Friday, March 16, 2007

லினக்ஸில் மென்பொருள்

புதிதாக லினக்ஸ் நிறுவும் பலருக்கு தங்களுக்கு தேவையான மென்பொருளை எங்கிருந்து பெருவது அதை எப்படி நிறுவுவது என்ற குழப்பம் இருக்கும்.

நான் 5 வருடங்களுக்கு முன்பு நிறுவிய போது எல்லாமே கன்சோல் மூலமாக இருந்தது.இப்போது பல மாற்றங்கள் வந்து மிக எளிதாக மாறிவிட்டது.

லினக்சஸில் பல மாதிரிகள் இருப்பதால் மிக சுலபமாக உள்ள உபுண்டு லினக்ஸில் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

முதலில், கிடைக்கும் பல மென்பொருட்கள் .EXE ஆக கிடைக்காது.பைனரி மோடாகவோ அல்லது அந்தந்த லினக்ஸ் வகைக்கேற்றவாறு கிடைக்கும்.
உதாரணமாக:
பெடோரா: .RPM ஆகவும்
உபுண்டு : .DEP ஆகவும் கிடைக்கும்.
இது எங்கு கிடைக்கும்?
இது இருக்கும் இடத்துக்கு பெயர் :Repositries (தமிழாக்கச் சொல்லாதீர்கள்!!)
சரி உபுண்டுவில் பார்ப்போம்,
படத்தை பார்க்கவும்,





இதில் Synaptics Package Manager என்று இருக்கும் இடத்துக்கு போய், சொடுக்கவும்.

அது பிறகு இப்படி விரியும்.




இதில் ஒவ்வொரு தலைப்பின் வலது பக்கத்தில் விபரமாக கொடுத்திருப்பார்கள்.

எது வேண்டுமோ அதை சொடுக்கி பிறகு வலது சொடுக்கு மூலம் "Mark for Installation" என்பதை தேர்தெடுக்க வேண்டியது தான்.

பல மென்பொருள் நிறுவுதலுக்கு கணினியை Restart செய்யவேண்டிய அவசியமில்லை.

மிக முக்கியமாக "இணைய இணைப்பு" இருக்கா என்று பாருங்கள்.

சரி என்னிடம் இணைய இணைப்பு இல்லை,வேறு கணினி மூலம் சேமித்து என் கணினிக்கு கொண்டு வரமுடியுமா?

முடியும்.

அதற்கு முன்னால்..

லினக்ஸில் ஒரு மென்பொருள் நிறுவ அதனுடன் ஒத்திசைக்கப்பட்ட துணை மென்பொருட்கள் உங்கள் கணினியில் இருக்க வேண்டும்.அது இல்லாவிட்டால் பிழை செய்தியுடன் நின்று போய்விடும்.

உபுண்டு லினக்ஸ் வட்டு வெறும் 700 MB அளவு தான்,அதனால் மென்பொருள் நிறுவுவதற்கு தேவையான அவ்வளவு மென்பொருட்கள் அதனுள் இருக்காது.அதே FEDORA CORE எடுத்துக்கொண்டால் அதன் கொள்ளலவு கிட்டத்தட்ட 3 GB. இதில் தேவையான கம்பைலர் இருக்கும்.

ஆமாம் இந்த பேக்கேஜ் மேனேஜர் என்ன வேலை செய்கிறது?கேள்வி கேட்க கேட்க லினக்ஸில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.ஆதாவது இருக்கும் சில Repositries உள்ளே இருக்கும் மென்பொருளையும்,உங்கள் கணினியில் இருக்கும் மென்பொருளுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது.மேம்படுத்த வேண்டியவை/நிறுவியவை எவை என்பதையெல்லாம் பட்டியல் போட்டு காண்பித்துவிடும்.

இப்படி தரவிரக்கம் செய்வது தவறா?

இன்று வரை இல்லை.

ஏன் நம்மிடையே கூட சிலர் லினக்ஸை பற்றி அவ்வப்போது எழுதிவருகிறார்கள்.

அவர்களில் சிலர்
மயூரன்
மா.சிவக்குமார்

ஆர்வம் இருப்பவர்கள்,உங்கள் கணினியில் நிறுவிப் பார்கலாமே!!.

அடுத்த பதிவில் FEDORAவில் எப்படி என்று பார்ப்போம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

- உடுக்கை முனியாண்டி said...

