போன பதிவில் எக்ஸ்டென்டை பார்டீசியன் வரை பார்த்தோம்.
முதல் 3 பகுதி பிரித்த பிறகு மீதமுள்ளவற்றை எக்ஸ்டென்டட் ஆக வைத்துக்கொள்ளவேண்டும்.
Create யில் "எக்ஸ்டென்டட்" என்று மாற்றிக்கொள்ளவும்.மீதமுள்ள எக்ஸ்டென்டை இப்போது தனித்தனியாக தேவையான அளவில் பிரிக்கவேண்டும். லாஜிகல் ஆக.
இங்கு கொஞ்சம் கவனம் தேவை.என்ன என்ன இயங்குதளம் போடப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்த பிறகு,துண்டாடவும்.
நான் லினக்ஸ் போட நினைத்ததால் Ext2 வகை ஃபயில் சிஸ்டம் ஒரு 11.72 ஜிபிக்கு துண்டு போட்டேன்.
லினக்ஸ் போடப்போகும் பட்சத்தில் அதற்கு தேவையான ஸ்வாப் பார்டிசியன் வேண்டும். அதன் அளவு உங்கள் ரேமின் அளவில் இரு பங்கு இருக்குமாறு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
கீழே உள்ள படத்தைப்பார்க்கவும்.
லினக்ஸ்க்கு போக மீதியிருந்ததை fat32 வுக்கு போட்டேன்
தேவையானது எல்லாம் செய்தாகிவிட்டது.
அப்ளை செய்யவேண்டும்.
இப்போது உங்கள் வன்பொருள் நீங்கள் விரும்பியபடி துண்டாடப்படுகிறது.
அவ்வளவு தாங்க.
முயற்சி செய்துபாருங்கள்.
Firefox யில் பார்ப்பவர்கள் பொருத்துக்கொள்ளவும்.அவ்வப்போது பிளாக்கரில் படம் ஏற்றமுடியாததால் வேறு முறையில் ஏற்றுவதால் தாறுமாறாக தெரியக்கூடும்.
No comments:
Post a Comment