Wednesday, August 16, 2006

லினக்ஸ் 1

முந்தய அனுபவங்கள் 1,2

Win95 யில் ஆரம்பித்து ஒரளவு தேர்ச்சி பெற்ற பிறகு கையை வைத்துக்கொண்டு சும்மாக இருக்கமுடியாமல் என்ன செய்வது என்று அலைந்துகொண்டிருந்த காலத்தில் கண்ணில் பட்டதுதான் லினக்ஸ்.

இதைப்பற்றி இங்கு செவ்வாய் தோறும் வரும் கம்பியூடர் டைம்ஸ்சில் அவ்வப்போது வரும் படைப்புகளை படித்தது தான்.வேறெந்த அநுபவமும் இல்லை.

மிக முக்கியமாக சொல்ல வேண்டியது நான் கனிணி வல்லுனர் அல்ல அவ்வப்போது கண்ணில் படுகிற காதில் விழுகிறதை வைத்து முட்டி மோதி தெரிந்து கொள்கிற சாதாரன ஆள்.

இந்த மாதிரி சமயத்தில் ஒரு நாள் நூலகத்தில் மேய்து கொண்டிருக்கும் போது "ரெட் ஹேட் 7" லினக்ஸ் என்று கண்ணில்பட்டது.சில பக்கங்களை புரட்டியதும் ஒரளவு புரிந்தது.சரி முயற்சிக்கலாம் என்று புத்தகத்தையும் வட்டையும் வாங்கிக்கொண்டு வந்தேன்.

அப்போது என்னுடைய கனிணியில் முக்கியமான கோப்புகள் எதுவும் இல்லாததால் இந்த மாதிரி முயல எந்த வித தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தேன்.

ஆமாம் விண்டோஸ் நல்லா இருக்கும் போது இதை எதுக்கு உபயோகப்படுத்தனும்?
ஞாயமான கேள்வி தான்.

இதுக்கு விடை வரும் பதிவுகளில் காணலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Tech Shankar said...

ஒவ்வொரு பதிவாக பழையதில் இருந்து படிக்கத் துவங்கிவிட்டேன்.

உங்கள் அனைத்துப் பதிவுகளையும் படிச்சுட்டுதான் இனி மறுவேலை.

வடுவூர் குமார் said...

நன்றி,தமிழ்நெஞ்சம்,உபயோகமாக இருந்தால் மற்றவர்களிடமும் சொல்லவும் அல்லது நீங்களே இன்னும் விளக்கமாக எழுதலாம்.இது எழுதி சில வருடங்களாகிவிட்டது அதனால் தகவல்கள் அப்படியே பொருந்துமா என்ற சந்தேகமும் இருக்கிறது.