Wednesday, May 21, 2008

தமிழ் எழுத்துரு பிரச்சனை

உபுண்டு 8.04 க்கு மாறிய பிறகு தமிழ் எழுத்துக்கள் அதுவும் தமிழ்மணம் தெரிவதில் பிரச்சனை இருப்பதாக போன பதிவில் எழுதியிருந்தேன்.

சில நாட்கள் கழித்து சாரங்கன் இதற்கு மாற்று வழி இருப்பாதகவும் அதைப் பற்றி எழுதியிருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

அவர் சொன்னபடி செய்து பார்த்தால் ஜிஎடிட்டில் நன்றாக தெரியும் எழுத்து தமிழ்மணத்தில் கொஞ்சம் கலங்கலாகத் தான் தெரிகிறது.

கீழே உள்ள படத்தில் பார்க்கவும்...



சாரங்கன் வேறு வழி எதுவும் இருக்கா?

நன்றி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

து. சாரங்கன் / Saru said...

தமிழ்மணத்துக்கு சென்று பார்த்தேன். எனக்கு நல்லாத்தன் தெரியுது. என் பதிவில சொன்னதுபோல, ஜிஎடிட்டில் எழுத்து நல்லா வந்தவுடன், ஃபயர்ஃபாக்ஸை மீள்துவக்கினீர்களா? (i.e. restart)

து. சாரங்கன் / Saru said...

மேலும் திரைவெட்டு எடுப்பதற்கு "Print Scrn" விசையை அழுத்தினாலே போதும். குனோம் திரைவெட்டை எடுத்துவிட்டு பின் சேமிக்கச் சொல்லி கேட்கும். அல்லது ALT +PRINT SCRNஐ அழுத்தினால் தற்போது உள்ளிடுகளை பெறும் சாளரம் (Window currently in focus) மட்டும் திரைவெட்டில் வரும்.

உபுண்டுவில் நீங்கள் "Compiz" பயன்படுதினால், WIN + MOUSE BUTTON 1 மூலம் திரையில் ஒரு கட்டம் வரைந்து அந்த இடத்தை மட்டும் ஒரு படமாக சேமிக்கலாம்.

Ram Vibhakar said...

மிக்க நன்றி. எனக்கு பிரச்சனை தீர்ந்துவிட்டது . Firefoxஐ restart செய்து பாருங்கள் .

வடுவூர் குமார் said...

சாரங்கன்... இன்று சரியாக தெரிகிறது.
நன்றி பல.

sankar said...

hello i see u r blog see my blog tcln.blogspot.com click ads only