Wednesday, August 23, 2006

லயிவ் சிடி

எல்லாம் இருக்கு ஏதோ பிரச்சனை என்றால் யாரை பார்ப்பது?

பக்கத்தில் தெரிந்தவர்களிடம் கேட்கவும் அல்லது உங்கள் குழுமத்தில் கேள்வி கேட்டு பதில் பெறலாம்.நீங்கள் உபயோகப்படுத்தும் லினக்ஸின் Forumயில் கேள்வி பதில்கள் கொட்டிக்கிடக்கின்றன.அள்ளிக்கீங்க.

எங்களால் அப்படி எல்லாம் தொப்புன்னு குதிக்கமுடியாது இன்னும் நிறைய சந்தேகம் இருக்கு அதனால் இதை கனிணியில் நிறுவாமல் முயற்சி செய்து பார்க்கமுடியாதா??

முடியுங்க!! அதற்கு வேண்டியது உங்களிடம் உள்ள கனிணியில் CD rom மட்டும் தான்.
லினக்ஸ் சிலவற்றில் "லைவ் சிடி"என்று ஒன்று கொடுக்கிறார்கள் இதுவும் தறவிரக்கம் செய்துகொள்ளலாம்.ஓரே ஒரு சிடி அளவுக்கு இருக்கும்.ISO ·யில் கிடைக்கும் பட்சத்தில் அதை சிடி எழுத்தர் மூலம் பூட்டபிள் சிடியாக எழுதிக்கொள்ளவும்.

அடுத்து உங்கள் BIOS ஐ முதல் பூட் ஆப்ஷனை சிடிக்கு மாத்திக்குங்க.அதென்னங்க BIOS?

சரி தெரியாதவங்களுக்கு..

BIOS என்பதற்கான முழு விளக்கம் Basic Input Output System--ஆதாவது கனிணி ஆரம்பிக்கும் போது எதையதை பார்க்கவேண்டும் எங்கே தேடவேண்டும் மற்றும் எது முதலில் துவங்க வேண்டும் என்ற நியதி எழுதப்பட்டிருக்கும் இடம்.

இதில் பூட் ஆப்ஷன் என்று ஒன்று இருக்கும் அதில் போய் முதல் பூட்டுக்கு சிடியை பாரு என்று மாத்திவிட்டு மறக்காமல் சேமித்து வெளியேறிவிடுங்கள்.

நிறுத்து நிறுத்து..

முதலில் உள்ளே போகவே வழியை சொல்லவில்லை அதற்குள் வெளியேறும் வழியை சொல்ற?

மன்னிக்கனும்.

உள்ளே போற வழி!

ஒவ்வொறு கனிணிக்கும் ஒரு கீ.கனிணி பூட் கும் போது Esc அல்லது F2 அல்லது F10 கீயை விட்டுவிட்டு தட்டிக்கொண்டிருந்தால் இந்த Bios ஸ்கீரீன் வரும்.உங்க சுட்டி வேலை செய்யாததால் ஏரோ மற்றும் பேஜ் மேலே கீழே கீகளை உபயோகித்து மாற்றங்கள் செய்து,சேமித்து வெளியேறுங்கள்.மற்றவற்றில் கைவைத்து சூடு பட்டுக்கொள்ளாதீர்கள்.

சரி அப்புறம்?

வாங்க அடுத்த பதிவுக்கு.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

மா சிவகுமார் said...

குமார்,

நல்ல முயற்சி. நானும் உங்களைப் போல 2000ம் ஆண்டு வாக்கில் விண்டோசு 95லிருந்து லினக்சுக்குத் தாவியவன். உங்கள் அனுபவங்களையும், திறந்த நிரல் மென்பொருள் பயன்பாடுகளையும் தொடர்ந்து எழுதுங்கள். பலருக்குப் பலனளிக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

நன்றி சிவகுமார்
இது பலருக்கும் பலவிதங்களில் உபயோகப்பட்டுக்கொண்டிருக்கிறது.
நான் கடந்த தூரம் மிக குறைவு.
என்னுடைய அனுபவத்திலிருந்து மேலும் யாராவது உபயோகப்படுத்தி மேம்படுத்தினால் நம் சமூகத்துக்கு நல்லது தானே?
பார்ப்போம்.

- உடுக்கை முனியாண்டி said...

முக்கியமான ஒரு விசயத்தை தொட்டிருக்கிறீர்கள். நான்கு ஐந்து பத்தி என்று இல்லாமல் விரிவாக எழுதலாமே. ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க முனியாண்டி
நிச்சயமாக எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி.

ரிஷி (கடைசி பக்கம்) said...

குமார்!

நன்று!! எனக்கு ரொம்ப நாளாக இருந்த சில சந்தேகங்கள் நீங்கியது.

எனக்கு விண்டோஸும் வேண்டும் லினக்ஸும் வேண்டும் என்றால் என்ன செய்வது?.

என்னிடம் போர்ட்டபிள் ஹார்ட் டிரைவ் உள்ளது. அதில் நீங்கள் கொடுக்கும் லினக்ஸை வைத்துக்கொண்டு என்னால் உபயோகப்படுத்தமுடியுமா?.

நானும் சிங்கை வாசிதான்.

வடுவூர் குமார் said...

முடியும் என்றே தோன்றுகிறது.எங்கோ படித்த ஞாபகம்.
BIOS இல் USB பூட் ஐ Enable பண்ணி முயற்சிக்கவும் அதற்குள் நான் பார்த்த அந்த பேஜ் கிடைத்தால் போடுகிறேன்.
நீங்களும் சிங்கைவாசியா? வருக வருக.
நன்றி

Tech Shankar said...

எனது கணினியில் Delete கீயை அடித்தால் BIOSக்கு செல்கிறது.

வடுவூர் குமார் said...

அங்கு பூட் க்கு போய் முதல் பூட்டை வட்டுக்கு மாற்றிவிட்டு சேமித்து(F10),வெளியேறி கணினியை ஆரம்பிங்க. இப்ப பாருங்க லயிவ் சிடியில் இருந்து பூட் ஆகும்.