இயங்கு தளம் இலவசம்!
மென்பொருட்கள் இலவசம்!
பாதுகாப்பு கவசம் இலவசம்!
இப்படி பல விஷயங்கள் இலவசமாக இருக்கும் போது ஏன் இந்த சிடியையும் இலவசமாக கொடுக்கக்கூடாது.இணைய இனைப்பு அவ்வளவு சரியாக இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
அந்த மாதிரி எதுவும் இருக்கா?
இருக்கே!!
வீட்டுக்கே அஞ்சலில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!இன்னும் பலர் முயற்சிக்கலாமே?
நல்ல கேள்வி தான்.இன்னும் பலர் மிக மோசமான இணைய இணைப்பிலேயே வாழ்கிறார்கள் அவர்களுக்காக ..
இந்த தளத்திற்குப்போய் உங்கள் விபரங்களை கொடுத்தால் உங்கள் வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள்.இதில் 2 விதமான வட்டுக்கள் இருக்கும் (படத்தை பார்க்கவும்).
ஏதோ வீட்டுக்கே இலவசமாக அனுப்புவதால் இதை விற்க முயற்சி செய்யாதீர்கள்.அது போல் தேவைக்கு அதிகமாகவும் ஆர்டர் செய்யவேண்டாம்.பலர் சேர்ந்து ஒரே ஆர்டர் கொடுத்தால் அனுப்புவருக்கும் சுலபமாக இருக்கும் அவரும் அனாசியமாக செலவு செய்யவேண்டாம் அல்லவா?
லைவ் சிடி தரவிறக்கம் செய்ய இங்கே போகவும்
லினக்ஸில் பலவிதம் இருப்பதை போல அதை நிறுவக்கூடிய கனிணியை பிராசசரை பொருத்து எந்த விதமான வட்டை ஆர்டர் பண்ணவேண்டும் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.
1.X86-கனிணிகள்-பொதுவாக 64 பிட் பிராசசர் தவிர எல்லா இன்டெல் பிராசசர் கனிணிகளுக்கும் பொருந்தும்.
2.AMD-பிராசசர் உள்ள கனிணிக்கு,
3.PPC-என்று சொல்லப்படுகிற Macintosh கனிணிக்கு உகந்தது.
எதை நீங்கள் தரவிறக்கம் செய்யப்போகிறீர்களா அதையும் இந்த முறையிலேயே இறக்கம் செய்துகொள்ளுங்கள்.
சரி வட்டு இப்போது உங்கள் கையில்.
முதலில் லைவ் சிடியை பார்ப்போமா??
இரு இரு!!??
எல்லாமே இலவசம் ஆதனால் எல்லாவற்றையும் எழுத்திலேயே போடலாம் என்று பார்கிறாயா?
கொஞ்சம் படம் போட்டு சொல்லு,புரியமாதிரி இருக்கும்,என்கிறீர்களா?
அதுவும் சரி ஆனா அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டும்.
7 comments:
இலவசமுன்னதும் என்னன்னு வந்து பார்த்தேன்.
ஹனுமான் ச்சாலீஸா இருக்கு பாருங்க,
அதை ஒரு சிடியாக்கி இலவசமா அனுப்புறாங்க ஹாங்காங்கிலெ இருந்து. வீட்டுக்கெ வருது.
பாட்டுங்க எல்லாம் அட்டகாசமா இருக்கு. ஹரிஹரன் பாடுனது.
எங்கங்க இருக்கு-ஒரு லிங்க் போட்டிருக்கலாமே?
நான் ஒரு தடவை வீட்டில் இதைப்பாவித்தேன் தமிழை அப்போது அவ்வளவாக ஆதரிக்கவில்லை. இந்தப் பதிப்பி்ல் எப்படி???
குமார்,
இலவசமா ஹனுமான் சாலிஸா
இங்கே பாருங்க.
அப்படி இது வேலை செய்யலேன்னா இருக்கவே இருக்கு காப்பி & பேஸ்ட்:-))))
http://www.hanuman.com/
நன்றி
உங்கள் நடை அசர வைக்குதுங்க.
நன்றி,தமிழ்நெஞ்சம்.
Post a Comment