்பொருள் கிடைக்கிறது,இதன் மூலம் உங்களுக்கு தேவையான நேரத்தில் கணினியை முழுவதுமாக மூடவைக்கலாம்.
முயன்றுபாருங்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, March 03, 2010

புதுப் புது மென்பொருட்கள்

உபுண்டு 9.10 போட்டு அதை மேம்படுத்திய பிறகு பார்த்தால் புதுப் புது மென்பொருட்களை அவ்வளவாக தேடாமல் இப்படி வரிசைப்படுத்தி கொடுத்துள்ளார்கள்.KDE மற்றும் Gnome க்கு என்று தனித்தனியாக கொடுத்துள்ளார்கள்.இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அதன் பெயர்களை கொண்டே கண்டுபிடித்துவிடலாம்.

பிறகு என்ன? தரவிறக்கி ஜாமாய்ங்க.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, February 18, 2010

USB இணைய இணைப்பு

லினக்ஸுக்கு USB என்றாலே ஆகாது போல் இருக்கு பல முறை சில வன்பொருட்களை வேலைசெய்ய வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.பொருமை இருந்தால் கவனமுடன் பிரச்சனைகளை அலசினால் வெற்றி பெறலாம் என்பதற்கு இது ஒரு சான்று.

மஸ்கட்டில் இணைய இணைப்பு பெரும்பாலான மக்கள் Nawras அல்லது Omantel ஐயே நம்பி இருக்கவேண்டியுள்ளது.நவ்ராஸூம் ஓமன்டெல் மூலமே இணைய இணைப்பை வழங்குவதாகவே தெரிகிறது.பல வித இணைப்புகள் இருந்தாலும் நான் தேர்தெடுத்து என்னுடைய அலைபேசி மூலம் ஏற்படுத்திக்கொடுக்கும் இணைய இணைப்பை தான்.இரண்டு நாளுக்கு இரண்டு ரியால்.2 GB அளவு மட்டுமே உபயோகிக்க முடியும்.இணைப்பு Wireless மூலம் கொடுக்கப்படுகிறது.

வின்டோசில் அலைப்பேசி மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்தி உபயோகிக்கும் போது என்ன தான் அலைபேசி மோடமாக செயல்பட்டாலும் இணைப்பின் வேகம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.இந்நிலையில் என் அலுவலகத்தில் இருப்போர் USB Dongle என்று சொல்லப்படுகிற வகை வன்பொருளை கொண்டு இணைய இணைப்பை ஏற்படுத்தி உபயோகித்திக்கொண்டிருப்பதை பார்த்தேன்.அவர்கள் சிம் கார்டை அதில் சொருகி அதன் மூலம் இணைப்பை கொண்டுவந்தனர்.அதை பார்த்த போது அதன் மேல் Oman Mobile என்று போட்டிருந்தது.என்னுடைய அலைப்பேசி Nawras என்பதால் அதை நான் உபயோகப்படுத்த முடியாது என்று நினைத்திருந்தேன் அதனால் நான் அதை வாங்கவும் இல்லை.என்ன தான் Nawras அதே வன்பொருளை 69 ரியாலுக்கு விற்றாலும், விலை அதிகம் என்பதால் அலைபேசியை மோடமாகவே உபயோகித்து வந்தேன்.இந்நிலையில் என்னுடன் வேலை பார்த்தவர் சிங்கப்பூர் திரும்புவதால் அந்த Dongle சும்மாகவே கிடந்தது.அதை ஒரு நாள் என்னுடைய வின்டோசில் போடு ஆராய்ந்துகொண்டிருக்கும் போது அதற்கு தேவையான டெலிபோன் எண் (*99#) மற்றும் APN முகவரியை கொடுத்தால் எந்த அலைபேசி இணைப்பையும் ஏற்படுத்தலாம் என்பதை தெரிந்துகொண்டேன்.இது தான் ஆதார சுருதி.

இதற்கிடையில் என்னுடைய சோனி எரிக்சன் முலம் உபுண்டுவில் தேவையான மாறுதலை செய்துகொண்டு மேம்படுத்திக்கொண்டிருந்தேன்.ஒரே ஒரு மேம்பாடு (WICD) எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப்போட்டு இணைய இணைப்பே இல்லாமல் செய்துவிட்டது.எல்லா இடங்களில் சொல்லப்பட்ட செயல் முறைகளை செய்துப்பார்த்து சோர்ந்துவிட்டேன்.கொஞ்ச நாள் இந்த பக்கமே வராமல் இருந்துவிட்டாலும் அவ்வப்போது சும்மா கிடக்கே என்று திரும்பவும் தேடுதலை ஆரம்பித்தேன்.

நான் செய்ததெல்லாம் இது தான்.

1.என்னுடைய WVdial கோப்பை மாற்றி அமைத்தேன்.
2.Wicd ஐ தூக்கிவிட்டு Network Manager ஐ நிறுவினேன்.
3.Kernal ஐ மேம்படுத்தினேன்.

அதன் பிறகு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.





முடிந்தது கதை.இந்த பதிவு கூட இதன் மூலம் கிடைத்த இணைய இணைப்பில் தான்.இந்த Network Manager ஏதும் வேலை செய்கிறதா என்று தெரியவில்லை.பாருங்கள் 2 மாத இணைப்பு என்று காண்பிக்கிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...