Thursday, February 18, 2010

USB இணைய இணைப்பு

லினக்ஸுக்கு USB என்றாலே ஆகாது போல் இருக்கு பல முறை சில வன்பொருட்களை வேலைசெய்ய வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.பொருமை இருந்தால் கவனமுடன் பிரச்சனைகளை அலசினால் வெற்றி பெறலாம் என்பதற்கு இது ஒரு சான்று.

மஸ்கட்டில் இணைய இணைப்பு பெரும்பாலான மக்கள் Nawras அல்லது Omantel ஐயே நம்பி இருக்கவேண்டியுள்ளது.நவ்ராஸூம் ஓமன்டெல் மூலமே இணைய இணைப்பை வழங்குவதாகவே தெரிகிறது.பல வித இணைப்புகள் இருந்தாலும் நான் தேர்தெடுத்து என்னுடைய அலைபேசி மூலம் ஏற்படுத்திக்கொடுக்கும் இணைய இணைப்பை தான்.இரண்டு நாளுக்கு இரண்டு ரியால்.2 GB அளவு மட்டுமே உபயோகிக்க முடியும்.இணைப்பு Wireless மூலம் கொடுக்கப்படுகிறது.

வின்டோசில் அலைப்பேசி மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்தி உபயோகிக்கும் போது என்ன தான் அலைபேசி மோடமாக செயல்பட்டாலும் இணைப்பின் வேகம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.இந்நிலையில் என் அலுவலகத்தில் இருப்போர் USB Dongle என்று சொல்லப்படுகிற வகை வன்பொருளை கொண்டு இணைய இணைப்பை ஏற்படுத்தி உபயோகித்திக்கொண்டிருப்பதை பார்த்தேன்.அவர்கள் சிம் கார்டை அதில் சொருகி அதன் மூலம் இணைப்பை கொண்டுவந்தனர்.அதை பார்த்த போது அதன் மேல் Oman Mobile என்று போட்டிருந்தது.என்னுடைய அலைப்பேசி Nawras என்பதால் அதை நான் உபயோகப்படுத்த முடியாது என்று நினைத்திருந்தேன் அதனால் நான் அதை வாங்கவும் இல்லை.என்ன தான் Nawras அதே வன்பொருளை 69 ரியாலுக்கு விற்றாலும், விலை அதிகம் என்பதால் அலைபேசியை மோடமாகவே உபயோகித்து வந்தேன்.இந்நிலையில் என்னுடன் வேலை பார்த்தவர் சிங்கப்பூர் திரும்புவதால் அந்த Dongle சும்மாகவே கிடந்தது.அதை ஒரு நாள் என்னுடைய வின்டோசில் போடு ஆராய்ந்துகொண்டிருக்கும் போது அதற்கு தேவையான டெலிபோன் எண் (*99#) மற்றும் APN முகவரியை கொடுத்தால் எந்த அலைபேசி இணைப்பையும் ஏற்படுத்தலாம் என்பதை தெரிந்துகொண்டேன்.இது தான் ஆதார சுருதி.

இதற்கிடையில் என்னுடைய சோனி எரிக்சன் முலம் உபுண்டுவில் தேவையான மாறுதலை செய்துகொண்டு மேம்படுத்திக்கொண்டிருந்தேன்.ஒரே ஒரு மேம்பாடு (WICD) எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப்போட்டு இணைய இணைப்பே இல்லாமல் செய்துவிட்டது.எல்லா இடங்களில் சொல்லப்பட்ட செயல் முறைகளை செய்துப்பார்த்து சோர்ந்துவிட்டேன்.கொஞ்ச நாள் இந்த பக்கமே வராமல் இருந்துவிட்டாலும் அவ்வப்போது சும்மா கிடக்கே என்று திரும்பவும் தேடுதலை ஆரம்பித்தேன்.

நான் செய்ததெல்லாம் இது தான்.

1.என்னுடைய WVdial கோப்பை மாற்றி அமைத்தேன்.
2.Wicd ஐ தூக்கிவிட்டு Network Manager ஐ நிறுவினேன்.
3.Kernal ஐ மேம்படுத்தினேன்.

அதன் பிறகு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.





முடிந்தது கதை.இந்த பதிவு கூட இதன் மூலம் கிடைத்த இணைய இணைப்பில் தான்.இந்த Network Manager ஏதும் வேலை செய்கிறதா என்று தெரியவில்லை.பாருங்கள் 2 மாத இணைப்பு என்று காண்பிக்கிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...