Saturday, June 09, 2007

லினக்ஸில் தமிழ்-2

போன பதிவில் லினக்ஸில் எப்படி தமிழில் உள்ளீடு செய்வது என்று வரியில் எழுதியிருந்தேன்.அது ஒருவருக்கு சரியாக வரவில்லை என்று சொல்லியிருந்தார்.அவர் குறையை நீக்க படத்துடன் கொடுத்துள்ளேன்.இன்னும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

நீங்கள் பார்பது பெடோரா 7 வில் எடுத்த படங்கள்.மற்ற லினக்ஸில் கொஞ்சம் வேறுபடும் அவ்வளவு தான்.

முதலில் ---> Application ----> Add/Remove software


மேலே உள்ள படத்தில் பாருங்க மொழிகள் இடது பக்கமும் அதற்கான தேர்வுகள் வலது பக்கமும் உள்ளது.தமிழை தேர்ந்தெடுங்க.இந்த Packager Manager வேலை செய்ய இணைய இணைப்பு தேவைப்படும்.இந்த மென்பொருட்கள் உள்ள சர்வரை அடைந்து அங்கு என்னென்ன மென்பொருட்கள் இருக்கு என்பதை காண்பிக்க இணையம் வேண்டும்.மறக்காமல் Apply ஐ சொடுக்கினால்,அதுவே நிறுவிக்கொள்ளும்.அதன் பிறகு

System--->Preferences----> Presonal ---> Input Method அதன் படம் கீழே



உடனே அதற்கு உண்டான பெட்டி கீழே காண்பித்த மாதிரி திறக்கும்.அதில் SCIM என்பதை தேர்ந்தெடுங்கள்.


இதை மூடிய பிறகு, இப்போது Desktop மேல் வலது பக்கம் பாருங்கள் சின்னதாக ஒரு கீ போர்ட் தெரியும் அதை ஒரு முறை சொடுக்கினால்,கீழே உள்ள மாதிரி விரிவடையும்.



தேவையான வற்றை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்ய வேண்டியது தான்.இதே முறையில் Open Office யில் எதில் வேண்டுமென்றாலும் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

இணையத்தில் தமிழில் உள்ளீடு செய்ய வேண்டுமா அதுவும் பயர்பாக்ஸில் செய்ய வேண்டுமா?
Firefox- Add on க்கு போய் தமிழ் கீ என்று தேடினால், திரு.முகுந்த் எழுதிய கீ கிடைக்கும்.இதை நிறுவுங்கள்.அதற்கு பிறகு பயர்பாக்ஸை மூடி திறங்கள்.

திறந்த பிறகு மவுஸில் வலது பக்கம் சொடுக்கவும்.கீழே காட்டியுள்ள மாதிரி கிடைக்கும்.அஞ்சல் முறையை தேர்ந்தெடுத்தால் Phonetic முறையில் தட்டச்சலாம்.




எங்கும் எதிலும் தமிழை புகுத்துவோம்... வாருங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

ரத்தினகிரி said...

எங்கும் எதிலும் தமிழ் என்னும் உங்கள் நோக்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே!

வடுவூர் குமார் said...

நன்றி ரத்தினகிரியாரே.
முதல் வருகைக்கும் நன்றி.

ரத்தினகிரி said...

முன்பே வந்திருக்கின்றேன் நண்பரே!

அப்போதெல்லாம் லினக்ஸில் தமிழ் பற்றி அறிந்திருக்கவில்லை. நேற்று லினக்ஸ் நிறுவும் போது SCIM நிறுவி தமிழில் தட்டச்ச மிகவும் உதவியாய் இருந்தது உங்களின் இந்தப் வலைப்பூ பதிவு.

நன்றி.

எங்கள் சிறு முயற்சியாம் முத்தமிழ்மன்றமும் முடிந்தால் வாருங்கள்!

http://www.muthamilmantram.com

வடுவூர் குமார் said...

அருமை அருமை.. நன்றாக உள்ளது.
தேவைப்படும் சமயத்தில் அங்கும் எழுதுகிறேன்.
அறிமுகபடுத்தியதற்கு நன்றி.

கணியன் said...

குமார்

நீங்க உபுண்டு மற்றும் பொதுவாக குனு சார் விஷயங்கள் பற்றி எழுதினால் அவற்றை வகைப் படுத்தி அதன் RSS ஓடையின் முகவரியினைத் தந்துதவுங்கள்.

http://www.ubuntu-tam.org/planet ல் பிரதிபலிக்கலாம்.

நன்றி..

வடுவூர் குமார் said...

நிச்சயமாக, அம்மாச்சு.
அதற்கு முன்பு இந்த RSS feed ஐ பற்றி தெர்ந்துகொள்ளவேண்டும். :-))

jeevagv said...

குமார்,
என் அலுவலக கணிணியில் ஃபெடோரா கோர் 3 இயங்கிக்கொண்டிருக்கிறது. அதில் தமிழ் தட்டச்சு செய்ய ஓரளவு முயன்று - தோல்விதான்...!

ஃபெடோரா 7 க்கு Upgrade செய்ய வேண்டியது அவசியமா?

நன்றி!

வடுவூர் குமார் said...

ஜீவா
ஃபெடோரா 3 யில் இருந்து 7 க்கு மேம்படுத்தாதீர்கள்.பல சமயங்களில் அவ்வளவு சிறப்பாக வேலை செய்வதில்லை.
புதிதாக நிறுவிக்கொள்ளுங்கள்.
ஃபெடோரா நன்றாக உள்ளது.உங்கள் தமிழ் உள்ளீடு ஃபயர் பாக்ஸிலா? ஓபன் ஆபிஸிலா?
ஃபெடொரா 3 டோடு போராடுவதற்கு புதியதை நிறுவிவிடலாம்.

kuppuswamy said...

நல்முயற்சி வாழ்த்துக்கள் ! தங்கள் இந்த முயற்சி மற்றவர்களுக்கு வழிகாட்டுதலாக அமையட்டும். தமிழைத் தமிழில் எழுத லினக்சை பயன்படுத்துவோமே ! இன்று பெடோரா 16 லினக்சின் உதவியுடன் விண்டோசை விட மிக எளிமையாக எனது கணினி பணி மேடையையும், பயர்பாக்சு வெப் பிரவுசரையும் முழுமையாக தமிழில் பயன்படுத்த முடிகிறது. எனது இந்த முயற்சி இன்று வெற்றியடைந்துள்ளது. முயற்சி செய்தால் விண்டோசை விட லின்க்சில் தமிழை பயன்படுத்துவது மிக எளிது என்பது புலனாகு