//லினக்ஸில் ஒரு மென்பொருள் நிறுவ அதனுடன் ஒத்திசைக்கப்பட்ட துணை மென்பொருட்கள் உங்கள் கணினியில் இருக்க வேண்டும்.அது இல்லாவிட்டால் பிழை செய்தியுடன் நின்று போய்விடும்.//

லினக்ஸில் இருந்த ஒரு மாபெரும் பிரச்சனை இது. ஆனால் இப்பொழுது மிக எளிதாகிவிட்டது.

உபுண்டு டிவிடியிலும் கிடைக்கிறது. டிவிடியில் அதிகமான மென்பொருட்கள் உண்டு. இணைய இணைப்பு இல்லாதவர்கள் அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

ஒன்று தெரியுமா, விண்டோஸ் எனக்குத் தெரிந்து தமிழில் கிடையாது. ஆனால் முக்கியமான லினக்ஸ் பொதிகள் தமிழில் உண்டு. இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருப்பீங்கள் என்று நினக்கிறேன்

தமிழ்பித்தன் said...

உண்மையில் எனக்கு லினக்ஸ் பற்றி எதுவுமே தெரியாது ஆனாலும் நீங்கள் எழுதுவதில் இப்போது சிலதை குறிப்பெடுக்க ஆரம்பித்திருக்கிறேன் இன்னும் எழுதுங்கள் என்போற பலருக்கு உதவியாய் இருக்கம்

வடுவூர் குமார் said...

முதல் வருகைக்கு நன்றி உடுக்கை முனியாண்டி.
நீங்கள் சொல்வது போல் டிவிடி மூலமும் செய்துகொள்ளலாம்.
ஃபயர் பாக்ஸ் 2ம் திரு முகுந்தின் Add-on தமிழ் கீ மூலம் பின்னூட்டம் இட மிக சுலபமாக போய்விட்டது.அதையே ஓபன் ஒபீஸில் தட்டச்சு செய்வது என்றால் உபுண்டுவில் திணறுகிறது,ஃபெடோரவில் அழகாக வேலை செய்கிறது.
என்னுடைய ஃபெடோர தமிழ் முகப்பில் தான் சில நாட்கள் முன்பு இருந்தது.
வரும் நாட்களில் இன்னும் மேம்படும் என்று கொள்ளலாம்.

வடுவூர் குமார் said...

வாங்க தமிழ்பித்தன்,
கடந்த 7 வருடங்களாக அவ்வப்போது இதில் ஏதேனும் செய்துவருகிறேன்.
கொஞ்சம் அப்படியே பின்னால் உள்ள பதிவுகளையும் பார்க்கவும்,புதியவர்களுக்காக நிறைய எழுதி,படத்துடன் போட்டுள்ளேன்.
ஆர்வம் உள்ளவர்களுக்கு சுட்டிக்கொடுங்கள்.நமது மக்கள் பயன்பெறட்டும்.
முதல் வருகைக்கு நன்றி.

Deepa said...

:O .. தலை சுத்துதே...
சே... class ஆரம்பிச்சப்பவே கட்-அடிச்சா இப்பிடி தான் திரு-திரு முழிக்கணும்..
arreyers எல்லாம் க்ளியர் பண்ணிட்டு வந்து இதுக்கு பின்னூடம் போடறேன்

வடுவூர் குமார் said...

வாங்க தீபா
என்னது அரியர்ஸ் கிளியர் பண்ணிட்டா..!!
அனேகமாக அப்போதும் இப்பதிவு இப்படியேத்தான் இருக்கும். :-))
கொஞ்சம் முன்னாடி போய் பாருங்க நிறைய விஷயம் இருக்கு.

பங்காளி... said...

லினக்ஸ் பற்றி மேலும் எழுதுங்கள் குமார்...

உங்களின் லினக்ஸ் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்...நிறைய சந்தேகங்கள் உண்டு....

கேள்விகளாக கேட்கலாமா?..நிறைய கிறுக்குத்தனமான, சிறுபிள்ளைத் தனமான கேள்விகளும் உண்டு.....அடிப்படை பிடிபடாததே இதன் காரணம்....

வடுவூர் குமார் said...

வாங்க பங்காளி
கேளுங்கள்..
எனக்கு தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன்.லினக்ஸ் ஒரு கடல்.
பலர் உபயோகப்படுத்துவதில்லை,உபயோகப்படுத்துபவர்கள் அதைப்பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை என்ற மனக்குறை உள்ளது.
அதனால் தான் எனக்கு எவ்வளவு தெரிகிறதோ அதை மட்டும் சொல்லிவருகிறேன்.சிலவற்றில் எனக்கும் சந்தேகம் உள்ளது.
இன்று மா.சிவக்குமார் கூட ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்கள்.