Wednesday, May 21, 2008

தமிழ் எழுத்துரு பிரச்சனை

உபுண்டு 8.04 க்கு மாறிய பிறகு தமிழ் எழுத்துக்கள் அதுவும் தமிழ்மணம் தெரிவதில் பிரச்சனை இருப்பதாக போன பதிவில் எழுதியிருந்தேன்.

சில நாட்கள் கழித்து சாரங்கன் இதற்கு மாற்று வழி இருப்பாதகவும் அதைப் பற்றி எழுதியிருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

அவர் சொன்னபடி செய்து பார்த்தால் ஜிஎடிட்டில் நன்றாக தெரியும் எழுத்து தமிழ்மணத்தில் கொஞ்சம் கலங்கலாகத் தான் தெரிகிறது.

கீழே உள்ள படத்தில் பார்க்கவும்...



சாரங்கன் வேறு வழி எதுவும் இருக்கா?

நன்றி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, May 04, 2008

உபுண்டு 8.04

ஊருக்கு போய் வந்த பிறகு உபுண்டுவை திறந்த போது மென்பொருள் மேம்படுத்தல் ஞாபகமூட்டலில் உபுண்டு புதிய பதிவு இருப்பதாகவும், மேம்படுத்தலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தது.

ஏற்கனவே சூடுபட்டுக்கொண்ட நிகழ்வை இங்கு சொல்லியிருந்தேன்,இருந்தாலும் Software Updater மூலமே செய்துபார்க்கலாம் என்று அனுமதியளித்தேன்.பாதி வரை போய் அதன் பிறகு இணைய இணைப்பில் நேர்ந்த கோளாறினால் அப்படியே நின்று போயிருந்தது. தலை வலி ஆரம்பம் ஆனது.

இணைய இணைப்பு விட்டுப்போனது,எங்கு பிரச்சனை என்று ஆராய மனதில்லை. உடனே வின்டோஸுக்கு மாறி உபுண்டு 8.04 பதிவை தரவிரக்கினேன். சுமார் 45 நிமிடங்களுக்குள் 698 MB முடிந்தது. அதன் பிறகு வட்டில் எழுதி, நிறுவளை ஆரம்பித்தேன். என்னுடைய Boot Loader வரும்போது மட்டும் ஜாக்கிரதையாக இருந்து தேவைப்பட்ட இடத்தில்போட்டேன். இந்த முறை நிறுவும் போதே கம்பியில்லா இணைய இணைப்பை அதுவே தெரிந்துகொண்டது மிகவும் ஆறுதலாக இருந்தது. போன முறையில் இதற்காக மிகவும் போராட வேண்டியிருந்தது.

எல்லாம் ஒரு வழியாக முடிந்து திரை கீழே உள்ள மாதிரி திறந்தது.



திரையே அட்டகாசமாக இல்லை!!

முதலில் தமிழை தெரிய வைக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்தேன், ஆதாவது மொழிக்காக உள்ள இடத்துக்குப் போய் தமிழை தேர்ந்தெடுத்து தேவையானவற்றை நிறுவிக்கொண்டேன்,

அதன் பிறகு இணையத்துக்குப் போய் தமிமணத்துக்குள் போனால் இப்படித்தான் தெரிகிறது.எழுத்துக்கள் சிரியதாக.



முகப்பு பக்கம் மட்டுமே இந்த பிரச்சனை,தொடுப்புகளை சொடுக்கினாள் எவ்வித பிரச்சனையில்லாமல் எழுத்து நன்றாகவே தெரிகிறது.

மீதமுள்ள மென்பொருட்களை ஒவ்வொன்றாக சோதித்துக்கொண்டு வரும் நேரத்தில் நம்ம மயூரேசன் எழுதிய totem movie player யில் யூடியூப் படங்களை பார்க்கலாம் என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. அங்கு போய் அதில் சொல்லியிருந்தபடி நிறுவியவுடன் ஏற்படும் மாற்றங்களை கீழே பாருங்கள்.



கமலின் பேட்டி..



ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை....



தமிழியிலேயே தேடமுடியும் அதோடு வீடியோ தரமும் அருமையாக இருக்கு.

இணைய இணைப்புக்கு மாத்திரம் ஒவ்வொரு தடவையும் கடவுச்சொல் அடிக்கவேண்டியிருப்பது போன்ற சில நச்சு வேலைகள் இருப்பதை தவிர பெரிய தொந்தரவு கண்ணில் படவில்லை.

ஏதாவது ஒரு விண்டோவை மூடும் போது 3D முறையில் அழகாக மூடுகிறது.

முடிந்தால் முயற்சித்து பாருங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...