கட்டுமானத்துறையும் இந்த வரைகலையும் இப்போது பிரிக்கமுடியாத அளவுக்கு போய்விட்டது.விண்டோஸில் இதன் தொடர்பில் பல மென்பொருட்கள் இருந்தாலும் அடிச்சிக்கமுடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பது என்னவோ “AutoCad" தான்.
இதை விண்டோஸில் புரிந்துகொள்வதற்குள் நான் படாத பாடுபட்டேன்,ஆதாவது எந்த வகுப்புக்கும் போகாமல் வெறும் கேள்வி ஞானத்துடன் முயற்சித்தேன்.கொஞ்ச நாள் விடாது விழுந்து பிறகு அலுத்து “சீ இந்த பழம் புளிக்கும்” என்று விட்டெரிந்துவிட்டேன்.
ஒரு சமயத்தில் வர வேண்டிய பிராஜட் நேர கால தாமதம் ஆக கம்பெனி செலவிலேயே அனுப்பி படிக்கவைத்தார்கள்.ஏற்கனவே மண்டைக்குள் கொஞ்சம் போட்டு வைத்திருந்ததால் ஒரு வார கோர்ஸில் தேவையானவற்றை பிடித்துக்கொண்டுவிட்டேன்.
புது பிராஜட் வந்தவுடன் வேறு இடம்,புதிய தலைவர் என்றானவுடன் கணினியும் புதிதாக வாங்கப்பட்டது.தேவையான மென்பொருள் பட்டியலில் ஆட்டோகேட்டும் போட்டு கொடுத்தேன்.
அதி வேக புது கணினி கிடைத்தது அத்துடன் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் தலைவரும் வாய்த்தார். :-)
மென்பொருள் வாங்குபவதில் சுணக்கம் தெரிந்தது.சரி, சும்மாக இருக்காமல் கம்பெனி IT ஆளுங்களுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன்,ஆதாவது லினக்ஸில் இலவசமாக கிடைக்கக்கூடிய "QCAD" உள்ளது அதை இப்போது US 50 டாலருக்கு விற்கிறார்கள்,வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்றேன்.
அவ்வளவு தான்,உடனே ஒரு பழைய கணினியில் ரெட் ஹேட் லினக்ஸை போட்டு கொடுத்துவிட்டார்கள்.அதில் வரைபடம் போடப்போகும் போது தான் ஆட்டோகேட்க்கும் அதற்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருந்தது தெரிந்தது.
சரியான விளக்கப்புத்தகம் இல்லாததாலும் சொல்லிக்கொடுக்க யாரும் இல்லாததாலும் போராட ஆரம்பித்தேன்.விடை கீழே உள்ளது.
ஆர்வம் உள்ளவர்கள் அனுபவிக்கவும்.
இன்னும் புரிந்துகொள்ள அதிகம் இருந்தாலும் சிறிய நிறுவனங்களுக்கு இது சரியான விலையே இல்லாததாலும் பொருத்தமாக இருக்கும்.நான் உபயோகிப்பது பழைய வர்சன்.
புதிய டிரைல் வர்சனில் 10 நிமிடங்கள்,மொத்தமாக 100 நிமிடங்கள் இலவசமாக உபயோகிக்கலாம்.
ஐம்பது வெள்ளிதானா!! முயற்சிக்கலாம்.
8 comments:
உங்களது லினக்ஸ் அறிவு - மிக ஆழமானது. தொடர்ந்து பரிமாறுங்கள்
வாங்க தமிழ்நெஞ்சம்
இது (லினக்ஸ்)கடலை விட பெரியதுங்க.
என்னுடையது வெறும் அனுபவ அறிவு தான்.
அவ்வப்போது தெரிய வரும் விஷயங்களை சொல்கிறேன்.
வருகைக்கு நன்றி.
உங்கள் தளத்தில் Beryl 3D பற்றி பதிவு இல்லை என்று நினைக்கிறேன். Vistaவிற்கு இணையாக desktopஐ மாற்றும் Beryl பற்றிய video இதோ
http://www.youtube.com/watch?v=lawkc3jH3ws
வாங்க ராம் விபாகர்
இன்னும் நான் இதை உபயோகிக்கவில்லை, இதற்கு நல்ல வீடியோ கார்ட் தேவை அது இப்போது என் கணினியில் இல்லை.
உங்கள் தொடுப்புக்கு நன்றி.
சார் , நான் எனது கணினியில் உபுண்டு நிறுவினேன் . நான் fedora விலிருந்து உபுண்டுவிற்கு மாறியுள்ளேன். இதில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி ?? mplayer ,xmms,real player போன்ற மென்பொருட்களை .deb format இல் இறக்கம் செய்தேன் . ஆனால் "Dependency not satisfiable" என்று சொல்லுகிறது . உபுண்டுவில் .rpm file களை நிருவமுடியதா ?? ரொம்ப குழப்பமாக உள்ளது ..
http://kumarlinux.blogspot.com/2007/03/blog-post_16.html
ராம் விபாகர்- இந்த தொடுப்பில் விபரங்கள் இருக்கு பாருங்க,இப்ப புரியும் என்று நினைக்கிறேன்.
சார் , மிக்க நன்றி . தற்போது நான் உபுண்டுவில் அணைத்து Software ஐயும் install செய்ய முடிகிறது. Software Sourcesஇல் சில settings மாற்றினேன். இப்போது நீங்கள் கூறியது போல Synaptic
package managerஐ பயன் படுத்தமுடிகின்றது .
http://ibeentoubuntu.blogspot.com/2007/10/worried-about-how-to-play-mp3-and-divx.html
இந்த சுட்டி மூலம் மூன்று படிகளில் முக்கியமான படிகளில் அணைத்து software ஐயும் install செய்துவிட்டேன் .
ராம் விபாகர்
மிக்க சந்தோஷம்.
Post a Comment