நான் 5 வருடங்களுக்கு முன்பு நிறுவிய போது எல்லாமே கன்சோல் மூலமாக இருந்தது.இப்போது பல மாற்றங்கள் வந்து மிக எளிதாக மாறிவிட்டது.
லினக்சஸில் பல மாதிரிகள் இருப்பதால் மிக சுலபமாக உள்ள உபுண்டு லினக்ஸில் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
முதலில், கிடைக்கும் பல மென்பொருட்கள் .EXE ஆக கிடைக்காது.பைனரி மோடாகவோ அல்லது அந்தந்த லினக்ஸ் வகைக்கேற்றவாறு கிடைக்கும்.
உதாரணமாக:
பெடோரா: .RPM ஆகவும்
உபுண்டு : .DEP ஆகவும் கிடைக்கும்.
இது எங்கு கிடைக்கும்?
இது இருக்கும் இடத்துக்கு பெயர் :Repositries (தமிழாக்கச் சொல்லாதீர்கள்!!)
சரி உபுண்டுவில் பார்ப்போம்,
படத்தை பார்க்கவும்,
இதில் Synaptics Package Manager என்று இருக்கும் இடத்துக்கு போய், சொடுக்கவும்.
அது பிறகு இப்படி விரியும்.
இதில் ஒவ்வொரு தலைப்பின் வலது பக்கத்தில் விபரமாக கொடுத்திருப்பார்கள்.
எது வேண்டுமோ அதை சொடுக்கி பிறகு வலது சொடுக்கு மூலம் "Mark for Installation" என்பதை தேர்தெடுக்க வேண்டியது தான்.
பல மென்பொருள் நிறுவுதலுக்கு கணினியை Restart செய்யவேண்டிய அவசியமில்லை.
மிக முக்கியமாக "இணைய இணைப்பு" இருக்கா என்று பாருங்கள்.
சரி என்னிடம் இணைய இணைப்பு இல்லை,வேறு கணினி மூலம் சேமித்து என் கணினிக்கு கொண்டு வரமுடியுமா?
முடியும்.
அதற்கு முன்னால்..
லினக்ஸில் ஒரு மென்பொருள் நிறுவ அதனுடன் ஒத்திசைக்கப்பட்ட துணை மென்பொருட்கள் உங்கள் கணினியில் இருக்க வேண்டும்.அது இல்லாவிட்டால் பிழை செய்தியுடன் நின்று போய்விடும்.
உபுண்டு லினக்ஸ் வட்டு வெறும் 700 MB அளவு தான்,அதனால் மென்பொருள் நிறுவுவதற்கு தேவையான அவ்வளவு மென்பொருட்கள் அதனுள் இருக்காது.அதே FEDORA CORE எடுத்துக்கொண்டால் அதன் கொள்ளலவு கிட்டத்தட்ட 3 GB. இதில் தேவையான கம்பைலர் இருக்கும்.
ஆமாம் இந்த பேக்கேஜ் மேனேஜர் என்ன வேலை செய்கிறது?கேள்வி கேட்க கேட்க லினக்ஸில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.ஆதாவது இருக்கும் சில Repositries உள்ளே இருக்கும் மென்பொருளையும்,உங்கள் கணினியில் இருக்கும் மென்பொருளுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது.மேம்படுத்த வேண்டியவை/நிறுவியவை எவை என்பதையெல்லாம் பட்டியல் போட்டு காண்பித்துவிடும்.
இப்படி தரவிரக்கம் செய்வது தவறா?
இன்று வரை இல்லை.
ஏன் நம்மிடையே கூட சிலர் லினக்ஸை பற்றி அவ்வப்போது எழுதிவருகிறார்கள்.
அவர்களில் சிலர்
மயூரன்
மா.சிவக்குமார்
ஆர்வம் இருப்பவர்கள்,உங்கள் கணினியில் நிறுவிப் பார்கலாமே!!.
அடுத்த பதிவில் FEDORAவில் எப்படி என்று பார்ப்போம்.